Search
  • Follow NativePlanet
Share
» »திருச்சி - மலைகோட்டை மாநகரில் ஒரு இன்ப சுற்றுலா

திருச்சி - மலைகோட்டை மாநகரில் ஒரு இன்ப சுற்றுலா

திருச்சி, தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய நகரமான இது மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தையும், காவேரித்தாய் தந்தருளும் செழிப்பையும் கொண்டிருக்கும் சீரும் சிறப்பும் மிகுந்த ஓரிடமாகும். பூகோள ரீதியாக தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தமிழனின் கட்டிடக்கலை அறிவை உலகுக்கு பறைசாற்றும் கல்லணை போன்றவை அமைந்திருக்கின்றன. மலைகோட்டை நகரை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

கோடை விடுமுறை சிறப்பு சலுகை: தாமஸ் குக் தளத்தில் சுற்றுலா கட்டணங்களில் ரூ.3000 தள்ளுபடி கூப்பன் இங்கே

திருச்சியின் வரலாறு :

திருச்சியின் வரலாறு :

திருச்சி நகரில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நகரம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் என பல்வேறு மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது.

Photo:Nicolas Mirguet

திருச்சியின் வரலாறு :

திருச்சியின் வரலாறு :

கி.மு 3ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரை இந்நகரை ஆட்சி செய்த சோழர்களின் தலைநகரமாக உறையூர் இருந்திருக்கிறது. வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சி சார்ந்த விஷயங்களில் நாட்டம் உடையவர்கள் நிச்சயம் உறையூருக்கு வர வேண்டும்.

Photo:Mohan P J

கல்லணை :

கல்லணை :

அறிவியல் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் காட்டப்படும் அணைகளே சில வருடங்களில் விரிசல் விடும் போது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் பிரமாண்டமாக வீற்றிருக்கிறது.

Photo:Badrinath M

கல்லணை :

கல்லணை :

பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் குறுக்கே கி.பி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை உலகத்தில் இன்றும் பயன்பாட்டில் இருக்கும் பழமையானஅணை என்ற சிறப்பை பெற்றுள்ளது. திருச்சி நகரில் இருந்து 15கி.மீ தொலைவில் இந்த அணை அமைந்திருக்கிறது.

Photo:Thangaraj Kumaravel

கல்லணை :

கல்லணை :

இந்த அணையினால் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் டெல்டா விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனை கட்டிய கரிகால் சோழனை கவுரவிக்கும் பொருட்டு கல்லனைக்கு அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. திருச்சிக்கு செல்கையில் நாம் தவறவிடக்கூடாத இடம் இந்த கல்லணையாகும்.

Photo:Lakshmi R.K

கல்லணை :

கல்லணை :

கரிகால் சோழன்.

Photo:Kalai "N" Kovil

கல்லணை :

கல்லணை :

கல்லணையின் சில புகைப்படங்கள்.

Photo:Ashwin Kumar

கல்லணை :

கல்லணை :

கல்லணையின் சில புகைப்படங்கள்.

Photo:Ashwin Kumar

உச்சி பிள்ளையார் கோயில் :

உச்சி பிள்ளையார் கோயில் :

திருச்சி என்று சொன்னதுமே பலருக்கு நினைவுக்கு வரும் ஓரிடம் இருக்குமென்றால் அது மலைகோட்டையின் மேல் அமைந்திருக்கும் உச்சி பிள்ளையார் கோயில் தான். 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தமிழ் நாட்டில் இருக்கும் மிக முக்கியமான விநாயகர் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.

Photo:BOMBMAN

உச்சி பிள்ளையார் கோயில் :

உச்சி பிள்ளையார் கோயில் :

குடைவரைக் கோயில்கள் கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள் காலத்தில் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டாலும் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களே இக்கோயிலை முழுமையாக கட்டி முடித்திருகின்றனர்.

Photo:Girish Gopi

உச்சி பிள்ளையார் கோயில் :

உச்சி பிள்ளையார் கோயில் :

திருச்சி நகரின் அழகை முழுமையாக காண விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த மலைக்கோட்டைக்கு வர வேண்டும். இதன் மேல் நின்று திருச்சி நகரின் மொத்த அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.

Photo:Feng Zhong

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக வைத்து போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சியில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், 1000 ஆண்டுகளை தாண்டியும் இன்றும் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

Photo:Prabhu B Doss

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

வரலாறு :

சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளே கோயிலில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜயநகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும்.

படம் : Jean-Pierre Dalbéra

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ராஜகோபுரம் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில் ஆசியாவிலேயே 3-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜகோபுரம் மட்டும் 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபிலா மடத்தால் முழுமை பெற்றது.

படம் : Giridhar Appaji Nag Y

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

சந்திர புஷ்கரணி ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இந்த சந்திர புஷ்கரணி வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆடம்பர தீர்த்தம் ஆகிய எட்டுத் தீர்த்தங்களால் சூழப்பட்டுள்ளன. சந்திரபுஷ்கரணியும், ஸ்தல விருட்சமான புன்னை மரமும் பரமபதவாசலுக்கும், ஸ்ரீகோதண்டராமன் சன்னதிக்கும் இடையே அமைந்துள்ளன.

Photo:Ryan

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

திருவிழாக்கள் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி, சித்திரைத் தேரோட்டங்கள் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

Photo: ramesh Iyanswamy

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் சில அற்புதமான புகைப்படங்கள்.

Photo:Raj

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் தூண்களில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள குதிரைச் சிற்பங்கள்.

Photo:Nagarjun Kandukuru

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஒரு பௌர்ணமி தினத்தன்று!

படம் : Jayashree B

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் தேர்த் திருவிழாவின் போது அலங்கரிக்கப்பட்டிருக்கும் தேர்.

படம் : sowrirajan s

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் :

1000 தூண் மண்டபம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 1000 தூண் மண்டபம்.

Photo: Giridhar Appaji Nag Y

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X