Search
  • Follow NativePlanet
Share
» »எல்லையற்ற இவ்வுலகில் சிறகடித்து பறக்கலாம் வாருங்கள்!

எல்லையற்ற இவ்வுலகில் சிறகடித்து பறக்கலாம் வாருங்கள்!

என்றும் ஓயாத இரைச்சல், "இன்னும் அதிகம் வேலை செய்" என்ற மேலதிகாரியின் குடைச்சல், செல்போன் இணையதளம் என சர்வகாலமும் தகவல்களை கொட்டி மூழ்கடிக்கும் நவீன கண்டுபிடிப்புகள், வீட்டுக்கடன், அதிக மார்க் எடுக்க வேண்டிய கட்டாயம் என இன்றைய நாட்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்சனைகள்.

ஒரு கணம் யோசித்து பாருங்கள் கிடைத்திருக்கும் இவ்வளவு அற்புதமான வாழ்க்கையை கவலைப்படுவதிலேயே கழிக்கப் போகிறோமா என்ன? சில நாட்களை உங்களுக்கே உங்களுக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள், வெளியுலகத்துடன் எந்த தொடர்பும் இன்றி இயற்கையுடன் ஒன்றி நீங்களே உங்களைப்பற்றி அறிந்திராத விஷயங்களை உணர்ந்து மகிழ்ந்திடுங்கள். வாருங்கள் இந்தியாவில் இருக்கும் வெளியுலகத்துடன் தொடர்பற்ற அற்புதமான சுற்றுலாத்தலங்களுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்வோம்.

ஹோட்டல் பேருந்து மற்றும் விமான கட்டணங்களில் 50% வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்

மலானா - ஹிமாச்சல பிரதேசம்:

மலானா - ஹிமாச்சல பிரதேசம்:

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பார்வதி பள்ளத்தாக்கில் வெளியுலகத்துடன் முற்றிலும் தொடர்பற்று அமைந்திருக்கும் சிறிய பழங்குடிகள் கிராமம் தான் மலானா. அற்புதமான இயற்கை காட்சியமைப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இக்கிராமத்தில் பல வினோதமான பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

Photo:RuckSackKruemel

மலானா - ஹிமாச்சல பிரதேசம்:

மலானா - ஹிமாச்சல பிரதேசம்:

இக்கிராமத்தில் நுழையும் வெளியாட்கள் யாரும் இங்கு இருக்கும் எந்த வீட்டின் சுவரையோ, மக்களையோ வேறெந்த பொருட்களையோ தொடக்கூடாது, மலானா கிராமத்து மக்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன் படுத்தக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் சுற்றுலாப்பயணிகளுக்கு உண்டு. இதை மீறுபவர்கள் கிராம பஞ்சாயத்திடம் அபராதம் செலுத்த வேண்டி வரும்.

photo:RuckSackKruemel

மலானா - ஹிமாச்சல பிரதேசம்:

மலானா - ஹிமாச்சல பிரதேசம்:

இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி நாம் என் அங்கு செல்ல வேண்டும் என கேட்கிறீர்களா? நம்பினால் நம்புங்கள் மாவீரர் அலெக்சாண்டரின் படையில் இருந்த வீரர்களின் சந்ததிகள் இன்றும் இங்கு இருக்கிறார்களாம். அதே போன்று பல்லாயிரம் வருடங்களாக மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் குழுவே இக்கிராமத்தை ஆட்சி செய்கிறது. புதுமையான காலாச்சாரத்தையும், மக்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்படுபவர்கள் ஹிமாச்சல பிரதேசம் செல்கையில் மலானாவிற்கும் நிச்சயம் சென்று வாருங்கள்.

Photo:Vikram Singh

மலானா - ஹிமாச்சல பிரதேசம்:

மலானா - ஹிமாச்சல பிரதேசம்:

ஹிமாச்சல பிரதேசத்தை எப்படி அடைவது? ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள்.

Photo:Sajith T S

சன்ச்கர் - உயிரை உறையவைக்கும் சாகசம்:

சன்ச்கர் - உயிரை உறையவைக்கும் சாகசம்:

மைனஸ் டிகிரி குளிரில் உறைந்து போன ஆற்றின் மேல் நடக்கும் திர்ல்லிங்கான சாகசத்தை முயற்சி செய்ய ஆசையா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் இருக்கும் சன்ச்கர் என்ற இடத்திற்கு தான். இங்கு நிலவும் கடும் குளிரினால் வருடத்தின் 8 மாதங்கள் பாதைகள் மூடப்பட்டு வெளிஉலகத்துடன் தொடர்பின்றியே இருக்கிறது.

Photo:Pradeep Kumbhashi

சன்ச்கர் - உயிரை உறையவைக்கும் சாகசம்:

சன்ச்கர் - உயிரை உறையவைக்கும் சாகசம்:

'சாதர் ட்ரக்' என்ற இந்த சாகசப்பயனத்தை குளிர் காலத்தில் சன்ச்கர் ஆறு உறைந்திருக்கும் போது தான் மேற்கொள்ள முடியும். 14 கி.மீ தொலைவுள்ள இந்த சாகசப்பயனத்தை மேற்கொள்கையில் உறைய வைக்கும் இந்த குளிரில் இருந்து தப்பிக்க உகந்த குளிர் தாங்கும் ஆடைகளை கொண்டு செல்வது நல்லது. மனதையும் உடலையும் கடுமையாக சோதிக்கும் இந்த ட்ரெக்கிங் பயணம் அதிபயங்கரமான சாகசம் செய்ய விரும்புபவர்களுக்கு மட்டுமே.

Photo:Partha Chowdhury

சன்ச்கர் - உயிரை உறையவைக்கும் சாகசம்:

சன்ச்கர் - உயிரை உறையவைக்கும் சாகசம்:

மிதவை படகில் அதி வேகத்தில் பாயும் சன்ஸ்கர் ஆற்றில் கூர்மையான பாறைகளையும், ஆபத்தான வளைவுகளையும் கடும் முயற்சியில் கடப்பது மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஆபத்து நிறைந்த சாகசம் என்றாலும் முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நிகழ வாய்ப்பில்லை. இந்தியாவில் இப்பொது பிரபலமாகி வரும் இந்த 'ரப்டிங்' விளையாட்டுக்கு மிகச்சிறந்த இடம் இந்த சன்ஸ்கர்.

Photo:Philip Larson

சன்ச்கர் - உயிரை உறையவைக்கும் சாகசம்:

சன்ச்கர் - உயிரை உறையவைக்கும் சாகசம்:

சன்ச்கரை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சன்ச்கருக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Gopal Vijayaraghavan

சித்குள் - இந்தியாவின் கடைசி கிராமம்:

சித்குள் - இந்தியாவின் கடைசி கிராமம்:

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கியன்னுர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சித்குள் என்ற சிறிய கிராமம். ஹிமாச்சல பிரதேசத்தின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இருக்கும் இக்கிரமத்துடன் இந்திய சாலை நிறைவடைகிறது. இக்கிராமத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் இந்திய சீன எல்லை ஆரம்பமாகிறது.

Photo:Nick Irvine-Fortescue

சித்குள் - இந்தியாவின் கடைசி கிராமம்:

சித்குள் - இந்தியாவின் கடைசி கிராமம்:

சித்குள்ளில் முக்கிய சுற்றுலாத்தலங்கலாக திகழ்வது அங்கிருக்கும் சிறிய புத்த கோயில் ஒன்றும், மரத்தாலான கூரைகளை கொண்ட குடிசைகளும் தான்.

Photo:Malvikabaru

சித்குள் - இந்தியாவின் கடைசி கிராமம்:

சித்குள் - இந்தியாவின் கடைசி கிராமம்:

இந்த கிராமத்தில் நாம் தங்குவதற்கு போதிய வசதிகள் ஏதும் இல்லை என்பதால் சித்குளில் இருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கும் சங்களா என்ற இடத்தில் நிறைய ஹோட்டல்கள் உள்ளன. அவற்றில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு பின்னர் அதிகாலையில் கிளம்பி சித்குள் வந்து சுற்றிப்பார்க்கலாம்.

Photo:Kaiho

சித்குள் - இந்தியாவின் கடைசி கிராமம்:

சித்குள் - இந்தியாவின் கடைசி கிராமம்:

எவ்வித வணிகத்தனமும் இல்லாத அற்புதமான இயற்கை சூழலில் வெளி உலகத்துடன் முற்றிலும் தொடர்பற்று தனிமையை கொண்டாடி மகிழ அற்புதமான இடம் இந்த சித்குள் கிராமம் ஆகும்.

Photo: Travelling Slacker

கிப்பர் - உலகத்தின் மிக உயரமான கிராமம்:

கிப்பர் - உலகத்தின் மிக உயரமான கிராமம்:

கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது கிப்பர் என்ற உலகின் மிக உயரமான கிராமம். இங்கு ஒரு புத்த மடாலமும், கிப்பர் தேசிய பூங்காவும் அமைந்திருக்கின்றன. காசாவில் இருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த கிராமத்திற்கு கோடை காலத்தில் சில மாதங்கள் மட்டும் பேருந்து போக்குவரத்து இயக்கப்படுகிறது.

Photo: Amareshwara Sainadh

கிப்பர் - உலகத்தின் மிக உயரமான கிராமம்:

கிப்பர் - உலகத்தின் மிக உயரமான கிராமம்:

மொத்தமாகவே 80 வீடுகள் மட்டுமே இருக்கும் இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. ஆரவாரமற்ற ஓரிடத்தில் சில நாட்களை கழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இந்த கிப்பர் கிராமத்திற்கு வரலாம்.

Photo:John Hill

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+