Search
  • Follow NativePlanet
Share
» »2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?

2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?

2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?

By Staff

உலகில் தோன்றிய பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட கி.மு 4000 முதல் கி.மு 2000 ஆண்டுகளில் உலகெங்கிலும் பல வேறுபட்ட நாகரீகங்கள் தளைத்திருக்கின்றன. மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம், தென் கிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்திய நாகரீகம், வட இந்தியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீகம், கிரேக்க மற்றும் ரோம் நாகரீகங்கள் என காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் பல நாகரீகங்கள் தோன்றி அழிந்திருக்கின்றன.

ஆனால் மேற்சொன்ன நாகரீகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகம் தோன்றியிருக்கிறது. பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதல்லவா இந்த செய்தி. சமீபத்தில் மதுரையில் நடந்த அகழ்வாய்வுகள் இன்று நாம் காணும் மதுரை நகரை காட்டிலும் செழிப்பு மிக்க நகரம் ஒன்று இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.

அப்படி அன்று முதல் இன்றுவரை மதுரை மாநகரம் தமிழர் சிறப்பின் தலைநகரமாக இருந்துவருகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரைக்கு ஒரு சுற்றுலா போகலாம் வாங்க.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

இந்த 2500 வருடங்களும் மதுரையின் உயிர்நாடியாக இருப்பது மீனாட்சி அம்மன் கோயில் தான். பாண்டிய மன்னர்களால் முதலில் கட்டப்பட்டு பின்னர் இஸ்லாமிய படைஎடுப்பினால் அழிந்து போய் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி காலத்தில் புதுப்பொழிவு பெற்று தமிழர் கட்டிடக்கலையின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது இக்கோயில் .

Surajram

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

சங்ககால பாடல்களில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு வேப்பம் பூ மாலை சூட்டும் வழக்கத்தை பற்றிய குறிப்புகள் உண்டு. அந்த சடங்கானது இன்றும் அதன் தன்மை மாறாமல் பின்பற்றப்பட்டு வருவதே மதுரையின் பழமைக்கு சான்றாகும்.

அதுமட்டுமில்லாது கட்டிடக்கலையிலும் பழந்தமிழர் சிறப்பை கூறும் விதமாக உலகிலேயே மிக நீளமான கல்லினால் ஆன மேற்கூரையை உடைய கட்டிடம் என்ற பெருமையையும் இந்த கோயில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

இக்கோயிலின் மூலவராக மீன் போன்ற கண்களையுடைய மீனாட்சி அம்மன் உடையார் சொக்கநாதருடன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் மொத்தம் 14 கோபுரங்கள் இருக்கின்றன. அதில் மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் சந்நிதிகளின் மேல் உள்ள கோபுரங்களில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலினுள் இருக்கும் குளத்தில் பொற்றாமரை ஒன்றும் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Photo:fraboof

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொண்டாடப்படும் 'மீனாட்சி திருக்கல்யாணம்' தான் இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும்.

இக்கோயிலுக்கு மட்டும் தினமும் சராசரியாக பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் பக்தர்கள் வரை தினமும் வருகை தருகின்றனர்.

Vinoth Chandar

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

தமிழராய் பிறந்த எல்லோரும் தங்கள் வாழ்நாளில் கட்டாயம் ஒருமுறையேனும் வரவேண்டிய இடமாகும் இந்த மீனாட்சி அம்மன் கோயில்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தை பற்றிய மேலும் பயனுள்ள பல தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஜல்லிக்கட்டு :

ஜல்லிக்கட்டு :

ஆதி தமிழரின் வீர விளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு ஆகும். மண்ணும் மனிதனும் இயைந்து வாழ்த்த காலங்களில் உழவுக்கு உதவி செய்த காளைகளை அடக்குவது வீரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது.

அப்படிப்பட்ட இந்த ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் பிரபலமான இடமென்றால் அது சந்தேகமே இல்லாமல் மதுரை தான்.மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு , அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தம் ஆகும்.

Iamkarna

மதுரை மல்லிகை :

மதுரை மல்லிகை :

மதுரை மண்ணுக்கே உரிய சிறப்புகளில் ஒன்று மல்லிகை பூ ஆகும். கோயில்கள் மற்றும் எல்லா சுபகாரியங்களிலும் மல்லிகைக்கு என்றுமே இடமுண்டு. அப்படிப்பட்ட மல்லிகை தமிழகத்திலேயே அதிகம் விளைவது மதுரையில் தான். உள்நாடுகளில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் மதுரை மல்லிகைக்கு தனி மவுசு உண்டு.

Thangaraj Kumaravel

மதுரை மல்லிகை :

மதுரை மல்லிகை :

மதுரைக்கு தூங்கா நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அதற்கு காரணம் நள்ளிரவு இரண்டு மணிக்கு கூட இங்கே சுடச்சுட உணவு கிடைப்பது தான் என்று சொல்வார்கள். அதிலும் குறிப்பாக மதுரையில் கிடைக்கும் மல்லிகைப்பூ இட்லி மிகப்பிரபலமானது ஆகும்.

Paulthy

ஜிகிர்தண்டா :

ஜிகிர்தண்டா :

மதுரையில் கிடைக்கும் எல்லா உணவுகளை காட்டிலும் சுவையானது என்றால் அது 'ஜிகிர்தண்டா' தான்.பால், சீனி, நன்னாரிசிரப், ரோஸ்சிரப், பால்கோவா, சைனாகிராஸ் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவை சேர்த்து செய்யப்படும் இது உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டதாகும்.

இந்த ஜிகிர்தண்டா மதுரை முழுக்க இருக்கும் உணவகங்களில் கிடைக்கிறது. மதுரையில் நாம் தவறவிடக்கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

திருமலை நாயக்கர் மஹால் :

திருமலை நாயக்கர் மஹால் :

தமிழ்நாட்டில் பழங்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகளுல் வெகுசில மட்டுமே இன்றும் இருக்கின்றன. மதுரையில் இருக்கும் அப்படிப்பட்ட அரண்மனை தான் திருமலை நாயக்கர் மஹால் ஆகும்.

1636 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை மன்னர் திருமலை நாயக்கரால் இது கட்டப்பட்டிருக்கிறது. போர் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாமல் இந்த கட்டிடத்தின் பெரும்பகுதி அழிந்துபோயிருக்கிறது.

திருமலை நாயக்கர் மஹால் :

திருமலை நாயக்கர் மஹால் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து வெறும் இரண்டு கி.மீ தொலைவில் இந்த நாயக்கர் மஹால் அமைந்திருக்கிறது.

இங்கே சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமான மாலை ஆறு மணி முதல் இரவு ஒலி & ஒளி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கள்ளழகர் :

கள்ளழகர் :

மதுரை நகரில் இருந்து இருபத்தியொரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது மதுரை கள்ளழகர் கோயில். ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்புடைய இக்கோயிலானது 108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் ஒன்றாகும். புராணப்படி கள்ளழகர் மீனாட்சி அம்மனின் உடன் பிறந்தவர் ஆவர். இதனால் ஒவ்வொரு வருடமும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது தனது கோயிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறார்.

அப்படி அவர் வரும் போது முழுநிலவு நாளில் வைகை ஆற்றில் இறங்குவது மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மதுரை :

மதுரை :

இத்தனை சிறப்புகள் நிறைந்த மதுரை நகரை பற்றிய மேலும் அப்ள சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

மதுரையில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன .

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X