Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிகச்சிறந்த கேளிக்கை பூங்காக்களுக்கு செல்லலாமா?

இந்தியாவின் மிகச்சிறந்த கேளிக்கை பூங்காக்களுக்கு செல்லலாமா?

இந்தியாவின் மிகச்சிறந்த கேளிக்கை பூங்காக்களுக்கு செல்லலாமா?

இந்தியாவின் நகரங்களிலும், மாநகரங்களிலும் வாழ்பவர்கள் நகரம் என்பதை தாண்டி நரகத்தில் வாழ்வதுபோலத்தான் தினந்தோறும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அளவுக்கு இயந்திரத்தோடு இயந்திரமாகவே இன்றைய நவீன மனிதன் வாழ்கிறான். இதில் குழந்தைகள், பெரியவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லை. அதாவது பெரியவர்கள் மடிக்கணினியை கட்டிக்கொண்டு மாரடித்தால், குழந்தைகள் வீடியோ கேம்களில் மூழ்கிப்போகிறார்கள். இப்படியே ஒருநாள் நாம் ஒரு இயந்திர பொம்மையாகவே ஆகிப்போனாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இந்த இயந்திரத்தரமான வாழ்க்கையிலிருந்து நகர மக்களுக்கு விடுதலை அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் இன்றைய நவீன காலத்து கேளிக்கைப் பூங்காக்கள். இன்று பெரும்பாலும் எல்லா பெருநகரங்களிலும் கேளிக்கைப் பூங்காக்கள் உள்ளன. எனவே உங்கள் விடுமுறை நாட்களை இந்தப் பூங்காக்களில் குழந்தைகளோடும், நண்பர்களோடும் கொண்டாட மறக்காதீர்கள்.

வீகா லேண்ட், கொச்சி

வீகா லேண்ட், கொச்சி


கேரள மாநிலம் கொச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் பள்ளிக்கரா என்ற பகுதியில் வீகா லேண்ட் கேளிக்கைப் பூங்கா அமைந்துள்ளது. நிலம் மற்றும் நீரில் அமைந்த 40 வகையான கேளிக்கை சவாரி வகைகள் இங்கு உள்ளன. டிக்கெட்விலை : திங்கள்-வெள்ளி - பெரியவர்கள் : 460 ரூபாய், சிறியவர்கள் : 600 சனி&ஞாயிறு - பெரியவர்கள் : 360 ரூபாய், சிறியவர்கள் : 470 நேரம் : திங்கள்-வெள்ளி : காலை 11 முதல் மாலை 6 மணி வரை சனி&ஞாயிறு : காலை 11 முதல் மாலை 7 மணி வரை

official site

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

கொச்சியிலிருந்து வொண்டர்லா செல்ல கிட்டத்தட்ட 48 நிமிடங்கள் ஆகின்றது. இது 25கிமீ தூரத்தில் உள்ளது. இதற்கு அருகில் பள்ளிக்கரா எனும் புகழ்பெற்ற இடம் உள்ளது.

திருவனந்தபுரம் மெயில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் என நிறைய ரயில்கள் உள்ளன.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

மங்களவானம் பறவைகள் சரணாலயம், மட்டன்சேரி மாளிகை, கொச்சி கோட்டை, மலை மாளிகை அருங்காட்சியகம், கேரள போக்லூர் அருங்காட்சியகம் என எண்ணற்ற இடங்கள் இந்த இடத்துக்கு அருகே அமைந்துள்ளது.

 வொண்டர் லா, பெங்களூர் .

வொண்டர் லா, பெங்களூர் .


பெங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் அமைந்திருக்கிறது வொண்டர் லா கேளிக்கை பூங்கா. 82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கேளிக்கைப் பூங்கா பெங்களூர்-மைசூர் நான்கு வழிச் சாலையில் 1 மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது. நிலம் மற்றும் நீரில் அமைந்த 53 வகையான கேளிக்கை சவாரி வகைகள் இங்கு உள்ளன. மேலும் இசை நீரூரற்று, லேசர் ஷோ, வர்ச்சுவல் ரியலிட்டி ஷோ, எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஷவர்களுடன் கூடிய நடன மேடை போன்றவையும் இந்த பூங்காவில் அமையப்பெற்றுள்ளன. 1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கூட்ட அரங்கு, 1150 பேர் உட்காரக்கூடிய 5 ரெஸ்டாரெண்டுகள் இவற்றுடன் உடைமகளை வைப்பதற்கான 2350 லாக்கர்களும் இங்கு உள்ளன. டிக்கெட்விலை : திங்கள்-வெள்ளி - பெரியவர்கள் : 590 ரூபாய், சிறியவர்கள் : 460 சனி&ஞாயிறு - பெரியவர்கள் : 730 ரூபாய், சிறியவர்கள் : 540 நேரம் : திங்கள்-வெள்ளி : காலை 11 முதல் மாலை 6 மணி வரை சனி&ஞாயிறு : காலை 11 முதல் மாலை 7 மணி வரை

official site

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

பெங்களூருவிலிருந்து 2 மணி நேரம் பயண தூரத்தில் அமைந்துள்ளது. மஞ்சநாயகனாகனஹல்லி எனும் இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

சதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூர் சிட்டி சந்திப்பு, சீரடி எக்ஸ்பிரஸ், சாய் பி நிலையம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், மைசூரு எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

மந்திர் ஸ்கொயர் மால், உல்சூர் ஏரி, இனோவெட்டிவ் பிலிம் சிட்டி, கமர்ஷியல் தெரு, காளை கோயில், கப்பன் பூங்கா, ஹசரகட்டா ஏரி, லும்பினி பூங்கா, லால் பாக், பெங்களூரு அரண்மனை, பிரமிட் பள்ளத்தாக்கு, விதான, விகாச சௌதா என எண்ணற்ற இடங்கள் இருக்கின்றன.

பிளாக் தண்டர் தீம் பார்க், மேட்டுப்பாளையம்

பிளாக் தண்டர் தீம் பார்க், மேட்டுப்பாளையம்

கோயம்புத்தூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் அமைந்திருக்கிறது பிளாக் தண்டர் தீம் பார்க். இது கோயம்புத்தூரிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவிலும், ஊட்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது. 65 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த தீம் பார்க் 50-க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுகளை கொண்டுள்ளது. இங்கு 40 தங்கும் அறைகளை கொண்ட நீயூ பிளாக் தண்டர் ரிசார்ட் அமைந்திருப்பதால் இயற்கை சூழலில் ஓரிரு நாட்கள் தங்கி குதூகலமாக பொழுதை கழிக்கலாம். டிக்கெட்விலை : பெரியவர்கள் : 450 ரூபாய், சிறியவர்கள் : 400 நேரம் : காலை 10.00 முதல் மாலை 7 மணி வரை

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கோயம்புத்தூரிலிருந்து 1 மணிநேரத்துக்கும் சற்று அதிக நேரம் எடுக்கும் தூரத்தில் அமைந்துள்ளது பிளாக் தண்டர். சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தாதா எக்ஸ்பிரஸ், கோவா எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


மருதமலைக் கோயில், கோவைக் குற்றாலம், குழந்தை வேலாயுத சுவாமி கோயில், காரமடை ரங்கநாத ஆலயம், தியானலிங்க ஆலயம், புரூக்பீல்ட்ஸ் மால், பட்டீஸ்வரர் ஆலயம், சிங்காநல்லூர் ஏரி என நிறைய சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன.

எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டு

எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டு

சென்னை நகரத்தின் மிக நவீன பொழுதுபோக்கு சவாரி அம்சங்கள் நிறைந்த நவீன தீம் பார்க் பூங்காவான இந்த எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டு கிழக்கு கடற்கரைச்சாலையில் வி.ஜி.பி யுனிவர்சல் கிங்டம் பூங்காவை கடந்தபின் ஒரு சில கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. 1200 சதுர அடி பரப்பளவைக்கொண்ட ஒரு அலை நீச்சல் குளம் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சின்ன குற்றாலம் எனும் செயற்கை அருவியிலும் பார்வையாளர்கள் குளித்து விளையாடி மகிழலாம். ஏராளமான விளையாட்டு உபகரணங்களை கொண்டுள்ள இவ்வளாகத்தில் அக்வா ஸ்லைட், ஜிப்டிப், டொர்னாடோ, சின்ன குற்றாலம், வேவ் பூல், வாட்டர் பிளே ஸ்டேஷன் போன்றவை நீர்விளையாட்டு சம்பந்தப்பட்டவையாகும். இவை தவிர ஸ்பைடர் ஸ்பின், ரேஞ்சர், கிரேஸி பஸ், ஹேங் கிளைடர், வேவ் ஸ்விங்கர், டொர்னாடோ கோஸ்டர், ரெவொல்யூஷன், எம் எம் ரோலர் கோஸ்டர், ஜயண்ட் வீல், ஃப்ளையிங் டிரெய்ன் போன்ற சாகச சவாரி அம்சங்களும் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. 777 ரூபாய் கொண்ட ஸ்பெஷல் பேக்கஜ் (குழந்தைகளுக்கு ரூ555) டிக்கட் வாங்கினால் ஒட்டுமொத்தமாக எல்லா விளையாட்டுகளுக்கும் அனுமதி கிடைப்பதோடு கூடுதல் இலவசங்களும் வழங்கப்படுகின்றன. படம்

Off. site

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சென்னையிலிருந்து 1 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது எம்ஜிஎம் டிஸ்ஸீ வேர்ல்ட். அதிக பேருந்துகள் இயக்கப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது இந்த இடம்.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சிறுசேரி ஐடி பார்க், கோவளம் கடற்கரை, உப்பு ஏரி, புலி குகை, மாமல்லபுரம் ஆகிய சுற்றுலாத் தளங்கள் அருகாமையில் அமைந்துள்ளது.

எஸ்ஸல் வேர்ல்ட், மும்பை

எஸ்ஸல் வேர்ல்ட், மும்பை


இந்தியாவின் முதல் கேளிக்கைப் பூங்காவாக எஸ்ஸல் வேர்ல்ட் கேளிக்கைப் பூங்கா அறியப்படுகிறது. இந்தப் பூங்கா அடிப்படையில் கலிஃபோர்னியாயில் உள்ள டிஸ்னி லேண்டை பார்த்து, அதன் மாதிரி வடிவமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 64 ஏக்கர் பரப்பளவில் பரந்துகிடக்கும் இந்தப் பூங்காவில் மொத்தம் 30 சவாரிகள் உள்ளன. டிக்கெட் விலை : திங்கள்-வெள்ளி - பெரியவர்கள் : 610 ரூபாய், சிறியவர்கள் : 710 சனி&ஞாயிறு - பெரியவர்கள் : 480 ரூபாய், சிறியவர்கள் : 580 நேரம் : திங்கள்-வெள்ளி : காலை 11 முதல் மாலை 7 மணி வரை சனி&ஞாயிறு : காலை 10 முதல் மாலை 8 மணி வரை படம் : Sajeevkumarc

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

மும்பையிலிருந்து இரண்டு மணி நேரத்தொலைவில் அமைந்துள்ளது இந்த எஸ்ஸெல் வேர்ல்டு கேளிக்கைப் பூங்கா. 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சஞ்சய் காந்தி தேசிய பூங்கா, வசை ஆறு, சியான் கோட்டை, ஸ்னோ வேர்ல்ட் மும்பை உள்ளிட்ட நிறைய இடங்கள் அமைந்துள்ளன.

அதிசயம் தீம் பார்க், மதுரை

அதிசயம் தீம் பார்க், மதுரை

மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரவை எனும் கிராமத்தை ஒட்டி, மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் அதிசயம் தீம் பார்க் அமைந்துள்ளது. 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு பூங்காவில் 40 விதமான விளையாட்டு அமைப்புகள் மற்றும் 20 விதமான நீர்ச்சவாரி அமைப்புகள் அமையப்பெற்றுள்ளன. டிக்கெட்விலை : பெரியவர்கள் : 500 ரூபாய், சிறியவர்கள் : 300 நேரம் : காலை 10.00 முதல் மாலை 6.30 வரை

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

மதுரையிலிருந்து 41கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அதிசயம் தீம்பார்க்.

சென்னையிலிருந்து மதுரைக்கு நிறைய ரயில்கள் உள்ளன. திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், எக்மோர் குருவாயூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், மாடகான் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் என நிறைய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

திருப்பரங்குன்றம், வண்டியூர் ஏரி, வைகை ஆறு, அழகர் கோயில், சிறுமலை பாதுகாப்பு காடுகள் என நிறைய சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன.

Read more about: travel பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X