Search
  • Follow NativePlanet
Share

அல்மோரா - பேரானந்தம் தரும் சுற்றுலா அனுபவம்!

20

உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி நதிகளுக்கு இடையே 5 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இடம் அல்மோரா. கடல் மட்டத்திலிருந்து 1651 மீட்டர் மேலே  அமைந்துள்ள மலை நகரமான அல்மோரா பசுமையான காடுகள் சூழ அழகுற நம்மை வரவேற்கின்றது. 15 மற்றும் 16-ஆவது நூற்றாண்டுகளில் இவ்விடத்தை சந்த் மற்றும் கத்யுர் வம்சம் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகின்றது.

அல்மோரா மலையிலிருந்து அழகு கொஞ்சும் பனிமூடிய இமயமலையின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். உலகம் முழுவதிலிருந்தும் பல சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரும்படி செய்கின்ற அழகு அல்மோராவிற்கு உண்டு.

கசார் தேவி கோவில், நந்தா தேவி கோவில், சித்தை கோவில், மற்றும் கதர்மல் சூரியக் கோவில் ஆகியவை இங்கு அமைந்துள்ள பிரபலமான கோயில்களாகும்.

நந்தா தேவி கோவில் குமாவோன் கட்டிடக்கலையை எடுத்துரைக்கும் பழமையான கோயில். இக்கோவில் சந்த் வம்சத்தின் பெண் கடவுளுக்காகக் கட்டப்பட்டு பகதர்கள் பலர் வணங்கும் இடமாக புகழடைந்து வருகின்றது.

மற்றொரு புகழ் பெற்ற ஸ்தலமான கசார் தேவி கோவில் அல்மோராவிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இகோவிலில் சுவாமி விவேகானந்தர் தவம் மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது.

இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு, அழகிய காட்சியான சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் துள்ளியமாக காண வசதி செய்யப்பட்டிருக்கின்றது. சிம்தோலா  மற்றும் மர்தோலா சுற்றுலா வருபவர்களுக்கு ஏற்றது.

அல்மோராவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அழகுற காட்சியளிக்கும் மான் பூங்கா பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம். இப்பூங்காவில் மான், சிறுத்தை, மற்றும் இமாலய கருப்புக் கரடிகள் மற்றும் இது போன்ற பல விலங்குகள் உள்ளன. 

கோபிந்த் பல்லப்பந்த் பொது அருங்காட்சியகம் மற்றும் பின்சார் வனவிலங்கு சரணாலயமும் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள். மலை ஏறுதல் மற்றும் பைக் சவாரி ஆகிய சாகசங்களில் ஈடுபடுவது புதுவித அனுபவத்தை பயணிகளுக்கு அளிக்கும்.

விமானம், சாலை, ரயில் போன்ற அனைத்து வித போக்குவரத்து மூலமாகவும் இவ்விடத்தை அடையலாம். பந்த் நகர் விமான நிலையம் மற்றும் கத்கோடம் ரயில் நிலையம் அல்மோராவிலிருந்து மிக அருகில் உள்ளது.

அல்மோராவின் அழகை முழுமையாக ரசிக்க ஏதுவான பருவம் கோடைக்காலமே. கோடைக்காலத்தில் அல்மோராவின் காலநிலை சாதமாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.

அல்மோரா சிறப்பு

அல்மோரா வானிலை

சிறந்த காலநிலை அல்மோரா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அல்மோரா

  • சாலை வழியாக
    தில்லியிலிருந்து அல்மோரா செல்ல பல சொகுசு பேருந்துகள் கிடைக்கும். இரண்டு இடங்களுக்கும் இடையேயான தூரம் சுமார் 350 கிலோ மீட்டர். முக்கிய இடங்களிலிருந்து மாநில அரசுக்கு சொந்தமான பேருந்துகளும் அல்மோரா செல்ல இணைக்கப்பட்டுள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கத்கோடம் ரயில் நிலையம் அல்மோராவிற்கு அருகிலுள்ள ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அல்மோராவிற்கு அருகிலுள்ள விமானத் தளம் நகரின் மையத்தில் இருந்து 125 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பந்த் நகர் விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் வழக்கமான விமானங்கள் மூலம் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. அல்மோராவை அடைவதற்கு பந்த் நகர் விமான நிலையத்தில் இருந்து டாக்சிகளை வாடகைக்கு அமர்த்தியும் செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri