Search
  • Follow NativePlanet
Share
» »இன்னும் திருமணம் ஆகலையா ? உடனே இந்த தலங்களுக்கு போய் பாருங்க!

இன்னும் திருமணம் ஆகலையா ? உடனே இந்த தலங்களுக்கு போய் பாருங்க!

திருமண வயது நெருங்கியும், அல்லது கடந்தும் பல்வேறு காரணங்களால் பலர் திருமணம் செய்யாமல் பல இன்னல்களைச் சந்தித்து வருவர். பெரும்பாலானோர், சுற்றத்தார், உறவினர்கள் என எப்போது சந்தித்தாலும் என்னப்பா கல்யாணம் எப்போ ?, இன்னுமா கல்யாணம் ஆகல ?, ஏதோ தோஷம் இருக்கும் போல...

குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...!

இப்படி ஏதாவது ஒன்றைக் கூறி சும்மா இருக்கும் நம் மனதையும் ரனமாக்கிச் செல்வர். ஆனா, இது உண்மையிலேயே தோஷமாகக் கூட இருக்கலாம் பாஸ். இப்படியான சூழ்நிலையில நீங்க இருந்திங்கன்னா உடனே இந்த கோவில்களுக்கு போய் பரிகாரம் பன்னுங்க. அப்புறம் பாருங்க கெட்டி மேளம் தான்.

கல்யாண தோஷங்கள்

கல்யாண தோஷங்கள்

எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி-ன்னு என்னதான் நீங்க பாட்டுபாடிட்டு போனாலும் உங்களுக்கான திருமணத் தடை தோஷத்தால எல்லாமே தடைபட்டுத்தான் போகும். செவ்வாய் தோஷம், ராகு தோஷம், நாக தோஷம்னு பல தோஷங்கள் உண்டு. இதில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களையும் அதற்கான பரிகாரத் தலத்தையும் அறிந்து வழிபடுவது சிறந்தது. அப்படி திருமணத் தடை ஏற்பட்டுள்ளவர்கள் இந்த தலங்களுக்கு எல்லாம் ஒரு முறை போய் வழிபட்டு பாருங்க.

குரு பகவான்

குரு பகவான்

கும்பகோணத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது ஆலங்குடி. இங்கே அமைந்துள்ள குரு பகவான் கோவில் மாநிலத்திலேயே மிகவும் பிரசிதிபெற்ற பரிகாரத் தலமாக திகழ்கிறது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை ஒருமுறை வழிபட்டாலே திருமண யோகம் கைகூடி வரும் என்பது தலநம்பிக்கை.

Muthukumaran pk

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயம்

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயம்

சென்னையில் இருந்து 74 கிலோ மீட்டர் தொலைவில், காஞ்சீபுரத்தில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர் ஆலயம். அந்த ஊரின் சிறப்பே அங்குள்ள நாகமூர்த்திகள் தான். திருமணம் தடைபட்டுக் கொண்டே இருப்பவர்கள் இந்த புன்னியத் தலத்திற்கு வந்து நாகமூர்த்திகளை வணங்கி, வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதஷணம் செய்தால் எத்தகைய தோஷங்களும் விட்டு விலகும். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, குறிப்பாக பெண் பக்தர்களுக்கு மாங்கல்யச் சரடு, குங்குமம், வளையல் உள்ளிட்டவற்றை பிரசாதமாக வழங்குவது சிறந்தது.

Ssriram mt

கல்யாண சுந்தரேஸ்வரர் வழிபாடு

கல்யாண சுந்தரேஸ்வரர் வழிபாடு

பொதுவாக, தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் தான் திருமணம் தடைப்படுகிறது என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. மாயவரம்-குத்தாலம் நெடுஞ்சாலையில் உள்ள ஊர் திருமணஞ்சேரி. இது திருமண தோஷங்கள் நீக்குவதற்கெனவே சிறப்பு பெற்ற ஊர். இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் உடனே திருமணம் ஆகிவிடும்.

திருவேற்காடு கருமாரி அம்மன்

திருவேற்காடு கருமாரி அம்மன்

சென்னை - திருவேற்காட்டில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் பல்வேறு புராணச்சிறப்புகள் மிக்கது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

கல்யாண நவகிரகங்கள்

கல்யாண நவகிரகங்கள்

காரைக்குடியிலிருந்து மேற்கே மதுரை செல்லும் வழியில் நாச்சியார்புரத்திற்கு முன்னதாக உள்ள மானகிரி பகுதியில் அமைந்துள்ளது தண்டாயுதபாணி திருக்கோவில். இங்குள்ள நவகிரகங்கள் தத்தம் மனைவியருடன் காட்சி தருகின்றன. துணைவியரோடு தோன்றும் தெய்வங்களுக்கும், கிரகங்களுக்கும் கருணை அதிகம் என்பார்கள். இத்தகைய நவக்கிரகங்கள் கல்யாண நவக்கிரகங்கள் என அழைக்கின்றனர். இவர்களை வேண்டிவர ஓரிரு மாதங்களிலேயே சுப வாழ்க்கை அமையும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more