இந்தியாவிலேயே மிகவும் வறட்சி மிகுந்த மாநிலம், பரப்பளவில் பெரியது என்றாலும் முக்கால்வாசி பாலைவனத்தால் சூழப்பட்டிருக்கும் புதையல் நகரம் ராஜஸ்தான். பெரிய அளவில் விவசாயமோ அல்லது வேறு வளங்களோ இல்லாவிட்டாலும் இந்தியாவின் பணக்கார ராஜ்ஜியங்கள் ராஜஸ்தானில் தான் இருந்திருக்கின்றன. இன்றும் இந்தியாவில் அதிகளவில் அரண்மனைகள் இருப்பது இந்த மாநிலத்தில் தான். அதேபோல இந்தியாவில் எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதும் ராஜஸ்தானுக்கே. எப்படி இது சாத்தியம்?. ராஜஸ்தான் இந்தியாவின் சுற்றுலாத் தலைநகரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது?. அதற்க்கான காரணங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

உலகின் ஒரே பிரம்மா கோவில்
ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்ற இடத்தில் பிரம்மா கோவில் ஒன்று உள்ளது. உலகிலேயே பிரம்மாவிற்கு இருக்கும் ஒரே கோவில் இதுவாகும். கார்த்திகை மாதத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு யாத்திரை வருகின்றனர். புஷ்கர் கோவிலுக்கு அருகிலேயே இருக்கும் புனித குளத்தில் நீராடியப் பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர்.
K.vishnupranay

பாலைவனக் கப்பல்
ராஜஸ்தான் என்றாலே முதுலில் நம் கண்முன் தோற்றுவது பாலைவனக் காடுகளும், ஒட்டகச் சவாரியும் தானே. ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான நகரங்களில் ஒன்று ஜெய்சால்மர் ஆகும். பாலைவனத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்நகரில் ஒட்டக சவாரி மிகவும் பிரபலம். வெயில் அதிகம் இல்லாத மாலை நேரத்திலோ அல்லது அதிகாலைப் பொழுதிலோ பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படும் ஒட்டகங்களின் மேல் அமர்ந்து பாலைவன மணலில் பயணம் செல்வது கடலில் மிதப்பது போல இருக்கும்.
Michael Day

தவறவிடக் கூடாதவை
ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால் எங்கு பயணிக்கிறீர்களோ இல்லையோ முதலில் ஒட்டகச் சவாரியை தேர்வு செய்துவிடுங்கள். ஏனெனில், இந்தியாவிலேயே ஒட்டகச் சவாரி இங்கு மட்டும் தான் உள்ளது. இதனால்தான் என்னமோ, இங்கே சுற்றுலாப்பயணிகள் அதிகம் பயணிக்கின்றனர்.
Flicka

நீல நகரம்
ராஜஸ்தானில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றுதான் ஜோத்பூர். மிகுந்த ராஜ பாரம்பரியம் உள்ள இந்நகரம் நீல நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இந்நகரின் மையத்தில் இருக்கும் மேஹ்ரங்கர்க் கோட்டையை சுற்றிலும் இருக்கும் வீடுகள் அனைத்திற்கும் நீல நிற வர்ணம் பூசப்பட்டிருப்பது தான்.
Premaram67

மேஹ்ரங்கர்க் கோட்டை
மேஹ்ரங்கர்க் கோட்டையின் மேல் இருந்து பார்க்கும் போது அத்தனை அட்டகாசமாக இந்நகரம் காட்சியளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கோட்டைகளுள் ஒன்றான மேஹ்ரங்கர்க் கோட்டையின் உள்ளே ஜோத்பூர் ராஜ பரம்பரையினர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Jean-Pierre Dalbéra

அம்பர் கோட்டை யானை சவாரி
ராஜஸ்தான் தலைநகரான ஜோத்பூரில் இருக்கிறது அம்பர் கோட்டை. மிகுந்த வேலைப்பாடுகளுடன், ராஜஸ்தான் கட்டிடக்கலையின் அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அக்கால ராஜஸ்தானிய அரசர்கள் போல யானையின் மீது சவாரி செய்து மகிழலாம்.
Anagoria

உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தை
ராஜஸ்தானில் உள்ள புஷ்கரில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இது உலகிலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாகும். ஒட்டகங்கள், குதிரைகள், ஆடு, மாடு என அனைத்துவிதமான கால்நடைகளும் இங்கே விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.சந்தைப்படுத்தப்படுகின்றன.
Dew

ஒட்டக நடனம்
வெறும் சந்தையாக மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஒட்டக அழகிப்போட்டி, குதிரைப்பந்தையம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி போன்றவை இப்பகுதியில் நடைபெறுகின்றன. ராஜஸ்தானில் தவற விடக்கூடாத விஷயங்களில் இது முக்கியமானது ஆகும்.
Koshy Koshy



Click it and Unblock the Notifications





