புதியது: திருநள்ளாறுவில் மீண்டும் தடுமாறிய செயற்கைகோள்கள் - உண்மை என்ன தெரியுமா?
ஆயுர்வேத சிகிச்சைக்காக பலரும் கேரளா செல்வதுண்டு. அங்குள்ள நகரங்கள் அதற்கென்றே பெயர்பெற்றவை. அந்த வகையில் திருவனந்தபுரம் அருகிலுள்ள ஒரு கிராமம் ஆயுர்வேத சிகிச்சைக்கு உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
ஆயுர்வேத சிகிச்சை மட்டுமில்லாமல், சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. அப்படி என்னதான் இருக்கு அங்க.. வாங்க பாக்கலாம்.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது
திருவாங்கூர் சமஸ்தானத்தின் முக்கிய நகராக விளங்கிய பூவார், காயங்குளம் போர் மற்றும் குளச்சல் போர்களில் திருவாங்கூர் மன்னர்களுக்கு சிறப்பு வாய்ந்த இடமாக கருதப்பட்டது.
பூக்களால் ஆன ஆறு என்பதைக் கொண்டு பூவார் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருவாங்கூர் மன்னன் ராஜமார்த்தாண்ட வர்மன் இந்த பெயர் சூட்டியதாகவும் வரலாறு கூறுகிறது.

அமைதி விரும்பிகளின் சொர்க்கம் பூவார்
பூவார் கிராமம் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதற்கு மூல முதல் காரணம் பூவார் பீச்தான். இங்கு முதல் முறையாக வரும் பயணிகள் பரபரப்பு மிகுந்த நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் பேரமைதியை வெகுவாக விரும்புவார்கள்.
பூவார் கிராமம் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இங்கு வெகு சில வீடுகள் தான் இருக்கின்றன. ஆனால் இரைச்சல், கூச்சல், சந்தடி ஏதுமற்ற தனிமையும், அமைதியும் இந்த கிராமத்தை அற்புத சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கிறது.
PC: Nagesh Jayaraman
உங்கள் துணையுடன் கண்டிப்பாக போகவேண்டிய இடங்கள் இவை

இயற்கையின் அரசி பூவார்
பூவார் கிராமத்தின் உப்பங்கழிகளில் அமைந்திருக்கும் ரிசார்ட்டுகள் மற்றும் குடில்களில் இருந்தவாறு சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு இந்த உப்பங்கழிகளில் படகுப் பயணம் செய்து நீங்கள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
PC: Nagesh Jayaraman
கேரளாவில் கொண்டாடுவோம்... மகிழ்ந்திடுவோம்...

இஸ்லாமை போதித்த பூவார்
பூவார் கிராமத்தில் இந்தியாவின் மிகவும் தொன்மை வாய்ந்த இஸ்லாமிய குடியிருப்புகள் பல இருக்கின்றன. இந்த குடியிருப்புகள் 1400 ஆண்டுகள் பழமையானவைகளாக கருதப்படுகின்றன.
இங்கு உள்ள பிரதான மசூதி மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த மாலிக் இப்னே தீனர் என்ற இஸ்லாமிய அறிஞரால் எழுப்பப்பட்டது. அதோடு இந்தியாவில் முகாலய படையெடுப்புக்கு முன்பே இஸ்லாமியத்தை போதித்த பழம்பெரும் பகுதியாக பூவார் கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.
PC: Nagesh Jayaraman
கேரளாவின் அதிசய ஊர் இது... ஏன் தெரியுமா?

படகில் பயணம்
பூவாரில் முக்கியமாக நீங்கள் மறக்ககூடாத ஒன்று படகுபயணம். கேரளா என்றாலே நீர்வழி பயணம் நிறைந்த தேசம். அதனால் படகு பயணம் கட்டாயம் செல்லவேண்டிய ஒன்றாக சுற்றுலா விரும்பிகளால் பார்க்கப்படுகிறது.
PC: Pranav

குடில்களில் ஓய்வு
இங்குள்ள குடில்கள், ரிசார்ட்களில் ஓய்வெடுக்கும்போது காலை, மாலை சூரிய உதயம் மற்றும் மறைவு ஆகியவை மிகவும் சிறப்பானதாக உள்ளது.
குளிர்காலத்தில் உங்கள் காதலியுடன் சென்று வரவேண்டிய இடங்கள்
PC: Senorhorst Jahnsen

கடற்பயணம்
வாய்ப்பு கிடைத்தால் படகில் கடற்பயணம் மேற்கொள்ளுங்கள். பூவார் கிராமத்தில் படகு பயணம் மட்டுமின்றி, ஆயுர்வேத குளியல் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.அதனையும் அனுபவித்து வாருங்கள்.
PC: Nagesh Jayaraman

அழகிய பூவார் கடற்கரை
பூவாரின் அழகிய கடற்கரை
PC: Pranav

எப்படி செல்லலாம்
அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் 30 கிமீ
அருகிலுள்ள ரயில் நிலையங்கள்
நெய்யாற்றின்கரை 10 கிமீ
நேமம் 20 கிமீ
திருவனந்தபுரம் சென்ட்ரல் 30 கிமீ
மேற்கூறிய அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன. அல்லது நீங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து

அருகிலுள்ள சுற்றுலாத்தளங்கள்
பூவார் அருகிலுள்ள சுற்றுலாத்தளங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு கிளிக் செய்யுங்கள்
பூவார் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்
நன்றி.. தொடர்ந்து இணைந்திருங்கள்



Click it and Unblock the Notifications





