» »வேண்டுதலை பலிக்கச் செய்யும் நானூறு வருட பழமை வாய்ந்த நிமிஷாம்பா கோவில் !!

வேண்டுதலை பலிக்கச் செய்யும் நானூறு வருட பழமை வாய்ந்த நிமிஷாம்பா கோவில் !!

By: Balakarthik

'நிமிஷா' என்றால் நிமிடம் என பொருள்தர இந்த ஆலயத்தில் குடிக்கொண்டிருக்கும் தேவியவளை மனதில் நினைத்துக்கொண்டு நிமிடப்பொழுதில் பக்தர்கள் வேண்டிக்கொள்ள அது நடப்பதாகவும் தெரியவருகிறது. நிமிஷாம்பா என்பது பார்வதி தேவியின் மற்றுமோர் வடிவமாகவும் இருக்க, இந்த ஆலயமானது காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கிறது.

நிமிஷாம்பா ஆலயத்தின் வரலாறு:

நிமிஷாம்பா ஆலயத்தின் வரலாறு:

இந்த ஆலயமானது நானூறு வருடங்களுக்கு பழமை வாய்ந்து காணப்பட, மும்மாடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியில் இது கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கற்களால் இங்கே ஸ்ரீ சக்கரமானது பொறிக்கப்பட்டிருக்க, தேவிக்கு முன்னால் இது காணப்படுகிறது. இந்த ஆலயமானது சிறிய கருவறையையும் ஏழு அடுக்கு மாபெரும் நுழைவாயிலுடனான கோபுரத்தையும் சேர்த்து கொண்டிருக்கிறது.

இந்த ஸ்ரீ சக்கரமானது முக்தராஜாவினால் கற்களால் பொறிக்கப்பட்டதாக நம்பப்பட, இவர் அதன்பின்னர் சுய வருத்தம் அடைந்தவர் என்பதும் தெரியவருகிறது.

nimishambhatemple.kar.nic.in

 பொது நம்பிக்கைகள்:

பொது நம்பிக்கைகள்:


பக்தர்கள் எலுமிச்சையையும், எலுமிச்சை மாலையையும் தேவிக்கு அர்ப்பணிக்க, குருக்கள் அந்த எலுமிச்சையை எடுத்து, ஸ்ரீ சக்கரத்தில் அவர்களை ஆசிர்வதித்து, தேவியின் பாதத்தையும் வணங்க அனுமதித்து அனுப்பப்படுகின்றனர்.

குருக்களால் இவை பரிந்துரை செய்யப்பட, நாம் அந்த எலுமிச்சை பழத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு வீட்டின் பூஜை அறையில் வைத்து, தூய்மையான நீரில் மிதக்கவும் விட ஆலோசனை வழங்கப்பட, இதனை சாறாக பிழிந்துக்குடிக்கும் ஒருவருக்கு செழிப்பான வாழ்க்கையும் அமைவதாக நம்பப்படுகிறது.

நிமிஷாம்பாவுடன் இணைந்து, மற்ற சன்னதிகளும் காணப்பட அவை முக்தேஷ்வரா (சிவா), கணேஷா, லக்ஷ்மி நாராயணா மற்றும் ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்:

தசராவின் வரமகாலஷ்மி மற்றும் துர்காஷ்டமியின்போது இந்த ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை அற்று மற்ற நாட்களிலும் கூட்டமானது அலைமோதுகிறது. இந்த ஆலயத்தில் கூட்டமானது அவ்வளவாக காணப்படாமல் திடீரென்று கூடுவதால் அது பலரையும் வியப்பில் தள்ளுகிறது.

nimishambhatemple.kar.nic.in/

நேரம்:

நேரம்:

காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும். இந்த ஆலயம் சிறப்பு நேரங்களில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

நிமிஷாம்பா ஆலயத்தின் இருப்பிடம்:

ஸ்ரீ ரங்கப்பட்டினத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் காணப்பட, மைசூருவிலிருந்து 17 கிலோமீட்டர்கள் தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. நீங்கள் இவ்விடத்தை KSRTC பேருந்துகளின் உதவியுடன் அடைய, மைசூரு அதே நேரத்தில் பெங்களூருவிலிருந்தும் பல வகை பேருந்துகள் வந்த வண்ணம் இருந்துக்கொண்டிருக்கிறது.

நீங்கள் இங்கே தங்கி இரவு நேரத்தில் அயர்ந்து அசதிப்போக்க ஆசைக்கொண்டால், மயூரா நதியின் அழகு முன்னே அல்லது அம்பீலீ ஹோட்டல் விடுதியையும் ஸ்ரீ ரங்கப்பட்டினத்தில் தங்க தேர்வு செய்யலாம்.

nimishambhatemple.kar.nic.in