Search
  • Follow NativePlanet
Share
» »மகாராஷ்டிராவில் மலையேற்றம் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

மகாராஷ்டிராவில் மலையேற்றம் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

மகாராஷ்டிரா என்றாலே மும்பை நகரம் மட்டுமே நம்மில் பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும். மும்பையை தவிர்த்த மகாராஸ்டிராவில் இருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலங்கள் பற்றி அதிகம் வெளியே தெரிவதில்லை.பருவ மழை காலங்களிலும் குளிர் காலத்திலும் மகாராஷ்டிராவில் சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்கள் உண்டு. இங்கிருக்கும் மலை குன்றுகள் பலவற்றிலும் புராதன கோட்டைகள், வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்கள் மற்றும் இடங்கள் நிறையவே உண்டு. வாருங்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ஐந்து சிறந்த மலைவாசஸ்தலங்களுக்கு ட்ரெக்கிங் செல்லலாம்.

மதேரன்:

மகாராஷ்டிராவில் மலையேற்றம் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: Magiceye

மும்பை மற்றும் புனே நகரவாசிகளிடம் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் தான் இந்த மதேரன். வார விடுமுறையை கழிக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்ற மலைவாசஸ்தளமாக இந்த இடம் விளங்குகிறது. மும்பையில் இருந்து 90 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கும் மதேரனில் மலையேற்றம் செய்ய புதிதாக முயற்சி செய்பவருக்கும் சரி, ஏற்கனவே நன்கு பழக்கப்பட்டவருக்கும் சரி அவரவர் திறனுக்கு ஏற்ற சுலபமான மற்றும் கடினமான மலையேற்றப் பாதைகள் இருக்கின்றன. மலையேற்றம் செய்த முன் அனுபவம் இல்லாதவர்கள் நேரல் முதல் மதேரன் வரையிலான பாதையை தேர்ந்தடுக்கலாம். முன் அனுபவம் இருப்பவர்கள் துதானியில் இருந்து மதேரனை நோக்கி செல்லும் பாதையை தேர்ந்தெடுக்கலாம்.

கர்லா குகைகள்:

மகாராஷ்டிராவில் மலையேற்றம் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: Niyati Bane

பேரழகு வாய்ந்த இயற்கை மற்றும் தொன்மை நிறைந்த வரலாற்றின் அற்புத கலவையாக இருக்கின்றன புனே நகருக்கு அருகில் இருக்கும் இந்த கர்லா குகைகள். புனே நகரில் இருந்து 46 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த குகைகளை அடைய முதலில் பாரக்ளிடிங் சாகச விளையாட்டுக்கு பெயர்போன கம்ஷேட் நகரை முதலில் அடைந்து அங்கிருந்து 22 கி.மீ தொலைவில் இருக்கும் ப்ஹாஜா கிராமத்தை அடைந்து அங்கிருந்து கர்லா குகைகளை மலையேற்றப் பயணத்தின் மூலம் அடையலாம். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த மத சிற்பங்கள் உள்ள கர்லா குகையில் ஒரு நாள் முழுக்க ஆர்வத்துடன் கழிக்கலாம்.

ரதங்கட் கோட்டை:

மகாராஷ்டிராவில் மலையேற்றம் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: Elroy Serrao

மராடியத்தின் ஆகச்சிறந்த அரசர்களில் ஒன்றான சத்ரபதி சிவாஜி அவர்களின் முக்கிய கோட்டைகளில் ஒன்று தான் இந்த ரதங்கட் கோட்டை. மும்பை மற்றும் புனே நகரங்களில் இருந்து 200 கி.மீ தொலைவுக்குள் அமைந்திருக்கும் இவ்விடத்திற்கு மழை காலத்திற்கு பிறகு வந்திடும் போது பச்சைபசேலென கண்களுக்கு இதமாக காட்சி தருகிறது. ரதன்வாடி கிராமத்தில் இருந்து இந்த கோட்டையை நோக்கி மலை ஏற்றத்தை துவங்கினால் கோட்டையை சென்றடைய 4 மணிநேரங்களாவது ஆகும். ஆபத்தான பாறைகளின் ஊடாக செல்லும் பாதைகள், தொங்கு பாலங்கள் போன்றவை வழியில் இருப்பதினால் முன் அனுபவம் இல்லாதவர்கள் இந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது.

ராஜ்மாச்சி கோட்டை:

மகாராஷ்டிராவில் மலையேற்றம் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: Kandoi.sid

மகாராஷ்டிராவில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலன்களுள் இந்த ராஜ்மாச்சி கோட்டை முக்கியமானது. மலையேற்றத்தை முடித்து இக்கோட்டையின் உச்சியை அடைகையில் சில்லிட வைக்கும் அற்புதமான இயற்கை காட்சிகளை காணலாம். லோனாவ்லா என்னும் இடத்தில் இருந்து இந்த ராஜ்மாச்சி கோட்டையை எளிதாக அடையலாம். இயற்கை அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் நிச்சயம் இங்கு ஒருமுறையேனும் சென்று வர வேண்டும்.

More News

    Read more about: trekking adventure maharashtra
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+