Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரி செல்லும் பலரும் செய்யும் இந்த தவறை நீங்களும் செய்து விடாதீர்கள்

கன்னியாகுமரி செல்லும் பலரும் செய்யும் இந்த தவறை நீங்களும் செய்து விடாதீர்கள்

இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது கன்னியாகுமரி. ஆனால் கன்னியாகுமரி செல்லும் பலரும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, கடற்கரை, பகவதி அம்மன் கோவில், சன் செட் ஆகியவற்றை பார்த்து விட்டு திரும்பி வந்து விடுகிறார்கள். இதைத் தவிர கன்னியாகுமரியில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது. இப்படி கேட்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படி எல்லாம் இந்த தகவல் உங்களுக்கு தான்.

Lesser known Beautiful Tourist spots to visit in Kanyakumari

கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்பவர்கள் குறிப்பிட்ட இந்த ஒரு சில இடங்களை மட்டும் பார்த்து விட்டு வந்து விடுகிறார்கள். இது தான் கன்னியாகுமரி செய்யும் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு. இப்படி நினைத்து இங்கு பார்க்க வேண்டிய பல அற்புதமான இடங்களை பார்த்து ரசிக்க தவறிவிடுகிறார்கள். இந்த தவறை நீங்களும் செய்து விடாதீர்கள். இந்த விடுமுறைக்கு கன்னியாகுமரி சென்றால் இந்த இடங்களை அவசியம் பார்த்து விட்டு வாருங்கள். கன்னியாகுமரியில் நீங்கள் இதுவரை பார்க்க தவறிய இடங்களுக்கு எப்படி செல்லலாம் என வாங்க பார்க்கலாம்.

கன்னியாகுமரியில் இருந்து திரும்பும் போது அப்படியே இடது புறமாக குலைச்சல் செல்லும் சாலையின் பயணித்தால் 500 மீட்டருக்கு ஒரு குளம், ஒரு மீட்டருக்கு ஒரு ஆறு என இயற்கை காட்சிகள் ரசித்துக் கொண்டே இதமான பயணத்தை அனுபவிக்கலாம். அப்படியே அந்த பசுமையான இயற்கை காட்சிகளை ரசித்த படியே கடந்து அப்படியே சென்றால் குளச்சல் கடற்கரையை அடைந்து விடலாம். மிகவும் சுத்தமான, அதிகமான கூட்டம் இல்லாத அழகான கடற்கரை. அங்கிருந்து அப்படியே நேராக சென்றால்... சிறிது தூரத்திலேயே திற்பரப்பு அருவி வரும். அற்புதமாக குளித்து மகிழ, அழகாக போட்டோக்கள் எடுக்க ஏற்ற இடம்.

Lesser known Beautiful Tourist spots to visit in Kanyakumari

இந்த அருவிற்கு பின்னால் மகாதேவர் கோவில், அதுக்கு அருகிலேயே ஒரு ஆற்றுப்பாலம் வரும். ஆற்றுக்கு நடுவே இயற்கை அழகை ரசித்த படி இதில் நடந்து செல்லலாம். இங்கு குளிக்கவும் செய்யலாம். ஒருவேளை நீங்கள் குடும்பத்துடன் செல்கிறீர்கள், இங்கு கூட்டமாக உள்ளது குளிக்க முடியவில்லை என நீங்கள் நினைத்தால் அப்படியே சற்று தூரம் போனால் சித்தாறு ஏரி வரும். அங்கு செம ஜாலியாக, சூப்பரான ஒரு குளியலை போட்டுவிட்டு அப்படியே வந்தால், மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, ஆதிகேசவா கோவில், பேச்சிப்பாறை அணை என அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு கன்னியாகுமரியை சுற்றி அழகு நிறைந்த அற்புதமான இடங்கள் கொட்டி கிடக்கின்றன.

Lesser known Beautiful Tourist spots to visit in Kanyakumari

ஒருவேளை நீங்கள் கடற்கரை என்றால் நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 11 கி.மீ., பயணம் செய்தால் சங்குத்துறை கடற்கரை வரும். மிகவும் அழகான, அமைதியான ஒரு கடற்கரை. சுற்றுலா சென்று மகிழ்ச்சியுடன், அமைதியையும் அனுபவித்து விட்டு வர ஏற்ற இடம். அப்படியே அங்கிருந்து வெள்ளிமலை, கணபதிபுரம் வழியாக அரை மணி நேரம் பயணம் செய்தால் முட்டம் கடற்கரை வரும். கடலோர கவிதைகள் உள்ளிட்ட 1980களில் வெளிவந்த பல சினிமாக்களில் பார்த்த அதே கடற்கரை தான். மிக சுத்தமான, அமைதியான, மனதிற்கு இதம் தரும் ஒரு கடற்கரை. மிக குறைந்த அளவிலேயே மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் ஜாலியாக இருந்து விட்டு வரலாம்.

Lesser known Beautiful Tourist spots to visit in Kanyakumari

இவை எல்லாமே கன்னியாகுமரிக்கு மிக அருகில் உள்ள மிக முக்கியமான, பிரபலமான சுற்றுலா தலங்கள் தான். இது தவிர இன்னும் ஏராளமான இடங்கள் இங்கு உள்ளன. ஆனால் கன்னியாகுமரி செல்லும் 70 சதவீதம் சுற்றுலா பயணிகளுக்கு இப்படி ஒரு இடங்கள் இருப்பதே தெரியாது. ஆனால் இவ்வளவு அற்புதமான விஷயங்கள் கன்னியாகுமரியை சுற்றி உள்ளது. கன்னியாகுமரியில் இன்னும் பார்க்க வேண்டிய கோவில்கள், தேவாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள் ஏராளமாக உள்ளன. அடுத்த முறை கன்னியாகுமரி சென்றால் மிஸ் பண்ணாம இந்த இடங்களுக்கு ஒரு டிரிப் சென்று விட்டு வாருங்கள்.

More News

    Read more about: kanyakumari tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+