Search
  • Follow NativePlanet
Share
» »கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்

கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்

By Naveen

காவேரி ஆறு உற்பத்தியாகும் இடமான கூர்க் எனப்படும் குடகு மலை கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அற்புதமான மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் இருந்து எளிதில் சென்றடையக்கூடிய தூரத்தில் இருக்கும் கூர்க்கில் நாம் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

மலையேற்றம், சாகச படகு சவாரி, வைன் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள், அதிசுவையான குடகு உணவுகள் என கூர்க் சுற்றுலாவின் போது நாம் நிச்சயம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

மலையேற்றம்:

மலையேற்றம்:

கூர்க்கில் மலையேற்றம் செய்ய பல அற்புதமான சிகரங்கள் இருக்கின்றன. குறிப்பாக தடியண்டமோல், பிரம்மகிரி, குமரபர்வத மலை போன்றவை சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான மலையேற்ற ஸ்தலங்களாக இருக்கின்றன.

இந்த மூன்று இடங்களை பற்றியும் சற்றே விரிவாக அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.

solarisgirl

தடியண்டமோல்:

தடியண்டமோல்:

தடியண்டமோல் தான் கூர்கில் இருக்கும் மிகப்பெரிய சிகரம் ஆகும். பசுமை போர்த்தியது போன்ற அழகான நிலப்பரப்புகளை உடைய இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்வது எளிமையானது ஆகும். இதனால் முதல் முறை மலையேற்றம் செய்பவர்களும், சுவாசப்பிரச்சனை இருப்பவர்களும் தடியண்டமோல் சிகரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

தடியண்டமோல் சிகரத்தில் உள்ள மலையேற்றப் பாதை 8கி.மீ தூரம் கொண்டதாகும். நவம்பர்-பிப்ரவரி இங்கே செல்ல ஏற்ற நேரமாகும்.

Abhijit Shylanath

பிரம்மகிரி:

பிரம்மகிரி:

கடல் மட்டத்தில் இருந்து 5,200 அடி உயரத்தில் இருக்கும் பிரம்மகிரி மலை கூர்க் மற்றும் கேரளத்தில் வயநாடு மாவட்டத்தின் எல்லையில் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது.

மலையேற்றம் செய்ய சற்றே கடினமானதாக கருதப்படும் பிரம்மகிரி மலையில் மலையேற்றத்தில் அனுபவம் வாய்ந்த சுற்றுலாப்பயணிகள் வருடம் முழுக்கவே வந்தவண்ணம் உள்ளனர். பிரம்மகிரி மலை ட்ரெக்கிங் பாதை 10கி.மீ தொலைவுடையதாகும்.

Abhijit Shylanath

குமர பர்வத மலை:

குமர பர்வத மலை:

கூர்கில் இருக்கும் இரண்டாவது உயரமான சிகரமானகுமர பர்வத மலை நம்முடைய உடல் திராணியை சோதிக்ககூடியது ஆகும். 14கி.மீ தொலைவுடைய மிகக்கடினமான பாதையை கடந்து வந்தால் கூர்கின் பிரம்மிப்பூட்டக்கூடிய இயற்கை காட்சிகளை கண்டு மகிழலாம்.

solarisgirl

சாகச படகு சவாரி:

சாகச படகு சவாரி:

தென்இந்தியாவில் ராப்டிங் எனப்படும் சாகச படகு சவாரி செய்ய சிறந்த இடமாக கூர்க் திகழ்கிறது. வடக்கு கூர்கில் இருக்கும் துபாரே ஆற்றிலும், தெற்கு கூர்கில் இருக்கும் பரபோல் ஆற்றிலும் சாகச படகு சவாரி நடத்தப்படுகிறது.

Philip Larson

சாகச படகு சவாரி:

சாகச படகு சவாரி:

இந்த சாகச படகு சவாரியிலும் இரண்டு வகைகள் இருக்கின்றன. 'Still Water Rafting' என்பது பருவமழை காலத்துக்கு பிந்தைய மாதங்களான செப்டம்பர்-ஜூன் வரை நடத்தப்படுகிறது. இந்த காலத்தில் ஆறுகளில் நீரோட்டம் சலமின்றி இருக்கிறது. இதில் ராப்டிங் செய்வது எளிதானதாகும்.

Shiraz Ritwik

சாகச படகு சவாரி:

சாகச படகு சவாரி:

White Water Rafting என்னும் இரண்டாவது வகைசாகச படகு சவாரி தான் மிகுந்த சவால் நிறைந்தது ஆகும். பருவமழை காலத்தில் ஆறுகளில் நீரோட்டம் ஆக்ரோஷத்துடன் இருக்கும் வேளையில் இந்த சாகச படகு சவாரி நடத்தப்படுகிறது.

மிகுந்த சவால் நிறைந்ததாகவும், ஆபத்தானதுமான இவ்வகை சாகச படகு சவாரியில் ஈடுபடவே சுற்றுலாப்பயணிகள் அதிக விருப்பம் கொள்வதாக சொல்லப்படுகிறது.

Philip Larson

ஹோம் ஸ்டே:

ஹோம் ஸ்டே:

கூர்கிற்கு சுற்றுலா சென்றால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஹோட்டல்களில் தாங்காமல் ஹோம் ஸ்டேக்களில் தங்க வேண்டும். அப்போது தான் உண்மையான கூர்கின் அனுபவத்தை பெற முடியும்.

கூர்கில் இதற்காகவே ஏராளமான ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. இவற்றில் வீட்டு முறைப்படி சமைக்கப்பட்ட அதிசுவையான குடகு உணவுகள் பரிமாறப்படுகின்றன.

Aris Gionis

ஹோம் ஸ்டே:

ஹோம் ஸ்டே:

கூர்கில் இருக்கும் ஹோம் ஸ்டேக்கள் பற்றிய முழுமையான விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

கூர்க் சுற்றுலாத்தலங்கள்:

கூர்க் சுற்றுலாத்தலங்கள்:

கூர்க் நகரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள அப்பே நீர்வீழ்ச்சி அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது. இந்த அருவியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக ஒரு தொங்கு பாலம் ஒன்று அருவிக்கு சற்று அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதி என்பதால் இங்கே சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி இல்லை.

Sooraj Shajahan

வாலனூர் பிஷிங் கேம்ப்:

வாலனூர் பிஷிங் கேம்ப்:

கூர்கிலிருந்து 30 கி.மீட்டருக்குள் துபாரெவுக்கு வெகு அருகில் வாலனூர் பிஷிங் காம்ப் அமைந்துள்ளது. வாலனூர் பிஷிங் காம்ப்பிலிருந்து துவங்கும் இந்த முகாம்கள் அங்கிருந்து காவிரி ஆற்றின் வழியில் அமைந்துள்ள தொட்டம்கலி, பீமேஸ்வரி போன்ற இடங்களுக்கு சென்று இறுதியாக கலிபோரே பகுதியில் முடிவடைகிறது. பலவகையான மீன்கள் வாழும் இங்கு தூண்டிலில் மீன் பிடிக்க வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

தலைக்காவேரி:

தலைக்காவேரி:

கூர்கில் இருக்கும் மிகப்பிரபலமான சுற்றுலாத்தலம் தலைக்காவேரி ஆகும். கூர்கின் தலைநகரான மடிகேரியில் இருந்து 48கி.மீ தொலைவில் உள்ள பிரம்மகிரி மலையின் மேல் அமைந்திருக்கும் இந்த இடத்திலிருந்து தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.
அதனை குறிக்கும் விதமாக இங்கே ஒரு சிறிய குளமும் அதனருகே சிறு கோயிலொன்றும் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X