Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரு நகரின் அலுத்து சலித்துப்போன வாழ்க்கையிலிருந்து வெளியேறி மக்கள் எங்கே செல்கிறார்கள் தெரியும

பெங்களூரு நகரின் அலுத்து சலித்துப்போன வாழ்க்கையிலிருந்து வெளியேறி மக்கள் எங்கே செல்கிறார்கள் தெரியும

பெங்களூரு நகரின் அலுத்து சலித்துப்போன வாழ்க்கையிலிருந்து வெளியேறி மக்கள் எங்கே செல்கிறார்கள் தெரியுமா?

தலைப்பைப் பார்த்ததுமே ஏதோ பெங்களூர் நகரை காலி செய்துவிட்டு மக்கள் அனைவரும் வெளியூருக்குப் போகிறார்கள் என எண்ணிவிடவேண்டாம். பெங்களூருவின் வாரவிடுமுறைகளில் கூட்டம் அலைமோதும் இடமான ஒரு சுற்றுலா மையத்தைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 132 கிலோமீட்டர் தொலைவிலும், பீமேஸ்வரி மீன்பிடி முகாமிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது தொட்டம்கலி பகுதி. இந்தப் பகுதி காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருப்பதால் மீன் பிடிப்பது, பறவைகளை ரசிப்பது, சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது என்று சுற்றுலாப் பயணிகள் தங்கள் அலுத்தும் சலுத்தும் போன நகர வாழ்க்கையின் அருமருந்தாகவே தொட்டம்கலியை கருதுகின்றனர்.

தொட்டம்கலியில் நீர் வாழ் பறவைகள் முதல் நில வாழ் பறவைகள் வரை எண்ணற்ற பறவை இனங்கள் காணப்படுகின்றன. இங்கு நீங்கள் கருப்பு வயிற்று கடற்பறவை, விரலடிப்பான், சாம்பல் தலை மீன் கழுகு, பல வண்ண முகட்டுக் குயில், பழுப்பு கழுகு, பல வண்ண மீன்கொத்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அரிய பறவை இனங்களை நீங்கள் தொட்டம்கலியில் கண்டு ரசிக்கலாம்.

 ஜங்கிள் சஃபாரி

ஜங்கிள் சஃபாரி

தொட்டம்கலியில் ஏற்பாடு செய்யப்படும் ஜங்கிள் சஃபாரியில் நீங்கள் காட்டுப்பன்றி, சாம்பார் மீன், புள்ளி மான், ராட்சஸ அணில், சிறுத்தை, யானை, மலபார் ராட்சஸ அணில், குள்ள நரி போன்ற விலங்குகளை ரசித்துப் பார்க்கலாம். அதோடு முதலைகள், ஆமைகள், பச்சோந்திகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளையும் தொட்டம்கலியில் பார்க்கலாம்.

Nativeplanet

 காவிரி நதி

காவிரி நதி

தொட்டம்கலி பகுதியில் காவிரி நதி தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு ஒரு குளம் போன்ற அமைப்பை உருவாக்குவதால் நீங்கள் இங்கு மீன் பிடித்து பொழுதுபோக்குவது இனிமையான அனுபவத்தை தரும். இங்கு மகாசீர் என்ற மீன் இனம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இப்பகுதியில் 'பிடித்து விடும்' முறை பின்பற்றப்படுவதால் அவற்றை பிடித்த பின் மீண்டும் ஆற்றில் விட்டு விடவேண்டும்.

wiki

 பரிசல் மற்றும் படகுப்பயணம்

பரிசல் மற்றும் படகுப்பயணம்

தொட்டம்கலி பகுதியில் காவிரி ஆற்றின் சீற்றத்துக்கு எதிராக பரிசல் மற்றும் படகுப்பயணம் செல்வது, மவுண்டெயின் பைக்கிங், டிரெக்கிங் என்று சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது சாகசப் பயணிகளிடையே பிரபலமான பொழுதுபோக்குகளாக இருந்து வருகின்றன. அதோடு தொட்டம்கலியின் காட்டுப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக வசித்து வரும் சோலிகா எனும் பழங்குடி மக்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

wiki

மீன் பிடிப்பது

மீன் பிடிப்பது


தொட்டம்கலியில் மீன் பிடிப்பது, பரிசல் பயணம் செல்வது, ஜங்கிள் சஃபாரி சென்று விலங்குகளை கண்டு ரசிப்பது என்று அத்தனையையும் முடித்துக் கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய இடம் தொன்மையான சிவன் கோயிலின் சிதைவுகள் இருக்கும் இடம். மேலும் தொட்டம்கலி பகுதிக்கு வெகு அருகாமையில் இருக்கும் பீமேஸ்வரி மீன்பிடி முகாம், சங்கமம் போன்ற பகுதிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

wiki

 சிறந்த காலம்

சிறந்த காலம்

பெங்களூரிலிருந்து மூன்று மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கும் தொட்டம்கலி பகுதியை ஜூலை, ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மாதங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


விமானம் மூலம்
தொட்டம்கலி பகுதி பீமேஸ்வரி மீன்பிடி முகாமிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பீமேஸ்வரி மீன்பிடி முகாமின் அருகாமை விமான நிலையமாக பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது.


ரயில் மூலம்
பீமேஸ்வரி மீன்பிடி முகாமிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூர் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் பீமேஸ்வரி மீன்பிடி முகாமுக்கு வந்து சேர்ந்த பிறகு டிரெக்கிங் மூலம் வெகு சுலபமாக தொட்டம்கலி பகுதியை அடைந்து விடலாம்.


சாலை மூலம்
பெங்களூரிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் பீமேஸ்வரி மீன்பிடி முகாமுக்கு இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் பீமேஸ்வரி மீன்பிடி முகாமுக்கு வந்து சேர்ந்த பிறகு டிரெக்கிங் மூலம் சுலபமாக தொட்டம்கலி பகுதியை அடைந்து விடலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X