» »இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க்கை நோக்கிய பயணம்

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க்கை நோக்கிய பயணம்

By: R. SUGANTHI Rajalingam

 நீங்கள் உங்கள் தினசரி போரடிக்கும் வாழ்க்கை முறையிலிருந்தோ அல்லது சோர்வான நாட்களில் இருந்தோ விடை பெற விரும்புகிறீர்களா? நீங்கள் பிரபல ஆங்கில பயணக் கதைகளான சென் பென்னின் 'இன் டூ தி ஒயில்டு' மற்றும் எர்னஸ்ட் ஷேவின் ' மோட்டார் சைக்கிள் டைரீஸ்' என்ற இந்த இரண்டு கதைகளும் உங்களுக்கு பிடிக்குமானால் கண்டிப்பாக இந்த கூர்க் பயணம் கூட உங்களுக்கு பிடித்தமான ரெசிபி ஆகத் தான் அமையும்.

இந்த கூர்க் பகுதியை பெங்களூர்காரர்கள் விரைவிலேயே எளிதாக அடைந்து விடலாம். இது உங்கள் வார விடுமுறைக்கான பயணமாக அமைவதோடு கண்டிப்பாக உங்கள் மனதை கொள்ளையடிக்கும். இந்த கூர்க் மலைத்தொடர் பகுதி தான் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது. கண்டிப்பாக உங்கள் சுற்றுலா தளங்கள் வரிசையில் இது முதலில் அமைந்து விடும். அந்த அளவுக்கு இதன் இயற்கை எழில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. உங்களை வியக்க வைக்கும் ஆழமான காட்சி பார்வை, ஓங்கி உயர்ந்த தேக்குகாடுகள், கண்ணுக்கே தெரியாத வண்ணம் மூடுபனி சூழ்ந்த மலைகள், அதிசயக்கும் பள்ளத்தாக்குகள், பசுமை நிரம்பி வழியும் காடுகள், நறுமணம் கமழும் காபி தோட்டங்கள், வித விதமான விலங்குகள், உங்களை வரவேற்க அணி வகுத்து நிற்கும் மலைத்தொடர்கள் என ஒட்டு மொத்த இயற்கை அழகும் நிரம்பிய ஓரே இடம் தான் இந்த கூர்க் பயணம். ஒவ்வொரு வார விடுமுறை நாட்களில் இங்கு சென்று வந்தாலே போதும் நீங்கள் புதிய புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

கூர்க் சாலை வழிப்பயணம்

கூர்க் சாலை வழிப்பயணம்

பெங்களூரிலிருந்து கூர்க்கு செல்லும் ஒரு நீண்ட வழி பாதை கண்டிப்பாக பைக் ரைடர்ஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். மடகேரி நெடுஞ்சாலை இந்தியாவின் மிகவும் பிடித்தமான மேட்டார் பயண சாலையாக கருதப்படுகிறது. இந்த சாலையில் நீங்கள் பைக்கில் சென்று கொண்டே இயற்கையுடன் பயணம் மேற்கொள்வது உங்களுக்கு மறக்க முடியாத ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். நீண்ட சாலையில் எந்த வித தடையும் இல்லாமல் அப்படியே பறந்து செல்லலாம். இருள் சூழ்ந்த மூடுபனி நிலவும் முன்னதாக சூரியன் மறைவதற்குள் நீங்கள் மடகேரியை அடைந்து விடுவது நல்லது.

மண்டல பட்டி மலைகள்

மண்டல பட்டி மலைகள்

நீங்கள் இந்த கூர்க் பயணத்தின் போது 30 கி. மீ மண்டல் பட்டி மலைகளை காணலாம். இந்த மண்டல பட்டி மலைகள் மூடுபனி சூழ்ந்து மேகமூட்டத்துடன் சில சமயங்களில் மழைச் சாரல்களுடன் காணப்படும். இந்த மலையில் ஏறுவதற்கு நான்கு சக்கர வாகனங்கள் தேவைப்படும். அங்கேயே இது வாடகைக்கு கிடைக்கின்றன. ஆனால் மலைப்பாதை பற்றிய பிரச்சினை இல்லையென்றால் நீங்கள் பைக் பயணம் கூட மேற்கொள்ளலாம். கொஞ்சம் உயரே செல்லும் போது உங்களை சுற்றிலும் பசுமை உலகத்தை காணலாம். இந்த சிறிய பயணமே உங்களை மயக்கடிக்க வைத்து விடும். கண்டிப்பாக இப்பொழுது புரியும் ஏன் கூர்க் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்கிறார்கள் என்பதற்குரிய அர்த்தம்.

திபெத்தியினரின் பைலகுப்பி

திபெத்திய மக்கள் இனத்தினர் வாழும் உலகத்தில் இரண்டாவது இடம் தான் இந்த பைலகுப்பி. இங்கே அமைந்துள்ள தங்க கோயில் மிகவும் பெரிய கோயில் என்ற சிறப்பு பெற்றதாக உள்ளது. இங்கே கிட்டத்தட்ட 40 அடிகளில் தங்கத்தால் ஆன புத்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே புத்த வழிபாட்டையும் திபெத்திய மக்களின் கலாச்சாரத்தையும் காணலாம்.

PC : Vinayaraj

அப்பே, இருப்பு மற்றும் மற்ற நீர் வீழ்ச்சிகள்

அப்பே, இருப்பு மற்றும் மற்ற நீர் வீழ்ச்சிகள்

மடகேரிக்கு அருகில் 70 அடியில் அப்பே என்ற உயரமான நீர்வீழ்ச்சி உள்ளது . இருப்பு நீர் வீழ்ச்சி கூர்க்கின் மற்றொரு புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியாக உள்ளது. இங்கே மத யாத்திரைக்கான நிறைய கோயில்களும் உள்ளன. ராமேஸ்வரா கோயில், சிவன் கோயில், மல்லள்ளி நீர்வீழ்ச்சி, செலவரா நீர்வீழ்ச்சி போன்ற எண்ணற்ற நீர்வீழ்ச்சிகளும் இப்பகுதியில் உள்ளன.

ராஜா சீட்

இந்த இடம் சுற்றுலா பயணிகளால் அதிகமாக பார்க்கும் இடமாக உள்ளது. இங்கே பூத்துக் குலுங்கும் அழகான மலர்கள், செயற்கை நீர் ஊற்றுகள் என்று சூரியன் மறைவதை கூர்க் ராஜா தன் ராணிகளுடன் கண்டு களிப்பதர்காக அமைக்கப்பட்ட இடம். பிங்க் மற்றும் ஆரஞ்சு கலரில் அடுக்கடுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் போல் அந்த நீல வானத்தில் மறையும் சூரியனை இங்கிருந்து பார்க்கும் போது ஒரு கற்பனை உலகில் இருப்பது போல் தோன்றும்.

PC : Philanthropist 1

காவேரி நிசர்கதாமா

காவேரி நிசர்கதாமா

காவேரி நிசர்கதாமா என்ற இடம் காவேரி ஆற்றினால் சூழப்பட்ட தீவு ஆகும். இங்கே தடினமான மூங்கில் காடுகள், சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் போன்றவை காணப்படுகின்றன. கயிற்றால் ஆன பாலமும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்க மான், முயல் சரணாலயமும் உள்ளன.இங்கே யானை சவாரி மற்றும் படகு சவாரி புகழ்பெற்று விளங்குகிறது. காட்டின் உள்ளே தங்க வசதியான வீடுகள் மற்றும் மரத்தின் மேல் தங்க மூங்கில் வீடுகள் போன்றவைகளும் உள்ளன.

துபாரி யானை பொழுதுபோக்கு

இந்த யானை பொழுது போக்கு கூர்க்கின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். இங்கே மலையேறுதல், யானை சவாரி, மீன் பிடித்தல் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இங்கே சிறப்பாக உள்ளன. கொம்பன் போன்ற பெரிய யானைகளின் குளியலை கண்டும் அதற்கு கை கொடுத்தும் மகிழலாம்.

PC : Manjunath B K

 மற்ற முக்கியமான இடங்கள்

மற்ற முக்கியமான இடங்கள்

நாகர்கோல் நேஷனல் பார்க் என்ற புலிகளின் சரணாலயமும் கூர்க்கில் உள்ளது. இந்த சரணாலயம் முழுவதும் ஏராளமான தாவங்கள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இந்த பார்க் முழுவதையும் சுற்றி பார்ப்பதற்கான பயண வசதிகளும் இங்கே இருக்கின்றன. பிரமகரி மலை மற்றொரு சுற்றுலா இடமாக விளங்குகிறதோ. இங்கே ஏராளமான இயற்கை காட்சிகளும் விலங்குகள் வாழும் இடமாகவும் உள்ளது.

கோவில்கள்

இயற்கையை ரசிப்பவர்களுக்கு மட்டும் கூர்க் சொந்தமல்ல. கடவுள் பக்திக்கும் சிறப்பாக விளங்குகிறது. இங்கே ஓம்ஹரேஸ்வரா கோயில் மற்றும் பகாமண்டல கோயில் போன்றவை கூர்க்கில் அமைந்துள்ளது.

இங்கே பகல் நேரத்தில் நிறைய படகு சவாரிகளும் மற்றும் நிறைய தண்ணீர் பொழுது போக்கு விளையாட்டுகளும் இருக்கின்றன.

என்னங்க இன்னும் ஏன் யோசனை. உங்க பொருட்களை பேக் பண்ணி கூர்க் பயணத்திற்கு கிளம்பி விட வேண்டியது தானே.

நீங்கள் அசைவம் விரும்பியா இருந்தா கண்டிப்பாக பன்றி டிஸ்ஷஸ்களை சாப்பிட மறந்திடாதிங்க. இந்த உணவு கூர்க் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற உணவாகும்.

PC : raju venkat