Search
  • Follow NativePlanet
Share
» »ஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி உள்ள ஒரே சுற்றுலாத் தலம் இது மட்டும் தான்..!

ஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி உள்ள ஒரே சுற்றுலாத் தலம் இது மட்டும் தான்..!

வேகமாக ஓடும் நீரில் படகோட்டிச் செல்லும் ஒரே ஒயிட் வாட்டர் ராஃப்டிங் தென்னிந்தியாவில் எங்க இருக்கு என தெரியுமா ?

நதியில் படகோட்டுதல் என்பது மனதையும், உடலையும் சிலிர்ப்பூட்டும் ஓர் அனுபவமாகும். இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி இருந்தாலும், தென்னிந்தியாவில் ஒரே இடத்தில் தான் இந்த வசதி உள்ளது. வெண்மை நுரை பொங்க, வேகமாக ஓடும் நீரில் படகோட்டிச்செல்வதால் இவ்விளையாட்டு ஒயிட் வாட்டர் ராஃப்டிங் என்று அழைக்கப்படுகிறது. ராஃப்டிங் போகும்பொழுது நதியின் வேகத்திற்கேற்ப மற்றும் திசைக்கேற்ப நாம் படகை ஓட்டிச் செல்லவேண்டும். அதெல்லாம் சரி, தென்னிந்தியாவில் இருக்கும் அந்த ஒரே ஒயிட் வாட்டர் ராஃப்டிங் எங்க இருக்கு என தெரியுமா ?

தண்டேலி

தண்டேலி


கர்நாடகாவில் உள்ள தண்டேலி நகரம் சுற்றிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடர்த்தியான இலையுதிர்காடுகளால் சூழப்பட்டுள்ளது. சாகச சுற்றுலாவில் ஆர்வம் உள்ள பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் தலமாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது. அடர்ந்த இலையுதிர்காடுகளால் ஆன தண்டேலி காட்டுயிர் சரணாலயத்தில் கானேரி ஆறு மற்றும் நாகஜாரி ஆறு எனும் இரண்டு ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. இந்த ஆறுகள் காளி ஆற்றின் துணை ஆறுகளாகும்.

L. Shyamal

காட்டுயிர் சரணாலயங்கள்

காட்டுயிர் சரணாலயங்கள்


தண்டேலி பகுதியில் கர்நாடக மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய காட்டுயிர் சரணாலயமான தண்டேலி காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. 2007-ம் ஆண்டு இந்த சரணாலயம் புலிகள் பாதுகாப்பு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுயிர் சரணாலயம் பலவகையான வனவிலங்குகளின் உறைவிடமாக அமைந்துள்ளது.

@ Vikas patil photography

படகு சவாரி

படகு சவாரி


தண்டேலி சுற்றுலாத் தலம் மிதவைப்படகு சவாரி, பரிசல் சவாரி, ஆற்று மிதவைப்படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை காளி ஆற்றில் கொண்டுள்ளது. இவை தவிர சைக்கிள் சவாரி, மலைப்பாதை சைக்கிள் சவாரி போன்ற பொழுதுபோக்குகளுக்கும் உகந்ததாகவும் இது விளங்குகிறது. முதலைகளை கண்டு மகிழ்வது, இயற்கை நடைப்பயணம், மலையேற்றம், படகுச்சவாரி, பறவைக்காட்சி, தூண்டில் மீன் பிடித்தல் போன்ற ஏராளமான இயற்கையம்சம் சார்ந்த பொழுது போக்குகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.

K Puttaraju

ஒயிட் வாட்டர் ராஃப்டிங்

ஒயிட் வாட்டர் ராஃப்டிங்


பாறைகளுக்கு நடுவே பாய்ந்தோடும் ஆற்று நீரில், படகில் சவாரிசெய்யும் ஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி உள்ள ஒரே தலம் இது மட்டும் தான். பாறைகளில் மோதி நீரில் விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் துடுப்பு போடும் சாகச அனுபவம் இங்கே கொட்டிக் கிடக்கிறது.

Likhith N.P

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


காளி ஆறு

தண்டேலி சுற்றுலாத்தலத்துக்கு பயணிக்கும சுற்றுலாவாசிகள் காளிநதி என்னும் காளி ஆற்றை பார்த்து ரசிப்பது அவசியம். இந்த ஆறு டிக்கி எனும் சிறு கிராமத்திலிருந்து தோன்றி பல கிலோ மீட்டர் பயணிக்கிறது. மின்சார உற்பத்திக்காக பல அணைகள் இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. கணேஷ்குடி எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ளன் சுப்பா அணை அவற்றுள் முக்கியமான அணையாகும். கோவாவையும் கர்நாடக மாநிலத்தையும் இணைக்கும் NH-17 தேசிய நெடுஞ்சாலை இந்த ஆற்றுப்பாலத்தின் வழி செல்வது குறிப்பிடத்தக்கது.

PiolAtif

குல்கி இயற்கை மையம்

குல்கி இயற்கை மையம்


குல்கி இயற்கை மையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காகவே கூடாரங்கள் அமைக்கப்பட்டு இயற்கைச்சூழல் மத்தியில் பயணிகள் தங்கி ரசிக்கத்தக்கவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்களுக்கு தேவையான கூடாரங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பறவையின் பெயரால் அழைக்கப்படுகின்றன. தண்டேலி காட்டுயிர் சரணாலயம் இந்த குல்கி இயற்கை மையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


தண்டேலி, காளி ஆற்றின் கரையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1551 அடி உயரத்தில் பின்னணியில் மேற்குத்தொடர்ச்சி மலைகளுடன் அமைந்துள்ளது. கோவாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தண்டேலி நகரம் தார்வாட், ஹூப்ளி மற்றும் பெல்காம் நகரங்களுடன் நல்ல முறையில் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+