» »பிரசித்தி பெற்ற கோயில்கள் நிரம்பி வழியும் சிர்சிக்கு எங்கே எப்படி போவது?

பிரசித்தி பெற்ற கோயில்கள் நிரம்பி வழியும் சிர்சிக்கு எங்கே எப்படி போவது?

Written By: R. SUGANTHI Rajalingam

சிர்சி கர்நாடகவின் வட பகுதியில் காணப்படும் மாபெரும் சுற்றுலா தலமாகும். இது சோண்டா வம்சர்கள் காலத்தில் கல்யாணபட்டணம் என்று அழைக்கப்பட்டது. இந்த இடமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க கோவிலுக்கும், ஏராளமான நீர் வீழ்ச்சிகளுக்கும் பெயர் போன இடமாக உள்ளது. இந்த நகரத்தின் பெரும்பாலான வருமானம் விவசாயத்தை நம்பி தான் இருக்கிறது. இங்கே ஏராளமான ஆர்க்நெட் சாகுபடி செய்யப்படுகிறது. உலகளாவிய ஆர்க்நெட் ஏற்றுமதியில் சிர்சி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

சிர்சியில் ஹோலி பண்டிகையை அவர்களின் தனித்துவமான ஸ்டைலில் கொண்டாடி மகிழ்வர். அப்பொழுது கலைஞர்கள் நாட்டுப்புற நடனமான பிதரா விஸ்கா நடனத்தை ஆடி 5 நாள் ஹோலி பண்டிகையை கோலகலமாக கொண்டாடுவர்.இந்த நடனத்தின் போது டோலு என்ற டம்ர்ஸ்களையும் அடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பர்.

குளிர் காலமான அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரையிலான காலங்களில் சிர்சி சுற்றுலா பயணத்தை மேற்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் காலநிலை மிகவும் குளிராக மற்றும் சில்லென்று தென்றல் காற்றும் வீசும்.

சிர்சி செல்வதற்கான பயணவழி

சிர்சி செல்வதற்கான பயணவழி

வழி 1: CNR Rao Underpass /சிவி ராமன் ரோடு - தேசிய நெடுஞ்சாலை 48 - சிர்சி-குப்லி-பெல்கம் ரோடு - சிர்சி (405கி.மீ - 6மணி நேரம் 30 நிமிடங்கள்)

வழி 2: ராஜ் மகால் விலாஸ் எக்ஸ்டன்சன் - பெங்களூர் - ஹைதராபாத் ரோடு - ஆந்திர பிரதேசம் - மணியூர் தேசிய நெடுஞ்சாலை 48- சித்ரதுர்கா மடகசிரா ரோடு - SH48-சிர்சி - குப்லி-பெல்கம் ரோடு -சிர்சி (492 கி. மீ-8 மணி நேரம் 35 நிமிடங்கள்)

வழி 3- CNR Rao Underpass /சிவி ராமன் ரோடு - தேசிய நெடுஞ்சாலை 75-டி நரசிபுர - சிர ரோடு - தேசிய நெடுஞ்சாலை 180ஏ-பெடிவேஸ்ட் - திப்பூர் ரோடு - தேசிய நெடுஞ்சாலை 69-சித்தபூர் - தலகுப்ப ரோடு - சித்தபூர் - சிர்சி ரோடு - சிர்சி (429 கி. மீ - 8 மணி நேரம் 45 நிமிடங்கள்)

இந்த மூன்று வழிகளில் பாதை -1 வழியாக சென்றால் சிர்சியை விரைவாகவும் எளிதாகவும் அடைந்து விடலாம்.

நீங்கள் செல்கின்ற வழியிலும் ஏராளமான இடங்களை கண்டு களிக்கலாம். சரி வாங்க அதைப் பற்றி ஒரு பயணம் போகலாம்.

தபாஸ்பெட்டில் சிவகங்கா

தபாஸ்பெட்டில் சிவகங்கா

சிவகங்கா மலை பெங்களூரிலிருந்து 55 கி. மீட்டரில் அமைந்துள்ளது. இதன் உயரம், 2640 அடி ஆகும். மலையேறுவதற்கு சரியான இடமாகும். இந்த மலை பார்ப்பதற்கு சிவலிங்கம் வடிவத்திலும் அங்கே எப்பொழுதும் வழியும் நீர் கங்கா என்றும் சேர்ந்து சிவகங்கா என்று அழைக்கப்படுகிறது.

இந்த மலையின் உச்சியில் குகையை குடைந்து கவி கங்கதரேஸ்வரர் என்ற கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலே அமைந்துள்ள குகையும் அங்கிருந்து வழியும் நீரும் கடவுள் சிவபெருமானையே பிரதிபலிப்பதாக இருப்பதால் அவரின் பக்தர்கள் அவரை காண தவறாமல் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

PC: Jishnua

தும்கூரின் தேவராயனதுர்கா

தும்கூரின் தேவராயனதுர்கா


இந்த மலைப்பகுதியின் உயரம் 3940 அடிகளாகும். இது எடியூர் லிருந்து 87 கி. மீட்டரில் உள்ள தும்கூரில் அமைந்துள்ளது.

தேவராயனதுர்கா மலைப் பிரதேசத்தில் யோகா நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திராவிடயன் காலத்தின் கட்டடக்கலையின் போது கட்டப்பட்ட அழகிய கோயிலாகும். மலையின் அடிவாரத்தில் போக நரசிம்ம சுவாமி கோயிலும் அமைந்துள்ளது.

Dineshkannambadi

கஹகலடு ஹூரோனி

கஹகலடு ஹூரோனி

தேவராயனதுர்காவிலிருந்து 75 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது தான் கஹகலடு என்ற சிறிய கிராமம். இந்த கிராமம் பறவைகளின் சரணாலயமாக உள்ளது. 1993 ல்தான் இந்த சரணாலயத்தை ஏற்படுத்தினர்.

கிரே ஹீரோன்ஸ் பறவைகள் தங்கள் கூட்டை ஒரு புளிய மரத்தில் கட்டி வாழ்கின்றனர்.

இந்த பறவைகளின் வளர்ச்சியை மேம்படுத்த இதை வேட்டையாடுவது தடுக்கப்படுகிறது. இந்த கிரே ஹீரோன்ஸ் பறவைகளுக்கு அடுத்த படியாக இங்கே நிறைய நாரைகளும் உள்ளன.

PC: Vikashegde

 சித்ரதுர்கா

சித்ரதுர்கா

இந்த சித்ரதுர்கா நகரம் கஹகலடுவிலிருந்து 83 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே நிறைய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இராஷ்டிரகூடர், சாளுக்கியர் மற்றும் ஹோய்சலா வம்சாவளியை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இந்த வம்சாவளியில் வாழ்ந்தவர்கள் புகழ் பெற்ற சித்ரதுர்கா கோட்டையையும் இங்கே அமைத்து தங்களின் கட்டடக்கலையை பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளனர்.

இது சித்ரதுர்காவில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த கோட்டை அழகாக ஓடும் வேதவதி ஆற்றில் அமைந்துள்ளது. இந்த கோட்டை கற்பாறைகளால் அமைக்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்கதாக உள்ளது. இது மேல் மற்றும் கீழ் என்ற இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மேல் பாகத்தில் கிட்டத்தட்ட 18 கோயில்கள் அமைந்துள்ளது. இந்த கோட்டை வீரப் பெண்" ஒனக்கே ஓபவ்வா" என்பவரின் வீரத்தை பறைசாற்றும் விதமாக திகழ்கிறது. ஓபவ்வாவின் கணவர் சாப்பிடும் தருணத்தில் நுழைந்து, இந்த கோட்டையை கைப்பற்ற நினைத்த ஹைதர் அலி படைகளை அவர் இல்லாத சமயத்தில் தனி பெண்ணாக நின்று ஓபவ்வா தன் சமையலறை உலக்கையையே ஆயுதமாக பயன்படுத்தி நிறைய பேர்களை கொன்று குவித்துள்ளார். எனவே இந்த கன்னட வீரப் பெண்ணின் வீரத்தை பறைசாற்றும் விதமாக இவர் ஒனக்கே ஓபவ்வா (ஒனக்கே - உலக்கை) என்று அழைக்கப்பட்டார். இந்த கோட்டையில் அவருக்காக சிலை ஒன்றும் வைக்கப்பட்டு அவரின் வீர மரணத்தை மக்கள் மனதில் பதியச் செய்துள்ளனர்.

சந்திரவல்லி மலை, ஜோகிமதி மலை,, கலினா கோட் போன்ற சுற்றுலா தலங்களையும் நாம் சித்ரதுர்காவில் காணலாம்.

PC: veeresh.dandur

தவன்கிரி

தவன்கிரி


மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் இருக்கும் அழகிய நகரம் தான் தவன்கிரி. சித்ரதுர்காவிலிருந்து 60 கி. மீ தொலைவில் இது அமைந்துள்ளது. இந்த நகரம் மான்செஸ்டர் ஆஃப் இந்தியா என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இங்கே ஏராளமான காட்டன் மில்கள் உள்ளன. இங்கே நிறைய வரலாற்று சிறப்புமிக்க கோயில்களான ஸ்ரீ துர்காம்பிகை கோயில், ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், ஹரிகரேஸ்வரா கோயில் போன்றவைகளும் உள்ளன.

கர்நாடகவின் புகழ்பெற்ற தவன்கிரி பென்னே தோசை இங்கே இருந்து தான் உருவாக்கப்பட்டது. இது ரெம்ப சுவையான பட்டர் தோசையாகும். அங்கே போனால் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் சாப்பிட வேண்டிய ஒன்றாக உள்ளது. குலடிக்கி உண்டே தவன்கிரியின் மற்றொரு புகழ்பெற்ற ரெசிபி ஆகும். நீங்க போன கண்டிப்பாக ட்ரை பண்ணாமல் வராதிங்க.

PC: Srutiagarwal123

ராணிபென்னூர்

ராணிபென்னூர்

ராணிபென்னூர் காவேரி மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது தவன்கிரியிலிருந்து 37 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே குறைந்த சுற்றுலா இடங்கள் இருந்தால் கூட மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஒன்றாகும். சடையதானபுரம் என்ற கிராமத்தில் உள்ள முக்தேஸ்வரா கோயில் ஜக்கனசாரி ஸ்டைலில் கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும்.

இந்த கோயில் கடவுள் சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அழகிய துங்காபத்திரா ஆற்றின் கரையில் அமைந்து தன்னுடைய அழகிய தோற்றத்தால் எல்லாரையும் கவரும் வண்ணம் உள்ளது. இங்கே உள்ள சிலைகள், கல்வெட்டுகள் வரலாற்றை பறைசாற்றும் விதமாகவும் உள்ளது. இந்த கோயில் சாளுக்கியர் கட்டடக்கலைக்கு சிறந்த ஒன்றாகும்.

ராணிபென்னூரில் உள்ள துள்ளிக் குதித்து ஓடும் அழகிய கலைமான் சரணாலயம் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் மான்களின் வளர்ச்சியையும் காக்கிறது.

PC: Manjunath nikt

காவேரி

காவேரி

ராணிபென்னூரிலிருந்து 27 கி. மீ தொலைவில் காவேரி அமைந்துள்ளது. இங்கே ஏராளமான கோயில்களுக்கு பெயர் போன இடமாக உள்ளது. சித்தேஸ்வரா கோயில், நகரேஸ்வரா கோயில் என்று இன்னும் பல கோயில்கள் உள்ளன. எல்லா கோயில்களும் சாளுக்கியர் கட்டடக்கலையில் சிறந்து விளங்குகின்றனர்.

சித்தேஸ்வரா கோயில் முழுவதும் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. கடவுள் கிழக்கு நோக்கி அமைந்துள்ள மாதிரி கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தனித்துவமான சிறப்புடன் விளங்குகிறது.

PC: Dineshkannambadi

 மாரிகாம்பா கோவில்

மாரிகாம்பா கோவில்

இந்த கோயில் காவேரியிலிருந்து 80 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் கடவுள் துர்கா தேவிக்காக கட்டப்பட்டது. இந்த கோயில் 1688ல் கட்டப்பட்டுள்ளது. 8 கரங்களை கொண்டு 7 அடி உயரத்தில் மாரிகாம்பா சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் வரண்டா பகுதிகள் முழுவதிலும் நிறைய அம்மன் படங்கள் அவர்களது பக்தர்களால் வைக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு அம்மன் தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. இதற்காக ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபடவும் செய்கின்றனர்.

Dineshkannambadi

மதுகேஸ்வரா கோயில்

மதுகேஸ்வரா கோயில்

சிர்சியில் பார்க்க வேண்டிய இன்னொரு கோயில் மதுகேஸ்வரா கோவில். இந்த கோயில் கடம்பா வம்சாவளியால் கட்டப்பட்டது. அதற்கு அப்புறம் வந்தவர்கள் அதை மேம்படுத்தி வருகின்றனர்.

இந்த கோயில் பனவாசி நகரத்தில் அமைந்துள்ளது. மாரிகாம்பா கோவிலிருந்து 23 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் கடவுள் சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே உள்ள தூண்களிலும் மேற்கூரையிலும் அழகிய ஓவியங்களை நாம் கண்டு களிக்க முடியும்.

PC: Dineshkannambadi

பென்னி ஹோல் நீர் வீழ்ச்சி

பென்னி ஹோல் நீர் வீழ்ச்சி

பென்னி ஹோல் நீர் வீழ்ச்சி பட்டரி ஸ்ட்ரீம் வாட்டர் அதாவது வெண்ணெய் திரண்டோடும் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு தூய்மையான வெண்மை நிறத்தில் இதன் நீர் இருக்கிறது. இந்த நீர் வீழ்ச்சி ஆகானஸினி என்ற ஆற்றினால் உருவாகுகிறது. சுமார் 200 அடி உயரத்தில் இருந்து அருவியாக கொட்டி நம்மளை பெருமூச்சு விட வைக்கிறது.

நீங்கள் கொஞ்சம் மலையேற விரும்பினால் கூட இந்த இடம் உங்களுக்கு சூப்பராக இருக்கும். இந்த மலையின் உச்சியை அடைவதற்கு 2 கி. மீ ஆகிறது. அங்கிருந்து ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க மறந்து விடாதீர்கள்.

கைலாச குடா

கைலாச குடா


கைலாச குடா ஒரு சொர்க்கம் போன்ற இடம். இது சிர்சியிலிருந்து 9 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா இடமாகும். இங்கிருந்து கொண்டு எல்லா மலைகளின் பசுமையையும் இயற்கை சூழலையும் காணலாம். மேலே உள்ள பார்வையிடும் தளத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக மலையின் அழகையும் பசுமையையும் கண்டு வியக்கலாம்ற. மறக்காம செல்ஃபி எடுத்து கொள்ளுங்கள்.

 சஹஸ்ரலிங்கா

சஹஸ்ரலிங்கா

சிர்சியில் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய இடம் சஹஸ்ரலிங்கா. இந்த நகரம் சல்மலா என்ற ஆற்றினுள் அமைந்துள்ளது. இங்கே உள்ள ஒரு ஆச்சரியமான விஷயம் ஆற்றில் உள்ள கற்களில் எல்லாம் சிவலிங்கம் இருப்பது தான்.

ஏராளமான பாறை கற்கள் இந்த ஆற்றில் பரந்து கிடக்கின்றன. இவையெல்லாம் தண்ணீர் மட்டம் குறைவாகும் போது மட்டுமே காண முடியும். முழுவதையும் சிவராத்திரி அன்றைக்கு நம்மால் காண முடிகிறது. சிவராத்திரியின் போது தண்ணீர் மட்டம் குறைந்து ஆயிரக்கணக்கான சிவலிங்க கற்களை காண முடிகிறது. எனவே தான் இந்த இடம் சஹஸ்ரலிங்கா என்றும் அழைக்கப்படுகிறது.

Read more about: travel