» »இதுவரை பார்க்காத, மறக்க முடியாத ஒரு பயணம் போகனும்னு ஆசையா?

இதுவரை பார்க்காத, மறக்க முடியாத ஒரு பயணம் போகனும்னு ஆசையா?

Written By: R. SUGANTHI Rajalingam

உங்களுக்கு குறைந்த செலவில் ஒரு பெரிய ஆச்சர்யமூட்டும் பயணம் வேண்டுமா? இது ஒரு சிறிய பயணமாகத்தான் இருக்க போகிறது ஆனால் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாகவும் இது இருக்கும்.ஏரிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், வளைந்து செல்லும் சாலைகள், நீல வானம், சிறியதாக தெரியும் வீடுகள், பறவைகள், பசுமை, பூக்கள் மற்றும் மன அமைதி என்று உங்கள் வார விடுமுறை நாட்களை என்றாவது கொண்டாடி இருக்கீங்களா? ஆமாங்க இது எல்லாம் சேர்ந்த இயற்கை எழிலான இடம் தான் இந்த அவலபெட்டா மலை. நம்ம பெங்களூரில் இருந்து இரண்டே மணி நேர பயணம் தான். இது மிகவும் புகழ்பெற்ற நந்தி மலைக்கு அருகில் தான் அமைந்துள்ளது. ஆனால் நந்தி மலையை போல் இல்லாமல் அமைதி சூழல் வாய்ந்த இடம். அப்போ நீங்க ரெடியா வாங்க இப்பவே ஒரு பயணம் போகலாம்.

அவலபெட்டா செல்லும் வழி

அவலபெட்டா செல்லும் வழி

முதலில் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொண்டு ஏலகங்காவிலிருந்து தேவனஹாலி என்ற ஊரை சந்திக்க வேண்டும். அப்படியே பெரேசந்த்ராவிலிருந்து பிரிந்து இடது பக்க பயணம் மேற்கொண்டால் சிக்கபள்ளாபூர் உங்களை வரவேற்க தயாராகுகிறது. அங்கிருந்து ரெட்டிகோலாவாரஹாலி என்ற இடம் வரும். இந்த பயணம் 16 கி. மீ ல் அவலபெட்டாவை அடைந்து விடுகிறது. பெங்களுரில் இருந்து அவலபெட்டாவை அடைய இதுவே சுலபமான வழியாகும். பயணத்தின் போது சிக்கபள்ளாபூர் இரு சாலையோங்களிலும் பசுமையை காண முடிகிறது.

சரி வாங்க இதன் அழகை போட்டோ பயணத்தின் மூலம் காணலாம்.

Photo Courtesy: Akshatha Vinayak

பரந்த மேகமூட்டம்

பரந்த மேகமூட்டம்

நீண்ட நெடுஞ்சாலையில் சில்லென்ற காற்றில் இருள் சூழ்ந்த மேகமூட்ட பயணம் கண்டிப்பாக உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். ஏலகங்காவிலிருந்து தேவனஹல்லி செல்லும் போது கூடிய மேக மூட்டம்

Photo Courtesy: Akshatha Vinayak

நகரும் மலைத்தொடர்கள்

நகரும் மலைத்தொடர்கள்

நீங்கள் பெங்களுரிலிருந்து அவலபெட்டாவிற்கு செல்லும் போது உங்களை ரசிக்க வைக்கும் மற்றொரு விஷயம் மலைத்தொடர்கள். இந்த மலைத்தொடர்களும் உங்களுடன் மறக்காமல் பயணம் மேற்கொள்ளுகின்றன. நந்தி மலையையும் இந்த பயணத்தில் நீங்கள் காணலாம்.

Photo Courtesy: Akshatha Vinayak

வரவேற்கும் மரங்கள்

வரவேற்கும் மரங்கள்

பெரேசந்த்ராவிலிருந்து பிரிந்து சிக்கபள்ளாபூரை அடைந்ததும் அழகிய குடிசை வீடுகள், பசுமை நிலங்கள், தொங்கி படரும் திராட்சை கொடிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள் எல்லாம் உங்களின் புதுமை பயணத்தை வரவேற்க தயாராகுகின்றன.

Photo Courtesy: Akshatha Vinayak

வழி அறிதல்

வழி அறிதல்

பெரேசந்த்ரா வரை அவலபெட்டாக்கு எந்த வித வழி காட்டும் பலகையும் இருக்காது. இடது பக்கம் திரும்பி பயணம் மேற்கொள்ளும் போது வழி காட்டும் பலகை இருக்கும் அல்லது உங்கள் போனில் உள்ள மேப்பை பயன்படுத்தியும் அவலபெட்டாவிற்கு சென்று விடலாம்.

Photo Courtesy: Akshatha Vinayak

 ஹாட் பகுதி

ஹாட் பகுதி

2 அல்லது 3 வளைப் பின்கள் காணப்படும். அதை கடந்தால் மலையின் உச்சியை அடைந்து விடலாம்.

Photo Courtesy: Akshatha Vinayak

மழையின் நுழைவாயில்

மழையின் நுழைவாயில்

அவலபெட்டா தேனுகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு இந்து யாத்திரை இடமாகவும் உள்ளது.

Photo Courtesy: Akshatha Vinayak

மலையேறுதல்

மலையேறுதல்

இங்கிருந்து உங்கள் மலையேறும் பயணம் ஆரம்பிக்கிறது. ரெம்ப கஷ்டமான பாதை இல்லாமல் ஏறிவதற்கு படிக்கட்டுகள் உள்ளன. முதலில் நீங்கள் பார்க்க போவது நரசிம்ம சுவாமி கோயில் தான்.

Photo Courtesy: Akshatha Vinayak

குரங்கு அட்டகாசம்

குரங்கு அட்டகாசம்

நீங்கள் மலையேறி முடிந்ததும் நிறைய குரங்குகளையும் பார்க்கலாம். உங்களுடன் சேர்ந்து அதுவும் விளையாடும். என்ன உங்கள் உணவு பண்டங்களை பத்திரமாக வைத்து கொள்வது நல்லது.

Photo Courtesy: Akshatha Vinayak

திண்பண்டங்கள்

திண்பண்டங்கள்

நீங்கள் நரசிம்ம சுவாமி கோயிலை அடைவதற்கு முன்னாடியே வெள்ளரிக்காய் மற்றும் காரசாரமான சூர்முரி போன்றவைகள் விற்கப்படுகின்றன. வாங்கி சாப்பிட்டுகிட்டே உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். மறக்காமல் குரங்கிடம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

Photo Courtesy: Akshatha Vinayak

லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில்

லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில்

நரசிம்ம சுவாமி சுண்ச்லஷ்சுமியை திருமணம் செய்து கொண்ட இடம். ஒரு நாள் லஷ்மி தேவி அவரிடம் கோபம் கொண்டு மலையின் மேல் அமர்ந்து விட்டதால் இந்த கோயிலும் மலையின் மீது அமைந்துள்ளது.

Photo Courtesy: Akshatha Vinayak

தேனுகிரி

தேனுகிரி

அவலபெட்டா மலை தேனுகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தேனு என்பதற்கு காமதேனு அதாவது பசு மாடுகளை குறிக்கிறது. இங்கே நிறைய பசு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. எனவே இந்த மலை மாடுகள் நிறைந்த மலையாகவும் காணப்படுகிறது.

Photo Courtesy: Akshatha Vinayak

வசீகரிக்கும் குளம்

வசீகரிக்கும் குளம்

நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அடுத்த படியாக நாம் பார்ப்பது ஒரு குளம். இந்த குளம் தான் அவலபெட்டாவின் தனி பேரழகு ஆகும். காற்றில் அசைந்தோடும் இந்த நீரோடையை பார்க்கும் போது கண்டிப்பாக நீங்கள் மெய்மறந்து கால் நனைப்பீர்கள்.

Photo Courtesy: Akshatha Vinayak

பார்க்கும் படலம்

பார்க்கும் படலம்


அவலபெட்டா மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது சுற்றி பரந்து விரிந்துள்ள மலைகள், அடுக்கடுக்கான வீடுகள், நீளமான சாலைகள், மேகமூட்டம், பசுமை என்று ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ஓரே இடத்தில் நீங்கள் காணலாம்.

Photo Courtesy: Akshatha Vinayak

தொட்டு கொண்டிருக்கும் பாறை

தொட்டு கொண்டிருக்கும் பாறை

குளத்தை அடுத்து நம்மை ரெம்பவே கவரக் கூடியது அங்கே தொட்டு கொண்டு நீட்டிருக்கும் பாறை ஆகும். இந்த நீட்டிருக்கும் பாறையின் நுனியில் நின்று கொண்டு இயற்கை யை ரசிப்பது அழகாக இருந்தாலும் அபாயகரமானதும் கூட. ஆனால் இருப்பினும் இதன் நுனியில் நிறைய பேர்கள் அமர்ந்து செல்ஃபி எடுத்து தங்கள் ஆசையை தீர்த்து கொள்ளத்தான் செய்கின்றனர்.

Photo Courtesy: Akshatha Vinayak

தள்ளும் காற்று

தள்ளும் காற்று

இந்த மலையின் உச்சியில் நம்மளாள சமாளிக்க முடியாத அளவிற்கு காற்றும் வீசிச் செல்கின்றன. எனவே தொட்டு பாறையில் நிற்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.

Photo Courtesy: Akshatha Vinayak

பஸ் பயண வழி

பஸ் பயண வழி

இந்த இடத்திற்கு உங்கள் நண்பர்களுடன் செல்ல விரும்பினால் தனி பேருந்து ஏற்பாடு செய்து செல்வது நல்லது. இல்லையென்றால் பெங்களூரில் இருந்து சிக்கபள்ளாபூர் சென்று அங்கிருந்து மன்டிக்கல்லுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். அங்கிருந்து 11 கிலோ மீட்டரில் அவலபெட்டாவை அடைந்து விடலாம்.

Photo Courtesy: Akshatha Vinayak

வசதிகள்

வசதிகள்


நீங்கள் ரெட்டிகோலாவாரஹாலியை அடைந்ததும் ஒரு ஹோட்டல் கூட கண்ணுக்கு தெரியாது. எனவே நெடுஞ்சாலையில் உள்ள நந்தினி உணவு விடுதியில் சாப்பிட்டு கொண்டு செல்வது நல்லது. அவலபெட்டா மலையில் வெள்ளரிக்காய் மற்றும் சூர்முரி மட்டும் தான் கிடைக்கும். குரங்கு இருப்பதால் பார்த்து சாப்பிட வேண்டியது இருக்கும்.

என்னங்க வாசிக்கும் பயணமே இன்பமாக இருக்குதா? இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க அவலபெட்டா சென்று ஹாய் சொல்லுங்க.

Photo Courtesy: Akshatha Vinayak

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்