Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தில் தலைசிறந்த 10 சிவன் தலங்கள்... பட்டியல் இதோ...

தமிழகத்தில் தலைசிறந்த 10 சிவன் தலங்கள்... பட்டியல் இதோ...

சிவ பெருமானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும். இந்த அன்டத்தைக் காக்கும் சிவக்கோ பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ஈசனே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், இந்த உலகித்தில் உள்ள உயிர்களையும் தோற்றுவிக்கிறார். சைவ சமய மக்களுக்கு உரியவராகவும், சமய புராணங்களிலும், இந்து தொன்மவியலிலும் கடவுளாகவும் சிவன் கருதப்படுகிறார். சிவபெருமானை லிங்கவடிவில் வழிபடுவது தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. நம் நாட்டில் இவரது வழிபாடு லிங்கம், உருவம் என பல வகைகளில் உண்டு. அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிகம் சிவன் கோவில் உள்ள மாநிலம் நம் தமிழகம் என்றால் மிகையாகாது. அப்படி, தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த 20 சிவ தலங்கள் எதுவென்று பார்க்கலாம்.

தியாகராஜர் கோவில்

தியாகராஜர் கோவில்

சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ளது தியாகராஜர் கோவில். பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலினை 11-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் புதுப்பித்து விரிவுபடுத்தியுள்ளார். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோவிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டது என்பது சிறப்புடையது.

Mohan Krishnan

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

மயிலாடுதுறையிலேயே பெரிய கோவிலாக சிவனுக்காக அர்ப்பனிக்கப்பட்ட இந்த மாயூரநாத சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான சான்றாக குலோத்துங்க சோழர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. இடைப்பட்டக் காலத்தில் இக்கோவில் புனரமைக்கப்பட்டிருந்தாலும் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றும் தனது பொழிவை இலக்காமல் உள்ளது.

Ssriram mt

 ஜம்புகேசுவரர் கோவில், திருவானைக்காவல்

ஜம்புகேசுவரர் கோவில், திருவானைக்காவல்

திருவானைக்காவல் கோவிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் ஆலையத்தின் பிரகாரத்தில் சுயம்புவாக தோன்றிய அப்புலிங்கமாக சிவபெருமாள் காட்சியளிக்கிறார். இந்த லிங்கம் இருக்குமிடத்தில் இருந்து வருடத்தின் எந்த நேரமும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுக் கொண்டே இருப்பது இத்தலத்தின் சிறப்பாக உள்ளது. சுமார் 18 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த கோவில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரால் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு என தனி சன்னதியும் உள்ளது.

Ssriram mt

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில், கடலூர்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில், கடலூர்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில். தமிழகத்தில் உள்ள உள்ள எட்டு வீர சைவக் கோவில்களிள் இந்தக் கோவிலும் ஒன்றாகும். இத்திருத்தலத்தின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டியதாக வரலாறு உள்ளது.

Ssriram mt

நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி

தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவன் கோவில் என்றால் அது திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் தான். பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 களில் கட்டப்பட்ட இக்கோலில் சிவனுக்கும், பார்வதி அம்மையாருக்கும் என தனித் தனியே சன்னதிகள் உள்ளது. இரண்டு சன்னதிகளும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன.

Theni.M.Subramani

தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்

தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்

நம் உயிரை காக்கும் உடலை கோவிலாக மதிக்கும வகையில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளைக் கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. அதேவேளை மனிதனுக்கு இதயம் இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோவிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறார்.

Varun Shiv Kapur

பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

தமிழகத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்கள் எத்தனை இருந்தாலும் அதில் தஞ்சை பெரிய கோவில் தனிச் சிறப்பு மிக்கது. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் வெற்றியின் அடையாளமாக பல கோவில்களைக் கட்டினார். அவற்றில் சிறந்த கலையை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி அவர் மிகுந்த முனைப்புடன் பிரகதீஸ்வர் கோவிலைக் கட்டமைத்தார். கோவில் முழுக்க காணப்படும் நுணுக்கமான கைவினை, வடிவமைப்பு, போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோவிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன.

Jean-Pierre Dalbéra

 தியாகராஜசுவாமி திருக்கோவில், திருவாரூர்

தியாகராஜசுவாமி திருக்கோவில், திருவாரூர்

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்றுதான் தியாகராஜசுவாமி கோவில். ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவிலின் மூல கருவரையினை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதி வன்மிகிநாதர் என்ற பெயலும், மற்றொன்று தியாகராஜர் என்ற சிவபெருமானும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில் வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக ஒரு புற்று உள்ளது.

Srinivasan G

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்

சென்னையிலில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது வேதகிரீஸ்வரர் கோவில். சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ள மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய தலமாகும். அதுமட்டுமின்றி 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Raj

ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு

ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு

தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரகத் தலங்களில் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில் நான்காவது தலமாகும். இந்தக் கோவில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கல் மூலம் அறியப்படுகிறது. இக்கோவிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கப்படுகிறது.

Ssriram mt

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X