Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதியில் கோலாகலமாக துவங்கும் வருடாந்திர பிரமோத்சவம் – தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்!

திருப்பதியில் கோலாகலமாக துவங்கும் வருடாந்திர பிரமோத்சவம் – தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்!

திருப்பதியில் ஆண்டுதோறும் மிக கோலாகலமாக புரட்டாசி மாதத்தில் 'ஏழுமலையான் பிரமோத்சவம்' நடைபெறுகிறது. பிரமோத்சவ நாட்களில் திருப்பதியில் திரளும் பக்தர்களின் எண்ணிக்கையானது பல லட்சங்களை தாண்டும். 2024 ஆம் ஆண்டுக்கான பிரமோத்சவ திருவிழா அக்டோபர் 4 ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளன! இந்த பிரமாண்ட நிகழ்வில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமா?

கோலாகலமாக துவங்கும் பிரமோத்சவ திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருப்பதி

திருப்பதியில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில்நிலையம், தேவஸ்தான நிர்வாகஅலுவலகம் உட்பட முக்கிய கூட்டுச்சாலைகளிலும், திருச்சானூர்-திருப்பதி சாலை, சித்தூர்-திருப்பதிசாலைகளிலும் மின் விளக்குஅலங்காரங்கள் செய்யப்பட் டுள்ளன. இதேபோல், அலிபிரி நுழைவு வாயில் உட்பட மலைப்பாதை, நடைபாதை, திருமலையில் மாட வீதிகள், கோயில் கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் அலங்கார தோரணங்கள், கட் அவுட்கள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் திருப்பதி, திருமலை மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.

tnstcoperationspecialbusestotirupati1

ஆகம விதிகளின்படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள்

ஆந்திர அரசு சார்பில் நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்ளார். பிரம்மோற்சவத்தை ஒட்டி, இன்று ஆகம விதிகளின்படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அங்குரார்பணம் என்பது ஒரு முக்கியமான விதை ஊஞ்சல் திருவிழாவாகும், இது பிரம்மோற்சவத்தின் முன்னோடியாக அனுசரிக்கப்படுகிறது. இது 'பலிகாஸ்' எனப்படும் பாத்திரங்களைப் பயன்படுத்தி மங்களத்திற்காக இரவில் விதைகளை விதைப்பதை உள்ளடக்கியது. "இந்த சடங்கின் சாராம்சம், ஒரு திருவிழாவை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கும், மூல தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கும் ஒரு சங்கல்பம் செய்வதாகும்.

ஒவ்வொரு நாளும் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளும் ஏழுமலையான்

இதனைத் தொடர்ந்து விஸ்வக்சேனர் 4 மாட வீதிகளில் உலா வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிடுவார். ஒவ்வொரு நாளும் சிறப்பு வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அன்று மாலை முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளனர். பின்னர், பிரம்மோற்சவத்தின் முதல்நாள் இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் 12 ஆம் தேதி வரைநடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவத்துக்கு 5,140 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

tirupati

அக்டோபர் 4 முதல் 12 வரை திட்டமிடப்பட்ட பிரம்மோஸ்தவம்

திருமலையில் உள்ள புனித கோவிலில் அக்டோபர் 4 முதல் 12 வரை திட்டமிடப்பட்ட பிரம்மோஸ்தவம் திருவிழாவில் ஆலய சுத்தி, த்வஜாரோஹணம், வாகன சேவை, ஸ்ரீவாரி கொலுவு, ஸ்நாபனம் மற்றும் பல விழாக்கள் அடங்கும். ஆலய சுத்தி என்பது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலை பிரம்மோஸ்தவம் தொடங்குவதற்கு முன் சுத்தப்படுத்துவது, துவஜாரோஹணம் என்பது பிரம்மோஸ்தவம் தொடங்குவதைக் குறிக்கும் கொடிகளை ஏற்றுவது மற்றும் வாகன சேவை என்பது திருமலை வீதிகளில் தெய்வத்தை ஊர்வலம் செய்வது. திருமலை கோவிலில் பாரம்பரிய ஆலய சுத்திகரிப்பு நிகழ்ச்சியான கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை மிகுந்த சமய உற்சவத்துடன் நடைபெற்றது.

திருமலைக்கு வாகனங்களில் செல்லத் தடை

கருட சேவையை முன்னிட்டு அக்டோபர் 7 ஆம் தேதி இரவு 9 மணி முதல், 9 ஆம் தேதி காலை 6 மணி வரை திருப்பதி கோவிலுக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

tnstcoperationspecialbusestotirupati

சிறப்பு பேருந்துகள் இயக்கம் TNSTC

2024-ம் ஆண்டு திருப்பதி திருமலையில் "பிரம்மோத்ஸவம்" திருவிழா அக்டோபர் 4 முதல் 12 வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 30 ஆம் தேதி முதல் அக்டொபர் 13 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.

மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது . இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+