Search
  • Follow NativePlanet
Share
» »30 வயசுக்குள்ள இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் போயே ஆகனும்...!

30 வயசுக்குள்ள இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் போயே ஆகனும்...!

இந்தியாவில் மனதை மயக்கும் வகையிலான பல பகுதிகள் இருப்பினும் 30 வயதிற்குள் சென்று ரசித்துவிட வேண்டிய சுற்றுலாத் தலங்கள் எது என தெரியுமா ?

லவ்வருடன் சில்லென்ற மலைப் பகுதியாக இருந்தாலும் சரி, நண்பர்களுன் ஒரு லாங் ட்ரிப் என்றாலும் சரி... யாரும் வேண்டாம் என ஒதுக்கிவிடுவதில்லை. நீண்ட தூரப் பயணம் என்றாலே உள்மனதில் ஒருவித ஆசை கொடிகட்டிப் பறக்காத்தானே செய்கிறது. இதிலும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணிப் பொழிவையும், பசுமைக் காடுகளையும், இரவு கூடாரத்தின் வழியாக மினுமினுக்கும் நட்சத்திரங்களையும் காண வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகத்தான் இருக்கும். அதிலும், இளமைப் பருவத்தில் செல்லும் ஒவ்வொரு பயணமும் நம் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும். ஏதாவது ஒரு நினைவுகள் இங்கே இட்டுச் செல்லும். இப்படி, இந்தியாவில் மனதை மயக்கும் வகையிலான பல பகுதிகள் இருப்பினும் 30 வயதிற்குள் சென்று ரசித்துவிட வேண்டிய சுற்றுலாத் தலங்கள் எது என தெரியுமா ? வாருங்கள், அப்படிப்பட்ட சிறந்த ஏழு தலங்களுக்கு பயணம் மேற்கொள்வோம்.

பின்சார்

பின்சார்

அமைதி, பசுமைக் காடு, வானுயர்ந்த சிகரம், ஜில்லென்ற காலநிலை, காட்டு விலங்குகள்... இவை அனைத்தும் நிறைந்த பகுதியே பின்சார் ஆகும். உத்திரகாண்டில் அமைந்துள்ள இது வனவிலங்கு ஆர்வலர்களுக்க வரப்பிரசாதம். இந்தியாவின் உயர்ந்து வரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அல்மோராவின் குமாவோன் பகுதியின் மையத்தில் உள்ள இங்கு வாழ்நாளில் ஒருமுறையாவது பயணம் செய்ய வேண்டும்.

எப்போது செல்லலாம் ?

அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டம் இப்பகுதியில் பயணம் செய்ய ஏற்றதாகும்.

எப்படிச் செல்வது ?

விமானம் : டொமஸ்டிக் விமான நிலையம் பான்ட்நகரில் அமைந்துள்ளது. இது பின்சாரில் இருந்து 152 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ரயில் பயணம் : கத்கோடம் ரயில் நிலையம் இத்தலத்தில் இருந்து சுமார் 119 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சாலை மார்க்கமாக : பின்சாரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், உத்திரகாண்டின் பிற பகுதிகளில் இருந்தும் பின்சார் பகுதி பேருந்து வசதிகளில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள் : ஜிரோ பாயின்ட், பெரியதேவா பூசன், மேரி புத்தன் எஸ்டே, பின்சார் வனவிலங்குகள் சரணாலயம், மகாதேவ் கோவில் உள்ளிட்டு இன்னும் பல சுற்றுலாத் தலங்கள் இதனருகே அமைந்துள்ளது.

solarshakti

மெக்லியோகஞ்

மெக்லியோகஞ்


இந்தியாவில் வடக்கே அமைந்துள்ள ஹிமாச்சலப் பிரதேச மலைத் தொடருடன் அமைந்துள்ள மிக அழகிய சுற்றுலாத் தலம்தான் மெக்லியோகஞ். இயற்கை எழில் மிகுந்த மலைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வல்லமையைக் கொண்டுள்ள இது பிறநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் தன்வசம் கொண்டுள்ளது. மாலை நேர சூரிய மறைவுக்குப் பிறசு நெருப்புடன் கூடிய மலைக் கூடாரத்தில் படுத்துக் கொண்டே மிளிரும் விண்மீன்களைக் கண்டு ரசிக்க விரும்புபவர்களுக்கு இத்தலம் சொர்க்கத்தின் வாசல்தான். இளமைப் பருவம் முடியும் முன் வாழ்நாளில் ஒருமுறையேனும் இப்பகுதீக்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும். அப்போதுதான் இதன் முழுமையான அழகையும், சிறப்பம்சங்களையும் ரசித்து ருசிக்க முடியும்.

எப்போது செல்லலாம் ?

செப்டம்பர் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இப்பகுதியின் சீதோஷன நிலை அருமையாக இருக்கும்.

எப்படிச் செல்வது ?

விமானம் : மெக்லியோகஞ்க்கு அருகில் உள்ள விமான நிலையம் கங்கல் விமான நிலையமாகும். இது சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

ரயில் பயணம் : இத்தலத்தில் இருந்து சுமார் 89 கிலோ மீட்டர் தொலைவில் பதன்கோட் பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

சாலை மார்க்கமாக : இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தில்லி, சண்டிகர், தர்மசாலா உள்ளிட்ட முக்கியமாக பகுதிகளில் இருந்தும் மெக்லியோகஞ்சை அடைய அரசு மற்றும் தனியார் பேருந்துவசதிகள் எளிய முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள் : கங்கரா கோட்டை, பக்சுனாத் கோட்டை, பக்சு நீர்வீழ்ச்சி, தலாய் லாமா கோவில் காம்ப்ளக்ஸ், கங்கரா வேலி தேயிலை எஸ்ட்டேட் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

John Hill

கனாட்டல்

கனாட்டல்


உத்திரகாண்டில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில், சம்பா-முஸ்ஸூரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராம் கனாட்டல். பச்சைப் பசேல் என்ற சுற்றுப்புறங்கள், பனி மூடிய மலைகள், ஆறுகள் மற்றும் காடுகள், இந்த இடத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. கனாட்டலின் பல்வேறு அழகிய ஈர்ப்புகளுள், சுர்கந்தா தேவி கோவில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மேலும், உலகின் உயரமான அணைகளுள் ஒன்றாகக் கருதப்படும் தெஹ்ரி அணை, கனாட்டலில் உள்ள மற்றொரு முக்கிய இடமாகும். எளிதான நடைப்பயணத்தின் மூலம் அடையக்கூடிய கொடியா காடு பசுமைக் காட்சிகளுன் நிறைந்திருக்கும். இந்த நடை பயணத்தின் போது, அழகிய பல இயற்கை நீரூற்றுகளைப் பார்த்து ரசிக்கலாம்.

எப்போது செல்லலாம் ?

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டம் கனாட்டலுக்கு பயணம் செய்ய ஏற்றதாகும்.

எப்படிச் செல்வது ?

விமானம் : சுமார் 92 கி.மீ தொலைவில் டெஹ்ராடன்னில் உள்ள ஜாலி க்ராண்ட் விமான நிலையமே இதற்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும்.

ரயில் பயணம் : டெஹ்ராடன் மற்றும் ரிஷிகேஷ் இரயில் நிலையங்கள் இதற்கு அருகில் அமைந்துள்ள இரயில் நிலையங்கள் ஆகும்.

சாலை மார்க்கமாக : முஸ்ஸுரி, ரிஷிகேஷ், சம்பா, டெஹ்ராடன், ஹரித்வார் மற்றும் தெஹ்ரி ஆகிய ஊர்களிலிருந்து, சொகுசுப் பேருந்துகள் மற்றும் சாதாரண பேருந்துகள் மூலமும் இக்கிராமத்தை அடையலாம்.

சுற்றுலாத் தலங்கள் : கொடியா ஜங்கில் காடு, தெஹ்ரி ஏரி, சுகர்ந்தா தேவி கோவில், தெஹ்ரி அணை.

Nimish2004

கசௌலி

கசௌலி


ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் இந்த கசௌலி எனும் பிரசித்தமான மலைவாசத்தலம் உள்ளது. இயற்கை அம்சங்கள் நிறைந்த சூழலின் மத்தியில் வீற்றுள்ள இந்நகரத்தில் கிறிஸ்ட் சர்ச், மங்கீ பாயிண்ட், கசௌலி புரூவரி, பாபா பாலக் நாத் கோவில் மற்றும் கூர்க்கா ஃபோர்ட் ஆகிய இதர சுற்றுலா அம்சங்களும் காணப்படுகின்றன.

எப்போது செல்லலாம் ?

அக்டோபர் முதல் ஜூன் வரையிலான காலகட்டம் கசௌலிக்கு செல்ல ஏற்றதாகும்.

எப்படிச் செல்வது ?

விமானம் : சண்டிகர் விமான நிலையம் 59 கிலோ மீட்டர் தூரத்தில் அருகில் உள்ள விமான நிலையமாக அமைந்துள்ளது. ஸ்ரீநகர், கொல்கத்தா, நியூடெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன.

ரயில் பயணம் : கசௌலிக்கு அருகில் 40 கிலோ மீட்டர் தொலைவில் கல்கா ரயில் நிலையம் உள்ளது.

சாலை மார்க்கமாக : ஹிமாசலப் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கசௌலி நகரத்துக்கு நல்ல முறையில் பேருந்து வசதிகளும் உள்ளன.

சுற்றுலாத் தலங்கள் : சன்செட் பாயிண்ட், கிருஷ்ண பவன் மந்திர், கசௌலி கிளப், மாலனா கிராமம், பார்வதி ஆறு, புந்தர் போன்ற பல சுற்றுலாத் தலங்கள் இங்கே உள்ளது.

Shepi003

பீர் பில்லிங்

பீர் பில்லிங்


ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் பீர் பில்லிங் முக்கியமானதாகும். சாகச விளையாட்டுக்களுக்கு பீர் ஒரு புகழ்பெற்ற இடம் ஆகும். இந்தியாவின் பேராகிளைடிங் தலைநகரம் என்று அழைக்கப்படும் இங்கு பல்வேறு பேராகிளைடிங் விளையாட்டுக்கள் இடம்பெற்று உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், சுற்றுலாத் துறை, பயணியர் விமான போக்குவரத்து மற்றும் இமாச்சல பிரதேச அரசாங்கம் ஆகியவை ஒரு பேராகிளைடிங் உலக கோப்பை நிகழ்வை இங்கே நடத்துகிறார்கள். மேலும், ஹேங்-கிளைடிங் என்று அழைக்கப்படும் மற்றும் ஒரு சாகச செயலை பயணிகள் செய்து பார்க்கலாம். சிக்லிங் கொம்பா, பீர் தேனீர் தொழிற்சாலை மற்றும் திபெத்திய குடியிருப்பு ஆகிய இடங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும தன்மை கொண்டது.

எப்போது செல்லலாம் ?

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டம் பீர் பில்லிங் செல்ல ஏற்றதாகும்.

எப்படிச் செல்வது ?

விமானம் : பீருக்கு நெருக்கமான விமானதளம், 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பத்தன்கோட் உள்நாட்டு விமானநிலையம். புது தில்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் இவ்விடத்திற்கு நெருக்கமான சர்வதேச விமானநிலையம் ஆகும்.

ரயில் பயணம் : இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ள பத்தன்கோட் தொடர்வண்டி நிலையமே பீருக்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி இணைப்பு.

சாலை மார்க்கமாக : சண்டிகர் மற்றும் புதுதில்லி போன்ற நகரங்களில் இருந்து பயணிகள் சுலபமாக பேருந்துகள் மூலமாக பீரை அடையலாம்.

சுற்றுலாத் தலங்கள் : பய்ஜ்நாத் சிவன் கோவில், பில்லிங் வேலி, சாமுந்தா தேவி கோவில், சிவா ஸ்ரைன், அஜு கோட்டை என பல சுற்றுலாத் தலங்கள் இங்கே உள்ளன.

Journojp

பிரஷார் ஏரி

பிரஷார் ஏரி


மண்டியிலிருந்து 62 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரஷார் எனும் அழகிய கிராமத்தில் அமைந்திருப்பதால் இந்த ஏரி பிரஷார் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் கரைப்பகுதியில் மூன்று அடுக்குகளைக்கொண்ட கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. பிரஷார் என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்ற முனிவர் ஒருவரின் பெயரால் இந்த ஏரி அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் கரையில்தான் அவர் தவம் புரிந்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. பனிபடர்ந்த மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்த ஏரியின் நீர் ஆழ்ந்த நீல நிறத்தில் ஜொலிக்கிறது. ஏரியின் மையத்தில் ஒரு சிறிய தீவையும் காண முடியும். இந்தியாவில் அழகுமிகுந்த ஏரிகளில் இந்த ஏறியும் பெயர்பெற்றுள்ளது.

எப்போது செல்லலாம் ?

ஏப்ரல் முதல் ஜூலை மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் குளுமையான கால நிலை இங்கே நிலவி வருகிறது. அக்காலகட்டத்தில் இப்பகுதிக்கு பயணம் செல்வது சிறந்தது.

எப்படிச் செல்வது ?

விமானம் : குலுமணாலி விமான நிலையம் மாண்டி நகரத்திலிருந்து 73 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள விமான நிலையம் ஆகும். பிரஷார் ஏரிpயல் இருந்து 49 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

ரயில் பயணம் : மாண்டிக்கு மிக அருகில் உள்ள ரயில் நிலையம் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோகிந்தர் நகரில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து வாடகைக் கார் மூலமாக ஏரியை அடைந்து விடலாம்.

சுற்றுலாத் தலங்கள் : மாண்டி, ஏரியின் அருகே உள்ள கோவில், புத்நாத் கோவில் மற்றும பரோட் உள்ளிட்டவை இப்பகுதீயில் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.

Ritpr9

ஜிரோ

ஜிரோ


ஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது ஜிரோ. இந்த வட்டாரத்தில் பரவி கிடக்கும் பெரிய காடான ஜிரோ பல பழங்குடியினருக்கும் வீடாக அமைந்திருக்கிறது. இங்கு காணப்படும் பல வகையான தாவரங்களும், விலங்கினமும் இயற்கை காதலர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களாகும். இந்தியாவில் அழகுநிறைந்த பகுதிக்கு சுற்றுலாச் செல்ல திட்டமிட்டர்ல முதல் தேர்வாக ஜிரோவை தேர்வு செய்யலாம்.

எப்போது செல்லலாம் ?

ஆண்டு முழுவதுமே ஜிரோ பயணிக்க ஏற்ற காலநிலையுடன் இருக்கும் என்பதால் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இப்பகுதிக்கு பயணம் செய்யலம்.

எப்படிச் செல்வது ?

விமானம் : ஜோர்கட் விமான நிலையம் ஜிரோவில் இருந்து சுமார் 98 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ரயில் பயணம் : ஜிரோ நகருக்கு அருகில் 100 கிலோ மீட்டர் தொலைவில் நஹர்லகுனில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

சாலை மார்க்கமாக : ஜோர்கட் அல்லது குவஹாத்தி நகரிலிருந்து ஒரு வாடகைக் கார்கள் மூலம் ஜிரோ வேலையை அடையலாம். தலைநகர் இட்டாநகரிலிருந்து மாநில அரசுப் பேருந்துகள் இப்பகுதிக்கு இயக்கப்படுகின்றன. இவை கூடுதலான நேரத்தை எடுக்கும்.

சுற்றுலாத் தலங்கள் : தாலி வேலி வனவிலங்குகள் சரணாலயம், டரின் மீன் பண்ணை, சிவன் கோவில், பைன் காடு, மேக்னா குகைக் கோவில் மற்றும டோலா மன்டோ போன்ற பல சுற்றுலாத் தலங்கள் இங்கே உள்ளது.

Vikramjit Kakati

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X