Search
  • Follow NativePlanet
Share
» »படிக்கட்டுகள் இல்லாத 5 மாடி அரண்மனை, 1000 ஜன்னல், அடித்தளம் இல்லை – பெண்களுக்காக கட்டப்பட்ட அரண்மனை!

படிக்கட்டுகள் இல்லாத 5 மாடி அரண்மனை, 1000 ஜன்னல், அடித்தளம் இல்லை – பெண்களுக்காக கட்டப்பட்ட அரண்மனை!

இளஞ்சிவப்பு நகரமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அதன் சமஸ்தான அரண்மனைகள் மற்றும் அழகிய கோட்டைகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. அவற்றில் ஒன்று கட்டிடக்கலை அதிசயமான ஹவா மஹால். நுட்பமான முறையில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் படிக்கட்டுகளே இல்லையாம், அத்துடன் 1000 ஜன்னல்களுக்கு மேல் உள்ளதாம், 5 மாடி அரண்மனையை எழுப்ப அடித்தளமே போடவில்லையாம்!

ஜெய்ப்பூரின் தனித்துவமான அடையாளம்

ஜெய்ப்பூர் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவதும் இந்த மஹால் தான்! இது அரண்மனையா இல்லை கோட்டையா என்று கூட தெரியாமல் நாம் இந்த மஹாலின் படத்தை பல இடங்களில் பார்த்து இருப்போம். ஆம்! இது தான் ஹவா மஹால், ஜெய்ப்பூரின் தனித்துவமான அடையாளமான இது பேலஸ் ஆஃப் தி விண்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

jaipurhawa1

கேத்ரி மஹாலின் மாதிரி

ஜெய்ப்பூரை உருவாக்கிய மகாராஜா சவாய் ஜெய் சிங்கின் பேரனான கச்வாஹா ராஜபுத்திர ஆட்சியாளரான சவாய் பிரதாப் சிங், ராயல் சிட்டி பேலஸ்க்கு பிறகு ஹவா மஹாலை 1799 இல் கட்டினார். ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் உள்ள கேத்ரி மஹாலின் அமைப்பைப் பார்த்து வியந்த மகாராஜா அதனைப் போலவே ஒரு மாதிரியை கட்ட முடிவு செய்து இந்த ஹவா மஹாலை உருவாக்கினார்.

பெண்களுக்காக கட்டப்பட்ட அரண்மனை

அந்த நாட்களில், ராஜபுத்திரர்கள் பர்தா முறையைப் பின்பற்றினர், அரச பெண்கள் பொதுமக்கள் முன் தோன்றுவதில்லை. அவர்கள் அன்றாட நிகழ்வுகளைப் பின்பற்ற விரும்பியதால், பெண்களிடையே சுதந்திர உணர்வை வழங்குவதற்காக ஹவா மஹால் 953 சிறிய ஜன்னல்களோடு திரையிடப்பட்ட பால்கனிகளுடன் கட்டப்பட்டது.

அடித்தளமும் இல்லை படிக்கட்டுகளும் இல்லை

ஐந்து மாடிகள் கொண்ட இந்த அழகிய அரண்மனை அடித்தளம் போட்டு கட்டப்படவில்லையாம் தெரியுமா. அதே போல இதில் படிக்கட்டுகளும் இல்லையாம். சறுகலான பாதைகள் மட்டுமே மஹாலுக்குள் இருக்கிறது. அதன் வழியே தான் கீழே இருந்து மேலே செல்ல வேண்டும்.

hawamahalcover

கோடையிலும் குளிர்

ராஜஸ்தான் என்றாலே அனைவர்க்கும் சூடான வானிலை தான் நினைவுக்கு வரும். மாறாக இந்த ஹவா மஹாலில் மட்டும் கோடையிலும் கூட மிதமான குளிர் இருப்பதாக அந்த ஊர் மக்கள் கூருகின்றனர். இதற்குக் காரணம், 953 சிறிய ஜன்னல்கள் வழியாக குளிர்ந்த காற்று உள்ளே வந்து அந்த இடத்தை குளிர்ச்சியாக்குகிறது.

ஆகாஷ் படால் ஜாலி

ஹவா மஹாலின் உள்ளே ஆகாஷ் படால் ஜாலி (கிரில்) என்று அழைக்கப்படும் கிரில் உள்ளது. இந்த கிரில்லில் இருந்து, ஒருவர் உள்ளே இருந்து வெளிப்புறக் காட்சியைப் பார்க்க முடியும், ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாது.

தங்குவதற்கு உருவாக்கப்படவில்லை

ஹவா மஹால் தங்குவதற்காக உருவாக்கப்படவில்லை.. மாறாக அரச குடும்பப் பெண்கள் சில விசேஷ சமயங்களில் மட்டும் இங்கு வந்து ஜன்னல்களில் இருந்து அவர்களைப் பார்க்கிறார்கள். ஹவா மஹாலுக்கு அருகில் உள்ள சிட்டி பேலஸிலிருந்து அரச பெண்கள் தங்கள் பெண் வேலையாட்களுடன் இங்கு வருவது வழக்கம்.

hawamahal

இஸ்லாமிய, முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலை

ஜெய்ப்பூரில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றான ஹவா மஹால், இஸ்லாமிய, முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலை பாணிகளின் அற்புதமான கலவையைக் கொண்டுள்ளது. அதன் குவிமாடம் கொண்ட விதானங்கள், மலர் வடிவங்கள், தாமரை உருவங்கள் மற்றும் புல்லாங்குழல் தூண்கள் அனைத்தும் வளமான ராஜபுத்திர பாணியை பிரதிபலிக்கின்றன.

தனித்துவமான பிரமிடு வடிவம்

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்களால் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை பிரமிடு வடிவத்தைக் கொண்டுள்ளது. ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனை, 50 அடி உயரத்தில் அழகாக வீற்றிரிக்கிறது. சவாய் பிரதாப் சிங் பகவான் கிருஷ்ணர் மீது அதீத பற்று கொண்டிருந்தமையால், இறைவனின் கிரீடத்தை போலவே அரண்மனையை கட்டமைத்தார்.

பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை

அரண்மனையின் உட்புறங்கள் தூண்கள் கொண்ட அறைகள் மற்றும் மேல் தளம் வரை அடையும் குறைந்தபட்ச அலங்காரமான தாழ்வாரங்களைக் கொண்டுள்ளது. உள் முற்றம் முதல் மற்றும் இரண்டாவது தளங்களின் முன் பகுதியை அலங்கரிக்கிறது. கீழ் இரண்டு தளங்களைப் போலல்லாமல், மேல் மூன்று தளங்களும் ஒரு அறைக்கு மேல் இல்லாத அகலத்தைக் கொண்டுள்ளன. கட்டிடத்தின் முற்றத்தின் மையத்தை அலங்கரிக்கும் நீரூற்றுகள் உள்ளன.

இத்தகைய அதிசயங்களைக் கொண்ட ஹவா மஹாலை நீங்கள் பார்த்தது உண்டா?

More News

Read more about: rajasthan travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+