» »பெங்களூர் டூ சிக்மகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயம்- இந்த அழகிய பயணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கள

பெங்களூர் டூ சிக்மகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயம்- இந்த அழகிய பயணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கள

Written By: Balakarthik Balasubramanian

பத்ரா வனவிலங்கு சரணாலயம் புலிகளை அதிகளவில் கொண்டு காட்சிகளால் மனதை வருடும் ஒரு அழகிய இடமாகும். இந்திய அரசாங்கத்தின் 25வது பணியாக எடுத்து நிறுவப்பட்ட இந்த சரணாலயம் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒன்றாகும். உங்கள் யோசனையை நான் யூகித்துவிட்டேன். ஆம், புலியை மட்டும் தான் நம்மால் இங்கு பார்க்க முடியுமா? என்னும் ஏக்கம் உங்கள் மனதில் தேம்புவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாருங்களேன்...அப்படி என்ன தான் இங்கே வேறு இருக்கிறது என்பதனை பார்த்து விடலாம்...போகலாமா...

கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்திலுள்ள சிக்மகளூரில் காணப்படும் இந்த பத்ரா வனவிலங்கு சரணாலயம், மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் இந்த பத்ரா வனவிலங்கு சரணாலயத்தின் முக்கிய அம்சமாக அடர்ந்த காடுகள் காணப்பட, காட்டுகளின் உள்ளே வாழும் புலிகளுக்கான ஒரு பிரத்தியேகமான இடமாக இது அமைந்து, நம் கண்களை காட்சிகளால் குளிரூட்டுகிறது.
இந்த சரணாலயத்தை முத்தோடி வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைப்பர். ஆம், அங்குள்ள எல்லையில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தால் இப்படி ஒரு பெயர் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. 490 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படும் இந்த இடம், மனதை இதமாக்க காத்து கொண்டிருக்கிறது என்று நாம் கூறலாம். அதுமட்டுமல்லாமல், இங்குள்ள வனத்தில் ஓடும் பத்ரா நதியால், இத்தகைய பெயர் இந்த சரணாலயத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

பெங்களூர் டூ சிக்மகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயம்- இந்த அழகிய பயணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கள

Dineshkannambadi

இங்கே காணப்படும் முத்தோடி மற்றும் லக்காவலி பகுதிகள் மிகவும் பாதுகாக்க பட்டு வரும் இரண்டு பகுதிகளாகும். இந்திய அரசாங்கத்தால் 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பத்ரா வனவிலங்கு சரணாலயத்தின் சிறப்பம்சமாக புலிகளும் அவற்றின் வாழ்க்கையும் இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளும் நம் மனம் ஆர்வத்துடன் செல்ல தயாராகிறது.

இங்கே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1875 மீட்டர்கள் உயரத்தில் காணப்படும் உயர்ந்த சிகரம் ஒன்றில் அமைந்துள்ள கல்லஹதிகிரி என்னும் சரணாலயம் நம்மை அன்னாந்து பார்க்க வைத்து வியப்பில் ஆழ்த்துகிறது. அதுமட்டுமல்லாமல் கெம்மன்குன்டி என்னும் சிகரமும் பாபாபுதங்கிரி சிகரமும் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாக விளங்கி...சரணாலயத்தின் வரம்புகளை உட்கொண்டு விளங்குகிறது.

இந்த இடத்திற்கு நாம் பயணிக்க ஏதுவான காலங்கள்:

அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களின் இடைப்பட்ட காலங்கள், இந்த சரணாலயத்தை நாம் பார்ப்பதற்கு சிறந்த ஒரு காலமாக அமைந்து நம் மனதை அமைதிபடுத்துகிறது.
இந்த பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் தான் எவை?

காலணிகள், தொலைநோக்கிகள், புகைப்படக்கருவி, தலையில் மாட்டிக்கொள்ளும் தன்மை கொண்ட ஒளி விளக்குகள், சிற்றுண்டிகள், வாட்டர் பாட்டில்கள், தலைக்கு தேவையான தொப்பிகள், கதிரவன் ஒளியை மறைக்கும் திரைகள், பூச்சி கடியிலிருந்து காத்துக்கொள்ள தேவைப்படும் தடுப்பான்கள், மழையிலிருந்து காத்துக்கொள்ள பயன்படும் கோட்டுகள், குடை ஆகியவை நாம் பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருளாக அமைந்து நம் பயணத்தை சிறப்பிக்கிறது.

இந்த பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்கு நாம் செல்வது எப்படி?

ஆகாய மார்க்கமாக செல்வது எப்படி?

இந்த சரணாலயத்திற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையமாய் 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்களூர் விமான நிலையமும், 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரு விமான நிலையமும் நம்மை நெகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து கர்நாடக அரசு பேருந்தின் உதவியுடனோ, காரின் மூலமாகவோ நாம் பத்ரா வனவிலங்கு சரணாலயத்தை அடையலாம்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

பத்ரா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடூர் இரயில் நிலையம் தான் மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு இரயில் நிலையமாகும். அதேபோல் சிக்மகளூரில் ரயில் பாதை இல்லை என்பதனையும் நான் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

சாலை மார்க்கமாக செல்வது எப்படி?

பெங்களூரு - குனிகல் - சன்னராயபட்னா - ஹாசன் - பெளூர் - சிக்மகளூர் - பத்ரா வனவிலங்கு சரணாலயம்.

பெங்களூர் டூ சிக்மகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயம்- இந்த அழகிய பயணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கள

Dineshkannambadi

நெடுஞ்சாலை வழி:

தேசிய நெடுஞ்சாலை 75 இன் வழியாக
கால அவகாசம்:

பெங்களூரிலிருந்து 295 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தை அடைய நமக்கு சுமார் 5 மணி நேரம் 22 நிமிடங்கள் ஆகிறது.

பெங்களூரிலிருந்து அதிகாலையில் நாம் புறப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை நம்மால் தவிர்க்க முடிகிறது. ஆம், போக்குவரத்து நெரிசல் என்பது என்றுமே நிலையற்ற வானிலை போன்றது. அதனால், முன் எச்சரிக்கை விதமாக விரைந்து சென்று குனிகளை நாம் அடைவது நன்மை பயக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். குனிகளை அடையும் நாம், அங்கே பெகூர் ஏரியின் அழகை அந்த காலை பொழுதில் கண்டு, உதிக்கும் சூரியனின் முன் மனதை பறி கொடுக்கலாம். அங்கிருந்து புறப்படும் நாம், வோல்கலிகா சமூகத்தின் வழிப்பாட்டு மையம் அமைந்திருக்கும் அதிச்சுசுங்கிரியை அடைகிறோம். ஆம், இந்த இடம் பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்லும் வழியில் உள்ளது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதனால், குனிகளிலிருந்து செல்லும் நாம், இங்கே இறங்கி நம் மனதை பக்தியால் நிரப்பிக்கொண்டு செல்வது நம் பயணத்தின் அமைதியை மேலும் வழுவடைய செய்ய பெரிதும் உதவுகிறது.

ஷ்ரவணபெலகோலா என்னும் தீர்த்தம் ஜெய்ன் துறவியர்களுக்கான முக்கியமான தீர்த்தமாக அமைந்து நம்மை வழியில் விழி வைத்து ஆச்சரியபட வைக்கிறது. அதன் பின் ஹாசனை அடையும் நாம், அங்குள்ள கோரூர் அணையில் நின்று அதன் அழகை ரசித்து மெய்மறந்து நகர்கிறோம். அதேபோல், இங்கே உள்ள ஹஸ்ஸனம்ப ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்கி நம் பயணத்தின் சிறப்பை உணர்த்துகிறது. பெங்களூரிலிருந்து சிக்மகளூர் செல்லும் வழியில் காணப்படும் குறுகிய பாதையை சுற்றி பெளூர் மற்றும் ஹலிபித் ஆலயங்கள் காணப்படுகிறது.

பெங்களூர் டூ சிக்மகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயம்- இந்த அழகிய பயணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கள

Kishore328

அதேபோல், இங்கே ஹோய்சாலா ஆட்சியின் போது கட்டப்பட்ட ஆலயம் ஒன்றும் காணப்படுகிறது. இங்கே காணப்படும் கட்டிடக் கலையும், அதன் அழகும் ஈடு இணையற்ற தன்மையுடன் விளங்கி நம் மனதை இதமாக்குகிறது. நீங்கள் மலை ஏறும் ஆர்வலரா? அப்படி என்றால்... சிக்மகளூருக்கு அருகில் காணப்படும் முல்லயங்கிரி மற்றும் பாபாபுதங்கிரி சிகரங்கள் மேல் ஏற ஒருபோதும் மறவாதிர். அதுமட்டுமல்லாமல், இந்த சிக்மகளூர்... காபிக்கு பெயர் பெற்ற ஒரு இடம் என்பதனை தெரிந்துக்கொள்ளும் நாம்...கிலோ கணக்கில் வாங்கிகொண்டே முன் நோக்கி நகர்கிறோம். சிக்மகளூர் நோக்கி நாம் செல்ல இறுதியில் பத்ரா வனவிலங்கு சரணாலயத்தை அடைகிறோம்.

இங்கே காணும் காடுகள், தெற்கு வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகளாக இருக்க, அவை எந்நேரமும் ஈரப்பதத்துடனே காணப்படுகிறது. இங்கே 150க்கும் மேற்பட்ட மரங்களும் தாவரங்களும் சூழ்ந்து நம் மனதை காட்சிகளாலும் காற்றினாலும் வருடுகிறது. இங்கே காணப்படும் மரங்களுள் சில....தேக்கு, கருங்காலி மரம், நந்தி மரம், கொடிமுறுக்கு மரம், தடல்சூ மரம், மதி மரம், ஹொன்னே மரம் ஆகியவை மதி மயக்கும் அழகை கண்களுக்கு தந்து அந்த இடத்திலே நம்மை தஞ்சம் புக வைக்கிறது.

தெற்கு பகுதியில் காணப்படும் பத்ரா வனவிலங்கு சரணாலயத்தின் உள்ளே, அழகிய ஆடம்பர பறவைகளும், வண்ணத்துபூச்சிகளும், ஊர்வனவைகளும் என பார்ப்பதற்கு ஏதுவான உயிரினங்கள் நிறையவே இருக்கிறது. அதேபோல் இந்த பத்ராவில் காணப்படும் பொதுவான உயிரினங்களான...திராட்சை பாம்பும், ராஜ நாகமும், நாகப்பாம்பும், ஓநாய் பாம்பும், மூங்கில் குழி விரியன் பாம்பும், எலி பாம்பும், ஆலிவ் கீல்பேக் என்னும் பாம்பும், ரஸல் விரியன் பாம்பும், பொதுவான இந்திய தொடுதிரைகளும், வழுக்கை பல்லிகளும், சதுப்பு முதலைகளும் நிறைய காணப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ளும் நம் மனம், ஒரு வித ஆர்வத்துடனும், பயத்துடனுமே முன்னோக்கி செல்கிறது.

பெங்களூர் டூ சிக்மகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயம்- இந்த அழகிய பயணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கள

Pramodv1993

அதேபோல், பறவைகளுக்கு ரசிகராக விளங்கும் பட்டாம்பூச்சிகளும், அவற்றின் பாட்டிற்கான நடனங்களும் நம்மை வியப்பை நோக்கி இழுத்து பார்வையாளராக மாற்றி மனதை இதமாக்கிறது. ஆம், நீல பான்சி பட்டாம்பூச்சியும், பெரிய ஆரஞ்சு முனை பூச்சிகளும், தெற்கு பறவை சாரி வகைகளும், டெயில்ட் ஜெய் எனப்படும் வித்தியாச வாளை கொண்ட பட்டாம்பூச்சியும், பரோனட் எனப்படும் பட்டாம்பூச்சியும், கிரிம்சன் ரோஸ் எனப்படும் பட்டாம்பூச்சியும், யம்ப்லை எனப்படும் பட்டாம்பூச்சியும், மூங்கில் மரத்தூள் மீது அமரும் பட்டாம்பூச்சி என பல பட்டாம்பூச்சிகள் நம் மனதை சிறகுகளால் வருடி இனிமையானதோர் உணர்வினை தந்து இதமாக்குகிறது. 

அதேபோல் இந்த சரணாலயத்தில், பல பாலூட்டிகள் காணப்படுகிறது. ஆம், யானைகளும், காட்டெருமைகளும், புலிகளும், புள்ளி மான்களும், சாம்பார் மான்களும், குரைக்கும் மான்களும், காட்டு பன்றிகளும், சிறுத்தைகளும், சுட்டி மான்களும், சோம்பல் கரடிகளும், காட்டு நாய்களும், கீரிப் பிள்ளைகளும், முள்ளம்பன்றிகளும், குள்ளநரிகளும், நீண்ட வால் உடைய குரங்குகளும், குல்லாய் குரங்குகளும், மெல்லிய தேவாங்குகளும், மலபார் பெரிய அணில்களும் நிறையவே காணப்படுகிறது.

இந்த மேற்குதொடர்ச்சி மலையை வாழிடமாக கொண்ட பறவைகள் இங்கே பல. இந்த பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் கிட்டதட்ட 120 வகையான பறவைகள் காணப்படுகிறது. அவற்றுள் சில.... மயில், கவுதாரி, புறா, கிளி, பெண் மயில், தேனி உண்ணும் ஒன்று, பச்சை ஏகாதிபத்திய புறா, பெரிய கருப்பு மரங்கொத்தி, மலபார் மரகத புறா, தெற்கு பச்சை ஏகாதிபத்திய புறா, மலபார் பாராகிட் எனப்படும் பறவை, மலைக்குன்றுகளில் வாழும் மைனா, காத்தாடி போன்ற கருப்பு சிறகு கொண்ட பறவை, இன்டியன் ட்ரீ பை எனப்படும் பறவை, கருப்பு நிற பறவைப்பிடிப்பான்கள், மலபார் விசில் வெண்புண் பறவை, ஹார்ன்பில் எனப்படும் பறவை, ராக்கெட் வால் டிராகோ பறவைகள், ஷாமா பறவைகள், வண்ணம் தீட்டப்பட்ட புதர் காடைகள், சாம்பல் நிற காட்டுக்கோழி, சிவப்பு நிற ஊசிக்கோழி, வளைவான தன்மை கொண்ட நாரை பறவைகள் என பார்க்கும் இடமெல்லாம் பறவைகள் சூழ, அது நம் மனதை சிறகடிக்க வைத்து, வானில் அப்பறவைகளுக்கு போட்டியாய் பறக்க வைக்கிறது.

பெங்களூர் டூ சிக்மகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயம்- இந்த அழகிய பயணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கள

Pramodv1993

இந்த பத்ரா வனவிலங்கு சரணாலயம் என்னும் வார்த்தையை நாம் உச்சரிக்க, நம் நினைவிற்கு வருவது இங்குள்ள புலிகளும் யானைகளும் தான். இங்குள்ள பாந்திபூர் (அ) நாகர்ஹோல் புலிகளின் வண்ணம் வித்தியாசமாக ஆரஞ்ச் நிறத்தில் காணப்பட, அது நம்மை ஆச்சரியத்தை நோக்கி அழைத்து செல்கிறது. அதேபோல் ஒரு சில புலிகளின் நிறமி மஞ்சள் நிறத்திலும் காட்சியளித்து நம் மனதை வருடுகிறது.

இங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் முன்னால், நாம் மனதை பறிகொடுத்து தேடிக்கொண்டிருக்க, 'நான் இருக்கிறேன் உங்களுக்கு...' என ஜீப் சவாரிகளும் நம்மை அன்புடன் வரவேற்று மனதை கவர துடிக்கிறது. அதேபோல் தண்ணீர் சாகசங்களான... ஜெட் வேக பனிச்சறுக்கும், தோல்படகு சவாரியும் என பற்பல விளையாட்டு அம்சங்கள் நிறைந்த ஒரு பயணமாகவும் இது நமக்கு அமைகிறது.

பெங்களூர் டூ சிக்மகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயம்- இந்த அழகிய பயணத்தைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கள

அவற்றுள் இன்னும் சில....மலையேறுதல், தீவு முகாமில் தங்கி நேரத்தை செலவிடல், பறவைகளின் அழகை பார்ப்பது, கயிற்றைகொண்டு மலைஏறுவது என செல்லும் இடமெல்லாம் காணும் பொழுது போக்குகளால் நம் உள்ளம் துள்ளும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. 'இப்பேற்பட்ட அழகிய இடத்திற்கு நாம் மீண்டும் எப்பொழுது வருவோம்?' என்னும் ஏக்கமும்... மூளையின் ஒரு ஓரத்தில் பதிய, நினைவுகளை தேக்கி கொண்டு ஏக்கத்துடன் புறப்படுகிறது நம் மனம்.

வெறும் 3111 ரூபாய்க்கு வெளிநாட்டவருக்கு விலைபோன ஊரின் கதை தெரியுமா?

மதுரையை எரித்த பிறகு கண்ணகி எங்கே சென்றாள் என்று தெரியுமா ??

என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? அப்போ இங்க போங்க

ஜென்ம நட்சத்திரம்... இன்று நீங்க போக வேண்டிய கோவில் இதுதான்!

பெங்களூர்- கன்னியாகுமரி ஒரு சூப்பர் டூர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா? இத படிங்க

Read more about: travel forest