Search
  • Follow NativePlanet
Share
» »சர்தார் சிலய விடுங்க! சிவனுக்கு இந்தியாவுல இவ்ளோ உயரமான சிலைகள்லாம் இருக்கா?

சர்தார் சிலய விடுங்க! சிவனுக்கு இந்தியாவுல இவ்ளோ உயரமான சிலைகள்லாம் இருக்கா?

இந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்

By Udhaya

சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வந்தாலும், சிவபெருமான் 27 அவதாரங்கள் எடுத்துள்ளதாக கூர்மபுராணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சிவனின் அவதாரங்களை போன்றே பல்வேறு உருவங்களில், வெவ்வேறுபட்ட உயரங்களில் சிவனின் பிரம்மாண்ட சிலைகள் இந்தியாவில் நிறைய இடங்களில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார் சிவபெருமான். ஒரு இடத்தில் கண்கள் மூடிய நிலையிலும், இன்னொரு இடத்தில் பக்தர்களுக்கு அருள்புரியும் வகையிலும் என்று பல்வேறு வடிவங்களில் சிவன் சிலைகள் காணப்படுகின்றன. மேலும் இந்தியா கோயில்களின் நாடு என்பதால் இங்கு எண்ணற்ற சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

அதாவது 12 ஜோதிர்லிங்கமாகட்டும், தானாய் தோன்றிய சுயம்பு லிங்கங்கள் ஆகட்டும் சிவனுக்கு என்று இந்தியாவில் எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு.

அந்த வகையில் உலகில் அமர்ந்த நிலையில் உள்ள சிவன் சிலைகளில் உயரமான சிலைகள் இந்தியாவில் ஏராளம் இருக்கின்றன. அந்த சிலைகள் எங்கெங்கு அமைந்திருக்கின்றன, அச்சிலைகளின் உயரமென்ன என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நாத்வாரா சிவன்

நாத்வாரா சிவன்

சுமார் 20 கிமீ தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக ஒரு சிவன் சிலை கிட்டத்தட்ட இப்போது கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.


ராஜஸ்தான் மாநிலம் உதய்ப் பூரிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நாத்வாரா.

இதன் உயரம் 251 அடியாக திட்டமிடப்பட்டு கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது. இன்னும் சில வாரங்களில் இதன் திறப்புவிழா நடக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rahul sadhwani

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

உத்தரகண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள இந்த சிவன் சிலை, கங்கை நதியின் கரையில் கண்கள் மூடிய நிலையில் தியானம் செய்வது போன்று காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்மாத் நிகேதன் ஆஸ்ரமத்தில் இருப்பதால் சிலையின் கம்பீரமும், ஆஸ்ரமத்தின் அமைதியும் நம்மை வேறொரு லோகத்துக்கு கொண்டுசென்றுவிடும். இந்த சிலையை கொண்ட பார்மாத் நிகேதன் ஆஸ்ரமதில் பக்தர்கள் தங்குவதற்காக 1000 அறைகள் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு.

சிலையின் உயரம் 123 அடி

Sumita Roy Dutta

 முருதேஸ்வர், கர்நாடகா

முருதேஸ்வர், கர்நாடகா

அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலையின் உயரம் 123 அடி

Neinsun

சுர்சாகர் ஏரி

சுர்சாகர் ஏரி

சுர்சாகர் ஏரியில் ஒரு சிவன் சிலை உள்ளது. இது குஜராத் மாநிலம் வதோதரா மாநகருக்கு அருகில் உள்ளது.

சுர்சாகர் ஏரியில் அமைந்துள்ள அழகிய சிவன் சிலை மிகவும் பிரம்மாண்டமாக 120 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

விஸ்வாமித்ரா நதிக் கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை நின்ற நிலையில் இருக்கிறது.

 ஆதியோகி

ஆதியோகி

கோயம்புத்தூர் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 112 அடி உயரமுள்ளதாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் இருக்கும் இடம் காடுகளை ஆக்கிரமிப்பு செய்தது என்ற குற்றச்சாட்டும் ஜக்கி வாசுதேவ் மேல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலையின் உயரம் 112 அடி.

Prabhuthiru57

நம்ச்சி, சிக்கிம்

நம்ச்சி, சிக்கிம்

நம்ச்சி என்றால் 'வானுயரம்' என்று அர்த்தமாம். அதேபோல அந்த நகரத்திலுள்ள சித்தேஷ்வர்தாம் எனும் இடத்தில் வானை முட்டும் உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக 108 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த சிவன் சிலை. மேலும் இந்த சிலை அமையப்பெற்றிருக்கும் சித்தேஷ்வர்தாம் பகுதியில் 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்கள் உள்ளன. அதோடு கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தை இந்த இடத்திலிருந்து பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்

சிலையின் உயரம் 108 அடி

Yasho99

மங்கள் மகாதேவ்

மங்கள் மகாதேவ்


101 அடி உயரம் கொண்ட சிவன் சிலை ஹரியானாவின் கங்க்டான் எனும் பகுதியில் அமைந்துள்ளது.

carrotmadman6

பெங்களூர், கர்நாடகா

பெங்களூர், கர்நாடகா

பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்ப் கோட்டையின் பின்னே இந்த பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 65 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது. இது 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த சிவன் சிலையை வந்து பார்த்து செல்கின்றனர்.

ஜபல்பூர், மத்தியப்பிரதேசம்

ஜபல்பூர், மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரத்தில் உள்ள கச்னார் எனும் இடத்தில் இந்த சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 76 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருப்பதுடன், கண்கள் மூடிய நிலையில் சாந்தசொரூபராக சிவபெருமான் காட்சி தருவது நம் கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்யும். மேலும் இச்சிலை அமைந்திருக்கும் கச்னார் பகுதி சில மாதிரி ஜோதிர்லிங்கங்களுக்காகவும் பிரபலம்.

Hshukla

 பீஜாப்பூர், கர்நாடகா

பீஜாப்பூர், கர்நாடகா


உலகின் உயரமான சிவன் சிலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த சிவன் சிலை பீஜாப்பூரில் உள்ள ஷிவாபூர் எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிவன் சிலை 85 அடி உயரமும், 1500 டன் எடையும் கொண்டது. இதன் காரணமாக இவ்வளவு பெரிய சிவன் சிலையை செய்வதற்கு 13 மாதங்கள் பிடித்திருக்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X