» »லடாக் மட்டுமல்ல இந்தியாவில் இன்னும் பல இடங்கள் இருக்கு.. உங்க பைக் ரைடிங் விருப்பத்துக்கேற்ப!!!

லடாக் மட்டுமல்ல இந்தியாவில் இன்னும் பல இடங்கள் இருக்கு.. உங்க பைக் ரைடிங் விருப்பத்துக்கேற்ப!!!

Written By: Udhaya

பைக் ரைடிங் என்றாலே அலாதி ஆவல் கொள்பவரா நீங்கள். அப்போ இது உங்களுக்கான கட்டுரைதான். 

இந்தியாவில் எங்கெல்லாம் டாப் கியரில் பைக் ரைடிங்க் போகலாம்னு நீங்க தெரிஞ்சி வச்சிருக்கீங்களா? இந்த கட்டுரைய படிங்க!

கொல்லிமலை, தமிழ்நாடு

கொல்லிமலை, தமிழ்நாடு

கொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இவ்வழகிய மலைத்தொடரை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

PC:Pravinraaj

கொல்லும் மலை

கொல்லும் மலை

கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த 'ஓரி திருவிழா' நிறைய மக்களை இப்பகுதிக்கு வரவழைக்கிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாசிலா அருவியும், சுவாமி பிரவானந்தா ஆசிரமமும் இங்கு அமைந்திருக்கும் மேலும் இரண்டு சுற்றுலா இடங்களாகும்.

PC:Pravinraaj

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


கொல்லிமலைக்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. கொல்லிமலையில் கோடைகாலங்களிலும் ரம்மியமான தட்பவெட்ப நிலையே நிலவுகிறது. குளிர்காலங்களில் பனி மிக அதிகமாக இருப்பதால் குளிர் மற்றும் மழைக்காலங்களில் கொல்லிமலைக்கு பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.

வால்பாறை

வால்பாறை

தமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

PC:Thangaraj Kumaravel

சுற்றி இருக்கும் சுற்றுலா தளங்கள்

சுற்றி இருக்கும் சுற்றுலா தளங்கள்

வால்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, நீரார் அணை, கணபதி கோவில், அன்னை வேளாங்கன்னி ஆலயம், சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் இன்னும் சுற்றுலாப் பயணிகளால் அணுக முடியாத இடத்தில் இருக்கின்றன.

PC:Dilli2040

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சாலைவழியாகவும், தொடர்வண்டி வழியாகவும் வால்ப்பாறை நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. வால்ப்பாறைக்கு நெருக்கமான விமானநிலையம், 120 கி.மீ. தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் விமானநிலையம்.

சாலை வழியாக வால்ப்பாறைக்கு செல்வது மிகவும் சுலபம். கோயம்புத்தூரில் இருந்து சொகுசு வாகனங்கள் ஏற்கக்கூடிய கட்டணத்தில் உங்களை வால்ப்பாறைக்கு அழைத்துச் செல்லும்.

மும்பை - கோவா

மும்பை - கோவா

தேசிய நெடுஞ்சாலை எண் 17 வழியாக செல்வதென்பது பலருக்கு அலாதியான பிரியம். அதிலும் பைக் ரைடிங் மிகவும் திரில்லாக அமையும். இந்த சாலை மும்பையிலிருந்து கோவா வரைமட்டுமல்ல, கேரளா வரை நீள்கிறது.


PC:Ankur P

சிறந்த காலம்

சிறந்த காலம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் இந்த பைக் ரைடிங்க்கு ஏற்ற காலமாகும்


PC:Tomas Belcik

 செல்லும் தொலைவு

செல்லும் தொலைவு

இந்த இரு எல்லைகளுக்கிடைப்பட்ட தொலைவு 591கிமீ ஆகும். இதனால் உங்களுக்கு மிகச் சிறந்த பயண அனுபவம் கிடைக்கும்.


PC: Alma Ayon

டார்ஜிலிங் சிக்கிம்

டார்ஜிலிங் சிக்கிம்

நெடுந்தூரம் பைக் ரைடிங் செல்ல மற்றுமொரு சிறந்த சாலை டார்ஜிலிங்கிலிருந்து சிக்கிம் செல்லும் பாதையாகும். இயற்கை அழகையும், குளுமையையும் அனுபவித்தவாறே இந்த பாதையில் செல்லலாம்.

 லடாக்

லடாக்

பொதுவான பைக் ரைடர்களுக்கு லடாக் என்பது சிறந்த பாதை என்பது தெரியும். நீங்கள் புதியவர் என்றால் சென்று பாருங்கள் அதன் அருமை புரியும்


PC:Simon Matzinger

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

வானிலையும், ஈரப்பதமும் முன்கூட்டியே கணிக்கமுடியாத அளவு இருக்கும். எனினும் உங்களுக்கு தேவையான உபகரணங்களுடன் ஜாலியா ஊர் சுற்றுலாம்.

PC:Praveen

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு


ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இந்த ஸ்பிதி எனும் சுற்றுலாத்தலம் நிலப்பகுதியிலிருந்து வெகுதொலைவில் வீற்றிருக்கும் மலைப்பள்ளத்தாக்குப் பகுதியாகும். ஸ்பிதி எனும் பெயருக்கு ‘இடைப்பட்ட நிலப்பகுதி' என்பது பொருளாகும். திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே அமைந்துள்ளதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது.


PC:Wolfgang Maehr

 செல்லுங்கள்

செல்லுங்கள்

உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளுக்கு மத்தியின் புராதனத்தின் எழில் வடிவமாக காட்சியளிக்கும் இந்த மடாலய ஸ்தலத்தில் கால் பதிக்கும் நாம் மீண்டும் பிறந்தவர்களாவோம்.


PC:Simon

ஜெய்ப்பூர் - ஜெய்சால்மர்

ஜெய்ப்பூர் - ஜெய்சால்மர்

இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.


pc:KIDKUTSMEDIA

காலம்

காலம்

ஜெயப்பூரிலிருந்து 614 கிமீ தொலைவில் உள்ளது ஜெய்சல்மர்.
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையில் உள்ள காலங்கள் பயணத்துக்கு சிறந்ததாகும்.

டெல்லி - ரந்தாம்பூர்

டெல்லி - ரந்தாம்பூர்

இரண்டு வகையான கலாச்சாரங்களை காணும் வகையில் அமைந்துள்ளது இந்த பயணம்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இயற்கை எழில்நிறைந்த கண்கவர் சுற்றுலாத் தலமான ரணதம்போர், ரத்தம்போர் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது சவாய் மாதோபூர் நகரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது. ‘ரண்' மற்றும் ‘தம்போர்' எனும் இரண்டு மலைகளுக்கிடையே அமைந்திருப்பதால் இந்த இடத்துக்கு ரணதம்போர் எனும் பெயர் வந்துள்ளது.

PC:NH53

செல்லும் வரைபடம்

செல்லும் வரைபடம்

டெல்லியிலிருந்து 385 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ரந்தாம்பூர். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலம் பயணத்துக்கு ஏற்ற காலமாகும்

Read more about: travel
Please Wait while comments are loading...