Search
  • Follow NativePlanet
Share
» »சோழர் கோவிலை அழித்து கட்டப்பட்ட கொள்ளிடம் பாலம்!

சோழர் கோவிலை அழித்து கட்டப்பட்ட கொள்ளிடம் பாலம்!

காவிரியில் தண்ணீர் திருந்துவிட வலியுறுத்திய காலம் போய், யப்பாடேய் போதும் நிறுத்துங்கடான்னு சொல்லக்கூடிய மனநிலையே தற்போது தொற்றிவிட்டது எனலாம். அந்தளவிற்கு தற்போது கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் கடல் போல் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது ஒருபுறம் நல்லது என்றாலும், அவை ஒட்டுமொத்தமாக வந்து வெள்ளக்காடாக காவிரி கரையோரப் பகுதிகளை மூழ்கடிப்பது வேதனைக்குறியதே. இதில், விவசாய நிலம், கரையோர வீடுகள் என நாம் இழந்து வருவது ஒருபுறம் இருக்க வரலாற்று சிறப்புமிக்க சில சின்னங்களையும் வெள்ளநீர் அழித்துச் செல்வது கவணிக்த்தக்கதே. ஆம், அவ்வாறு அழித்துச் சென்ற கொள்ளிடம் ஆற்றுப் பாலம் குறித்தும், அதன் வரலாற்றுச் சிறப்புகள் குறித்தும் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் வேகமாக நீர் நிரம்பி அங்கிருந்து வெளிறேய்யப்படும் நீரால் மேட்டூர் அணை இந்த வருடத்தில் இரண்டு முறையாக தன்னுடைய முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் காவிரி டெல்டா பகுதிகள் மூழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. போராட்டமின்றி பெறப்படும் இந்நீர் தமிழக விவசாயிகளுக்கு வரப்பிரசாதமே.

காவிரி ஆறு

காவிரி ஆறு

மேட்டூரில் இருந்து வெளியேறும் நீர் மாபெரும் வெள்ளமாக ஓடி திருச்சிக்கு மேற்கே எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது. பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும் காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்குக் கல்லணைக்கு அருகில் காவிரியின் அருகே வருகிறது. கல்லணையில் காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

drrfqq

கல்லணை

கல்லணை

உலக அளவில் பழமையான கல்லணை என்றால் அது நம் நாட்டில் உள்ள கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை தான். திருச்சிக்கு அருகில் காவிரியின் குறிக்கே கட்டப்பட்டுள்ள இது அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என நான்காகப் பிரித்து பாசன காலங்களில் விவசாயிகளுக்கு பயணளிக்கிறது.

drrfqq

கொள்ளிடம்

கொள்ளிடம்

மேட்டூரில் திறந்துவிடப்படும் நீர் பல்வேறு பகுதிகளைத் தாண்டி திருச்சி கொள்ளிடம் வழியாக முக்கொம்பு வந்தடையும். காவேரியில் அதிகப்படியான வெள்ளம் வரும் காலங்களில் கொள்ளிடத்தில் அதிக அளவு நீர் திறந்துவிடுவது வழக்கம். இந்த தண்ணீர் வடவாறு மற்றும் பல வாய்க்கால்களில் நிறைந்து மீதமுள்ள உபரி நீர் இறுதியில் வங்கக் கடலில் கலக்கும்.

Nittavinoda

கொள்ளிடம் பாலம்

கொள்ளிடம் பாலம்

திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லவும், அங்கிருந்து சமயபுரம், பெரம்பலூர் செல்லவும் காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஸ்ரீரங்கம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, சென்னை - திருச்சி சாலையில், 1928ல் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இப்பாலம், நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது. பழைய இரும்புப் பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் வரலாற்றுச் சின்னமாக மக்கள் மதித்து வந்தனர்.

கொள்ளிடம் பால வரலாறு

கொள்ளிடம் பால வரலாறு

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஒரு இரும்புப் பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. கப்பல்கள் மூலம் பொருட்களை விநியோகம் செய்யவும், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி என சிற்றரசர்களிடம் கப்பம் வசூலிக்கவும் உறுதுணையாக இருந்தது இந்தப் பாலமே.

சோழர் கோவிலின் கற்கள்

சோழர் கோவிலின் கற்கள்

தஞ்சாவூரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த ஆங்கிலேயர்கள் அதற்கான திடமான கற்களை எடுத்த இடம் கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் கலைநயமிக்க கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோவிலின் சுற்றுச் சுவரில் இருந்து தான். பல நூற்றாண்டு வரலாறுமிக்க சோழர்களின் கோவிலை தகர்த்து கட்டப்பட்ட இப்பாலம் இன்று ஆற்றில் மிதக்கிறது.

Supraja kannan

அழிக்கப்பட்ட கல்வெட்டுகள்

அழிக்கப்பட்ட கல்வெட்டுகள்

சோழர்களின் சிறப்புகள் என்றால் அறிவியலையே வியக்க வைக்கும் கட்டிடக் கலையும், கலைநயமிக்க படைப்புகளும், வீரமும் அனைவரின் நினைவுக்கு வருவது வழக்கம். அதற்கு ஏற்றவாரே சோழீச்சுவரர் கோவிலும் திகழ்கிறது. bகாள்ளிடம் பாலம் கட்ட இங்கிருந்த திருச்சுற்று மாளிகை உள்ளிட்டவற்றையும் வெடிவைத்துத் தகர்த்து கருங்கற்களைக் உபயோகப்படுத்தியிருப்பது வேதனைக்குறிய விசயம் தான். அதோடு பல பல கல்வெட்டுக்களும் ஆற்றில் புதைக்கப்பட்டன.

Nittavinoda

கோப்பெருஞ்சிங்கனும் கொள்ளிடமும்

கோப்பெருஞ்சிங்கனும் கொள்ளிடமும்

பல்லவ அரசர்களில் ஒருவரான கோப்பெருஞ்சிங்கன் தனது கல்வெட்டு ஒன்றில் ஜெயங்கொண்ட சோழப்பட்டிணத்துப் பிடாகை அளக்குடியில் அம்பலவதிக்கு கிழக்கும் ஜெயங்கொண்ட சோழ வாய்க்காலுக்கு வடக்கு என குறிப்பிட்டுள்ளார். இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடுவில்காடும், ஜெயங்கொண்ட பட்டிணமும் தற்போது தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. ஜெயங்கொண்டப்பட்டிணம் பிடாகையான அளக்குடி என்பது தற்போது புதுக்கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கினை சந்திக்கும் ஓர் ஊராகும். இந்த ஊரின் வடக்கே திரும்பி கிழக்காக கொள்ளிடம் ஆறு பாய்கிறது. இந்த ஊர் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டில் குறிக்கும் புதுக்கொள்ளிடம் என்பதற்கு முன்பாகவே ஒரே நிலப்பகுதியாக மூன்று ஊர்களும் இணைந்திருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.

சோழரின் கொள்ளிடம்

சோழரின் கொள்ளிடம்

சோழர் காலத்தில் வணிக்கத் தலமாக செயல்பட்டது வங்கக்கடல். இதனை ஒட்டிய தீவுப் பகுதியான உள்ள கொடியம்பாளையமும், தேவிக்கோட்டையும் முன்னொரு காலத்தில் ஒரே பகுதியாக இருந்திருக்க வேண்டும். தேவிக்கோட்டை என சோழர் காலத்தில் வழங்கப்பட்ட ஊர் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. கொடியம்பாளையம் தற்போது ஒரு பகுதி கடலை ஒட்டியுள்ளது. இதனை அடைய மகேந்திரப் பள்ளியிலிருந்துக் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து கோட்டைமேடு வழியாக செல்ல வேண்டும்.

காலச்சுவடை அழித்த காவிரி

காலச்சுவடை அழித்த காவிரி

ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய கொள்ளிடம் பாலம் தனது 93வது ஆண்டைக் கடந்த நிலையினாலும், ஆற்றிப் படுகையில் அள்ளப்பட்ட மணற் திருட்டினாலும் பலவீனம் அடைந்தது. இந்நிலையில், தற்போது காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக 23 தூண்களைக் கொண்ட கொள்ளிடம் பாலத்தின் 18வது தூணில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டு காவிரியுடன் அடித்துச் செல்லப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இப்பாலத்தின் மிச்சத்தையாவது பாதுகாக்க வேண்டும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more