Search
  • Follow NativePlanet
Share
» »இந்த விசயங்கள் போதும் இந்தியாவை எப்பவும் உலக நாடுகள் வித்தியாசமா பாக்குறதுக்கு!

இந்த விசயங்கள் போதும் இந்தியாவை எப்பவும் உலக நாடுகள் வித்தியாசமா பாக்குறதுக்கு!

மீசை எங்கள் பெருமை என மார்தட்டிக்கொள்ளும் இந்தியர்களை பெரிதும் காணமுடியும் இந்தியாவில்.திருவிழா என்றாலும் சரி, வீட்டில் சிறப்பு நிகழ்வுகள் என்றாலும் சரி கையில் மருதாணியோட இளம்பெண்கள் வலம் வருவார்கள். உடம்பு முழுக்க எண்ணெய் பூசி நீவி விட்டு ஒரு ஆனந்த குளியலை போட்டு வந்தால் அடடா.சொல்லித்தான் தெரிய வேண்டுமா.. இந்தியா என்றாலே தாஜ்மஹால்.. இப்படி மொத்தம் 25 விசயங்கள் போதும் இந்தியாவை மற்ற உலக நாடுகள் வித்தியாசமாக பார்ப்பதற்கு..

பெரிய மீசை ராஜஸ்தான்

மீசை எங்கள் பெருமை என மார்தட்டிக்கொள்ளும் இந்தியர்களை பெரிதும் காணமுடியும் இந்தியாவில். அட தம்மாத்தூண்டு மயிரில் என்ன வந்துவிடப்போகிறது என்று இளையத் தலைமுறையின் கிளம்பாமலிருந்திருந்தால், மீசைக்காக சாதி கலவரம் கூட உருவாக்கிவிட்டிருப்பார்கள் நம்மவர்கள். அட இது சுவாரசியமான விசயம். ராஜஸ்தானில் ஒருவர் 14 அடிக்கு மீசை வளர்த்து வச்சிருக்கார் தெரியுமா?

இந்தியாவில் நடக்கும் விநோதங்களில் இதுவும் ஒன்று.. ராம்சிங் இந்த மீசைக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரைக் காணவேண்டுமென்றல் நீங்கள் ராஜஸ்தான் விரைய வேண்டும்..

மெஹந்தி

திருவிழா என்றாலும் சரி, வீட்டில் சிறப்பு நிகழ்வுகள் என்றாலும் சரி கையில் மருதாணியோட இளம்பெண்கள் வலம் வருவார்கள். இத்தனை ஏன்... இளைஞர்களே சில சமயங்களில் மருதாணி கையுடன் இருக்கிறார்கள். அதுதான் மெஹந்தி என்று பரவலாக அறியப் படுகிறது.

எளிதில் அழிந்துவிடும் டாட்டு வகைதான் என்றாலும் இதில் இரண்டு வகை உள்ளன. ஒன்று இயற்கையானவை. மற்றவை செயற்கை. பித்த உடம்புகாரிக்கு நல்லா சிவக்கும், மாமனை நினைச்சு வச்சா நல்லா கை சிவக்கும்னு பழைய பாட்டிகள் இன்றும் பேசிக்கொண்டிருப்பார்கள் கேட்டிருக்கிறீர்களா?

வித விதமான ரக ரகமான மெஹந்தி வடிவங்கள் இந்தியாவில் நீங்கள் காணமுடியும்.

ஆயுர்வேத ஸ்பா

உடம்பு முழுக்க எண்ணெய் பூசி நீவி விட்டு ஒரு ஆனந்த குளியலை போட்டு வந்தால் அடடா... என்னே சுகம் என்னே சுகம்.. இப்படியான எண்ணெய் குளியல்கள் முக்கியமாக இயற்கை முறையிலான எண்ணெய் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதுதான் உடலுக்கு நல்லதும் கூட.

பொதுவாக ஆயுர்வேதம் என்றாலே கேரளத்தை தேடி ஓடுகிறோம். தமிழகத்தில் குற்றாலம், ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற இயற்கை முறை எண்ணெய் குளியல்கள் நடக்கின்றன. பயன்பெறுங்கள் சுற்றுலாக்களின் போது...

ஆயுர்வேத சிகிச்சைக்கு உலகப்புகழ் பெற்ற இந்த சிறிய கிராமம் பற்றி தெரியுமா?

தாஜ்மஹால்

சொல்லித்தான் தெரிய வேண்டுமா.. இந்தியா என்றாலே தாஜ்மஹால்.. இதோ இந்த கட்டுரையில் படியுங்கள்.

ஆக்ராவில் தாஜ்மஹாலைத் தவிர வேற என்னெல்லாம் இருக்கு தெரியுமா?

வாகா எல்லை

இந்தியா பாகிஸ்தான் இரண்டும் நட்பு நாடுகளா இல்லை எதிரி நாடுகளா என்று நம்மால் யாராலும் சரியாக கூறமுடியாது ஏனென்றால் நம் ஆழ்மனதில் அது எதிரி நாடு என்று கட்டம் கட்டி எழுதி வைத்துவிட்டனர். ஆனால் இந்த பஞ்சாப் மாநிலத்தின் வாகா எல்லையில் நின்று காணுங்கள்.. எவ்வளவு அழகான காட்சிகள். உலகின் எந்த நாட்டு எல்லையும் இப்படி தான் இருக்கும் என்றாலும், இந்தியாவில் காணத்தகுந்த சிறப்புகள் இந்த எல்லையில் நாம் சுதந்திரதினத்தன்று மிக அழகாக காணமுடியும்.

வாகாஹ் எல்லையில் தினமும் நடக்கும் இந்தியா - பாகிஸ்தானின் நிழல் யுத்தம் !!

யோகா ரிஷிகேஷ்

ரிஷிகேஷில் யோகோ செய்பவர்கள் சென்று அமைதியான சூழ்நிலையை அனுபவிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், இங்கிருக்கும் மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு குவிகிறார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் ஏராளமான இந்துக் கடவுள்களின் பிரகாரமாகத் திகழ்கிறது.

மேலும் தெரிந்துகொள்ள-

ஹோலி பிருந்தாவன்

பிருந்தாவனில் ஹோலிப் பண்டிகையை தீவிரமாக ஜாலியாக கொண்டாடித் தீர்க்கலாம்.

இந்த இடத்தில்தான் கிருஷ்ணன் கோபியர் சேலைகளை திருடியதாகவும், மற்றும் ராதையுடன் தனது ராசலீலைகளை நிகழ்த்தியதாகவும், தெய்வீக நடனங்கள் புரிந்ததாகவும், பல அசுரர்களை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் தெரிந்துகொள்ள

குஸ்தி ராம்பூர்

ராம்பூரில் நடக்கும் குஸ்தி போட்டிகளை கண்டு களிக்கலாம்.. ஒருவேளை அனுமதி பெற்று இந்த விளையாட்டில் நீங்களும் ஒரு கை பார்க்கமுடியும். அடடா.. பயந்து விடாதீர்கள் சும்மா சொன்னோம்.

பழங்குடியின அற்புதங்கள், வடகிழக்கு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் அழகியல்களை காண கண்கோடி வேண்டும் என்றே சொல்லலாம். பழங்குடியினர்களின் பூமியாகிய அந்த பிரதேசம் எவ்ளோ எழிலுடன் காணப்படுகிறது காணுங்கள்.

வடகிழக்கு மாநிலங்களும் அவர்களின் அதிர்ச்சியான பழக்கவழக்கங்களும்

ஒட்டக பயணம், ராண் ஆப் கட்ச்

பாலை வனத்தில் ஒட்டகத்தில் பயணிப்பது என்பது நிச்சயமாக அலாதி பிரியம்தான். ஆனால் அது மிகவும் அழகான பயணமாக அமையும் மறக்கவேண்டாம் இது மிகவும் சிறப்பான பயணம். ராஜஸ்தானில் கண்டிப்பாக செய்யுங்கள்

உலகின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள்

சுந்தரவனக் காடுகள்தான் உலகின் மிகப் பரந்த அளவிலான மாங்குரோவ் காடுகள். கண்டுகளியுங்கள் நண்பர்களே.

அதி சுத்தமான கிராமம், மாவுலின்னாங்

மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள மிகவும் சுத்தமான கிராமம் மாவுலின்னாங். இங்கு ஒரு குப்பை கூட நம் கண்களில் படாது. அந்த அளவுக்கு மிக மிக சுத்தமானதாக உள்ளது இந்த கிராமம். இது இந்தியா போன்ற மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருப்பதுதான் இதை கொண்டாடக் காரணமாகிவிட்டது.

மிதக்கும் தேசிய பூங்கா, மணிப்பூர்

மணிப்பூரில் அமைந்துள்ள மிதக்கும் பூங்கா பற்றிய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்காவான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா இங்குதான் அமைந்துள்ளது.

ராயல் வங்க புலி,ரந்தம்போர்

ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்கா என்ற விசேஷ அந்தஸ்தைப் பெற்றுள்ள இது வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் வனச்சரகமாகும். இது ஒரு காலத்தில் ராஜவம்சத்தினரின் வேட்டைப்பகுதியாக இருந்துள்ளது. 1955ம் ஆண்டில் இது அதிகாரப்பூர்வ காட்டுச்சுற்றுலா வனச்சரகமாக அறிவிக்கப்பட்டது.

எலி கோவில், ராஜஸ்தான்

ராஜஸ்தானின் பிக்கனேர் பகுதியில் அமைந்துள்ள இந்த எலி கோவில் மிகவும் பிரபலமானதாகும்.

நாம் இறந்தபின்பு நம் ஆன்மாவை சுமந்து செல்லும் எலிகள் பற்றி தெரியுமா?

விநோதமான உணவுகள், நாகலாந்து

நாகலாந்து பகுதியில் கிடைக்கும் உணவுகள் மிகவும் விநோதமானவையாக இருக்கும். மனிதன் தோன்றிய நாட்களில் உண்ட உணவுகள் முதல் தீ கண்டுபிடித்த அந்த காலத்தில் சாப்பிட்டு வந்த உணவுகள் வரை அங்குள்ள மனிதர்கள் சாப்பிடுகின்றனராம்.

பாம்பு படகு போட்டி, ஆலப்புழா

கேரளத்தின் கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் உச்சமாக இருப்பது 'வல்லம் களி' எனப்படும் பாம்பு படகு போட்டி ஆகும். நம்ம ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டை போன்று கேரளத்தில் இந்த படகு போட்டி வீர விளையாட்டாக கருதப்படுகிறது.

படகுவீடு, கேரளம்

படகு இருக்கு, வீடும் இருக்கு ஆனா படகுல வீடு இருக்குமா? . கேரளாவிலே இருக்கு. கடவுளின் சொந்த தேசம் என அழைக்கப்படும் பசுமை ததும்பும் கேரளா மாநிலத்தின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று அங்கு கணக்கற்று பாயும் அலைகள் எழாத ஓடைகளில் வலம் வரும் படகு வீடுகள் தான். வாருங்கள் ரசிக்க ருசிக்க அப்படகு வீடுகளில் ஒரு பயணம் போகலாம்.

தென்முனை குமரி

இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கும் இந்த மாவட்டத்திலேயே காலையில் சூரிய உதயத்தையும், மாலையில் அது மறைவதையும் கண்டு ரசிக்கலாம். சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரியதாகத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.

மூங்கில் சவாரி, பெரியாறு

மூங்கில் தட்டிகளைக் கொண்டு பாய்மரக் கப்பலைப் போன்ற ஒரு வித படகு உருவாக்கி அதில் பயணிக்கும் அற்புதமான ஒரு பயணம் மூங்கில் சவாரி. கேரளத்தின் பெரியாறு பகுதியில் இது நிகழ்த்தப்படுகிறது.

விநோத திருவிழாக்கள், தமிழ்நாடு

தென்னிந்தியாவில் கலாச்சார ரீதியாக ஆன்மீக நோக்கத்தில் வெவ்வேறு விதத்தில் விழாக்களானது கொண்டாடப்படுகிறது

ரயில் பயணம், ராமேஸ்வரம்

அதுபோன்று இந்திய ரயில்வே வழித்தடங்களில் மிகச் சிறந்த பல வழித்தடங்கள் உள்ளன.

கபடி போட்டி

கபடி உள்ளிட்ட வீர விளையாட்டுகள் இந்தியாவில் பரவலாக விளையாடப்படுபவை ஆகும்.

பாரம்பரிய நடனங்கள்

இந்தியாவின் மாநிலத்துக்கு ஒவ்வொரு நடனங்கள் இருக்கின்றன. அவை மிகவும் தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றன.

ஷாப்பிங்க்

டெல்லி,மும்பை,சென்னை, கொல்கத்தா என முதல்கட்ட நகரங்கள் முதல் பெங்களூரு, ஹைதராபாத்,கோயம்புத்தூர், புனே என இரண்டாம் கட்ட பெருநகரங்கள் வரை ஷாப்பிங்க் மிகச்சிறந்ததாக இருக்கிறது இந்தியாவில். இதுபோக நீங்கள் இந்தியாவின் எந்த இடத்துக்கு சென்றாலும் அங்கே ஷாப்பிங்க் முக்கிய பங்காற்றுகிறது.

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X