Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு நாள் பயணத்திற்கான பெஸ்ட் ஐடியாக்கள் – இந்த இடங்களைப் பார்க்க தவறாதீர்கள்!

ஒரு நாள் பயணத்திற்கான பெஸ்ட் ஐடியாக்கள் – இந்த இடங்களைப் பார்க்க தவறாதீர்கள்!

எப்போதும் மிகவும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் நகரம் - பெங்களூர்! எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்க முடியாது. நம் உயிருக்கு புத்துணர்ச்சி அளிக்க அவ்வப்போது சில இடைவெளிகளை நாம் எடுத்து தான் ஆக வேண்டும்.

பெங்களூருவில் எண்ணற்ற பொழுதுபோக்குகள் நிறைந்து இருந்தாலும், எல்லோருக்கும் வார இறுதியை சரியாக கழிக்க நேரமோ வசதியோ அமைவது இல்லை! ஏன் சிலரால் திட்டமிட்டுக் கூட ட்ராபிக், மழை போன்ற காரணங்களால் வெளியே வர முடிவது இல்லை! ஆனால், அரை நாள் அல்லது ஒரு நாளில் ஒரு குட்டி ட்ரிப் போக வேண்டும் என்று ஐடியா இருந்தால், அதற்கு நிறைய வழிகள் உள்ளன.

பெங்களூருவைச் சுற்றி ஒரு சின்ன அவுட்டிங் சென்று வர ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. அரண்மனைகள் முதல் கோட்டைகள் வரை, இயற்கையான பாறைகள் முதல் மலைகள் வரை, ஏரிகள் முதல் நீர்வீழ்ச்சிகள் வரை, பெங்களூரைச் சுற்றி கிட்டத்தட்ட அனைத்துமே உள்ளன அந்த சிறந்த இடங்களிலும் மிகச் சிறந்த இடங்களை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்!

உங்கள் அன்புக்குரியவரோடோ அல்லது நண்பர்களுடனோ அல்லது தனியாக செல்ல வேண்டும் என்று தோன்றினாலோ இந்த இடங்கள் யாவும் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்!

நந்தி ஹில்ஸ்

நந்தி ஹில்ஸ்

பெங்களூரைச் சுற்றி ஒரு நாள் பயணத்திற்கான சிறந்த இடங்களில் முதன்மையானது நந்தி ஹில்ஸ் ஆகும். பெங்களூருக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற வார விடுமுறை இடமாக மட்டுமே இல்லாமல், நந்தி ஹில்ஸ் திப்பு கோட்டையின் மிச்சங்கள் மற்றும் பழங்கால கோவில்களுடன் வரலாற்று ஆர்வலர்களுக்கான இடமாகவும் உள்ளது.

அழகான மலைகள் பின்னணியில் சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தைக் காணுவது, நந்தி மலைகளுக்கு இடையே பாராகிளைடிங் செய்வது, செங்குத்தான சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது, மேகங்களுக்கு நடுவே நடந்து செல்வது என உங்களின் சோர்ந்து போன உயிருக்கு ஊட்டம் அளியுங்கள்.

பன்னர்கட்டா தேசிய பூங்கா

பன்னர்கட்டா தேசிய பூங்கா

பெங்களூருவிற்கு அருகே ஒரு நாளில் பார்க்கக்கூடிய இடங்களில் இந்த பன்னர்கட்டா தேசிய பூங்காவும் ஒன்றாகும். பல விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு உறைவிடமாக இருக்கும் இந்த பூங்காவிற்கு உங்கள் செல்லபிராணிகளோடு செல்லலாம்.

பல்வேறு விலங்கினங்களை கண்டு களிப்பதோடு, நீங்கள் இங்கு பட்டாம்பூச்சி பார்க், அக்வேரியம், குழந்தைகள் பூங்கா, அருங்காட்சியகம், வனவிலங்கு சஃபாரி ஆகியவற்றிலும் நேரத்தை செலவிடலாம். புத்துணர்ச்சி மற்றும் சாகசத்திற்கு ஏற்ற பன்னர்கட்டா தேசிய பூங்கா பெங்களூர் நகரத்தில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

மஞ்சின்பெலே

மஞ்சின்பெலே

பெங்களூரில் இருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ள மஞ்சின்பெலே ஒரு சிறிய நீர் தேக்கமாக பெங்களூரு மக்களிடையே மிகவும் ஃபேமஸ். பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய ஓய்வு எடுக்க, உயிருக்கு புத்துணர்ச்சி அளிக்க மஞ்சின்பெலே பல சாகச நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

இங்கு நீங்கள் கயாக்கிங், ராப்பல்லிங், ட்ரெக்கிங் மற்றும் ராஃப்டிங் ஆகியவற்றில் நீங்கள் ஈடுபடலாம்.இதில் உங்களுக்கு அவ்வளவு நாட்டம் இல்லையென்றால் உங்களைச் சூழ்ந்திருக்கும் அமைதியான சூழ்நிலையிலும் இயற்கை அழகிலும் திளைப்பதன் மூலம் நீங்கள் உங்களை மகிழ்விக்கலாம்!

வொண்டர்லா

வொண்டர்லா

உங்கள் முழு குடும்பத்துடன் வொண்டர்லாவிற்கு வருகை தந்து, உங்கள் வாரயிறுதியை மகிழ்ச்சியான தருணங்களுடன் அட்டகாசமாக மாற்றிட நீங்கள் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருகை தர வேண்டும்.

ரோலர் கோஸ்டர்கள், ஜியான்ட் வீல், ரேஞ்சர் மற்றும் பல்வேறு நீர் விளையாட்டுகள் அடங்கிய வொண்டர்லாவில் பொழுதுபோக்கு அம்சங்கள் குவிந்து கிடக்கின்றன.

ராமநகரா

ராமநகரா

நாட்டுப்புற கலைப்பொருட்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ள கலாச்சார ஆர்வலர்கள் அனைவருக்கும், ஜனபத லோகம் ஒரு சிறந்த தேர்வாகும்.

பல்வேறு கண்காட்சிகள் மூலம் பிராந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால வேட்டை உபகரணங்கள், பாரம்பரிய வீட்டுப் பொருட்கள், துடிப்பான பொம்மலாட்டங்கள்மற்றும் திருவிழாவை மையமாகக் கொண்ட பொருட்கள் ஆகியவற்றை நீங்கள் இங்கே காணலாம்.

ஸ்கந்தகிரி

ஸ்கந்தகிரி

தெளிவான, விண்மீன்கள் நிறைந்த வானத்தின் கீழ் உறங்குவது, ஸ்டார்கேஸிங் செய்வது அல்லது மலை உச்சியில் இருந்து மகிமையான சூரிய உதயத்தைப் பார்ப்பது உங்களுக்கு பிடிக்குமென்றால் நீங்கள் பெங்களூருவில் இருந்து 61 கிமீ ஸ்கந்தகிரிக்கு தான் செல்ல வேண்டும்.

ஸ்கந்தகிரியின் உச்சிக்கு ட்ரெக்கிங் என்பது ஒரு பரவசமான அனுபவமாகும், இது இயற்கை அழகின் காரணமாக மட்டுமல்ல, ஒரு காலத்தில் கம்பீரமான திப்பு சுல்தானின் கோட்டைமற்றும் ஒன்றிரண்டு கோவில்களின் இடிபாடுகளையும் காணலாம்.

ஒயின் டூர்

ஒயின் டூர்

சோர்வு தரக்கூடிய உங்கள் அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து, பெங்களூருக்கு அருகில் 47 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த ஒயின் தயாரிக்கும் இடத்திற்கு சென்று வாருங்கள்.

ஒயின் தயாரிப்பின் வரலாறு, சாகுபடி எவ்வாறு செய்யப்படுகிறது, ஒயினை பதப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள படிகள், பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்கின் முக்கியத்துவம் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் நீங்கள் வசீகரமான திராட்சைத் தோட்டத்தை சுற்றிப் பார்க்கலாம். மேலும் அங்கு தயாரிக்கப்படும் பலவிதமான ஒயினையும் நீங்கள் சுவைக்கலாம். இது நிச்சயம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

பால்முரி மற்றும் எட்முரி நீர்வீழ்ச்சி

பால்முரி மற்றும் எட்முரி நீர்வீழ்ச்சி

இந்த இடம் பெங்களூரு நகரில் இருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, இலக்கை அடைய 2 மணி நேரம் ஆகலாம். ஆனால் அங்கு சென்று அதன் அழகில் நனையும் போது உங்களுக்கே தெரியும், இதற்கு இன்னும் சிரமப்பட்டாலும் தவறில்லை என்று!

இந்த அழகிய நீர்வீழ்ச்சிகள் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட செக் டேம் காரணமாக நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தி, பசுமையால் சூழப்பட்டு பெங்களூருக்கு அருகிலுள்ள சிறந்த ஒரு நாள் சுற்றுலா தலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.நீங்கள் தண்ணீரில் குதூகலமாக விளையாடலாம் மற்றும் பச்சை வயல்களில் நடந்து செல்லலாம்.

கொக்கரே பெல்லூர் பறவைகள் சரணாலயம்

கொக்கரே பெல்லூர் பறவைகள் சரணாலயம்

நீங்கள் தீவிர பறவை ஆர்வலராக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக கொக்கரே பெல்லூர் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல வேண்டும். பெங்களூருக்கு அருகிலுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இந்த சரணாலயத்தில் நீங்கள் பலவிதமான அழகிய மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளைக் காணலாம்.

ஸ்பாட் பெலிகன்கள், பல வண்ண நாரைகள் மற்றும் கொக்குகள் ஆகியவற்றையும் நீங்கள் கண்டு மகிழலாம்.

சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி

சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி

பெங்களூரில் ஒரு நாள் விடுமுறைக்கு பார்க்க வேண்டிய மிக அழகிய இடங்களில் ஒன்றான சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி காவேரி நதியால் உருவாக்கப்பட்ட இரண்டு பல அடுக்கு நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.ககனசுக்கி மற்றும் பரச்சுக்கி ஆகிய இரண்டு நீர்வீழ்ச்சிகளும் சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகின்றன.

இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் இல்லை என்றாலும், ஒவ்வொன்றிற்கும் 15 கிமீ தொலைவில் தனித்தனியான அழகான பாதைகள் உள்ளன. நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் தற்காலிமாக முகாமிட்டு நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம்.

இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் இல்லை என்றாலும், ஒவ்வொன்றிற்கும் 15 கிமீ தொலைவில் தனித்தனியான அழகான பாதைகள் உள்ளன. நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் தற்காலிமாக முகாமிட்டு நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம்.

Read more about: bangalore karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X