» »பெங்களூர் டூ மைசூர் செல்லும் வழியில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத பாரம்பரிய இடங்கள்!!

பெங்களூர் டூ மைசூர் செல்லும் வழியில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத பாரம்பரிய இடங்கள்!!

By: Bala Karthik

மைசூர் என்பது மைசூரு என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட, கர்நாடக மாநிலத்தின் பிரசித்திப்பெற்ற நகரமாகவும் மூன்றாவது பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது. இந்த நகரமானது சாமுண்டி மலை அடிவாரத்தில் காணப்பட, பெங்களூருவின் தென்மேற்குப்பகுதியிலும் 146 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

இந்த நகரமானது மைசூர் ராஜ்ஜியத்தின் முன்னால் தலைநகரமாக 600 வருடங்களுக்கு பழமைவாய்ந்து காணப்பட, உடையார் வம்சத்தால் இது ஆட்சி செய்யவும்பட; நீண்ட காலத்திற்கு பிறகு ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் சக்தியால் இடை நீக்கமும் செய்யப்பட்டது. இந்த நகரத்தை கர்நாடகாவின் கலாச்சார தலைநகரமென அழைக்க, கலாச்சார களை மற்றும் நோக்கத்தையும் இவ்விடமானது கொண்டிருக்கிறது.

பாரம்பரிய அமைப்பு மற்றும் அரண்மனைக்கு பெயர்பெற்ற மைசூருவில் மைசூரு அரண்மனை, சாமுண்டி மலைகளும் என பலவும் அடங்கும். தசரா திருவிழாவுக்கு இவ்விடமானது பெயர்பெற்று விளங்க, வாரம் முன்னதாகவே மக்கள் கூடுகின்றனர்.

மேலும் இந்த நகரம், தலைச்சிறந்த கலை வடிவத்துக்கும் அத்துடன் மைசூரு தசரா போன்ற கலாச்சார திருவிழாவுக்கு பெயர்பெற்று விளங்க, மைசூரு ஓவியங்களுடன் இணைந்து மைசூரு பாகுவென, மைசூரு சந்தன சோப், மைசூரு பட்டுப்புடவைகள் என பலவும் பிரசித்திப்பெற்று இங்கே காணப்படுகிறது.

 வழியின் வரைப்படம்:

வழியின் வரைப்படம்:

ஆதிப்புள்ளி: பெங்களூரு

இலக்கு: மைசூரு

காண சிறந்த நேரங்கள்: அக்டோபர் முதல் ஜூன் வரையில்

எப்படி நாம் அடைவது?

எப்படி நாம் அடைவது?


ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி:

மைசூருவில் விமான நிலையமானது காணப்பட, அது எத்தகைய வணிக நடவடிக்கைகளையும் கொண்டிருக்கிறது. ஆதலால், பெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் அருகில் காணப்படும் ஒரு விமான நிலையமாக அமைய, இங்கிருந்து தோராயமாக 185 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி:

முக்கியமான இரயில் நிலையமாக மைசூரு சந்திப்பு இங்கே காணப்பட, இவ்விடம் நகரத்தின் இதயப்பகுதியில் அமைந்திருக்க, அனைத்து முக்கிய நகரங்களுக்கும், மாநிலம் முழுவதுமுள்ள நகரங்களுக்கும் வழக்கமான இரயில் காணப்பட, நாட்டினை சுற்றி காணப்படும் பல இடங்களுக்கும் இரயில் வசதியானது காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி:

மைசூருவை நாம் அடைய சிறந்த வழியாக சாலை வழியானது காணப்படுகிறது. இந்த நகரமானது சாலையுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்க, மைசூருவின் பல முக்கிய நகரங்களுக்கு வழக்கமான பேருந்துகளும் இங்கே காணப்படுகிறது.

PC:Christopher Fynn

வழிகள் மற்றும் திசைகள்:

வழிகள் மற்றும் திசைகள்:

பெங்களூருவிலிருந்து மைசூருவிற்கு ஒட்டுமொத்தமாக 150 கிலோமீட்டர் ஆகிறது. மைசூருவை நாம் அடைய மொத்தமாக மூன்று வழிகள் காணப்பட, அதனை நாம் இப்போது பார்க்கலாமே...


வழி 1: பெங்களூரு - பிடாடி - ராமநகரா - சன்னாப்பட்னா - மாண்டியா - ஸ்ரீ ரங்கப்பட்டினம் - மைசூரு வழி தேசிய நெடுஞ்சாலை 275

வழி 2: பெங்களூரு - தடாகூனி - கனகப்புரா - மாலவள்ளி - பன்னூர் - ஹரோஹல்லி - மைசூரு வழி தேசிய நெடுஞ்சாலை 209

வழி 3: பெங்களூரு - நேலமங்கலா - சோளூர் - குனிகல் - பெலூர் - நாகமங்கலா - ஸ்ரீ ரங்கப்பட்டினம் - மைசூரு வழி தேசிய நெடுஞ்சாலை 75 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 150 A.

நீங்கள் முதலாம் வழியை தேர்ந்தெடுத்து பயணித்தால் மைசூருவை அடைய உங்களுக்கு 3.5 மணி நேரம் ஆக தேசிய நெடுஞ்சாலை 75இன் வழியாகவும் நாம் செல்கிறோம். இந்த வழியானது ராம நகரா, மாண்டியா, ஸ்ரீ ரங்கப்பட்டினம் போன்ற பல பெயர்பெற்ற நகரங்கள் வழியாகவும் நம் பயணமானது செல்கிறது.


இச்சாலைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுவர, அதிவேகத்தில் பயணிக்கும் நாம் இவ்வழியாக 150 கிலோமீட்டர்கள் மூலம் மைசூருவையும் அடைகிறோம்.


ஒருவேளை நீங்கள் இரண்டாம் வழியை தேர்ந்தெடுப்பீர்கள் என்றால், பெங்களூருவிலிருந்து மைசூருவை நோக்கி செல்லும் இந்த 160 கிலோமீட்டரை தோராயமாக 4 மணி நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை 209இன் வழியாக அடைய முடிகிறது. மூன்றாம் வழியாக நீங்கள் செல்ல, இந்த 188 கிலோமீட்டரை அடைய உங்களுக்கு 4.5 மணி நேரம், தேசிய நெடுஞ்சாலை 75 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 150A வழியாக மைசூருவை அடைய தேவைப்படுகிறது.

இந்த பயணத்தை வாரவிடுமுறை திட்டமாக நீங்கள் கொள்ளலாம். அதனால், சனிக்கிழமை காலை நீங்கள் புறப்பட ஒன்றரை நாளை இங்கே செலவிடவும்கூடும். பெங்களூருவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது மதியம் நீங்கள் புறப்பட மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூருவிற்கு திரும்பியும் விடலாம்.

PC: Ashwin Kumar

 ராம நகராவிலும் ஸ்ரீ ரங்கப்பட்டினத்திலும் ஒரு சிறு நிறுத்தம்:

ராம நகராவிலும் ஸ்ரீ ரங்கப்பட்டினத்திலும் ஒரு சிறு நிறுத்தம்:


அதிகாலையில் பெங்களூருவிலிருந்து நீங்கள் கிளம்ப இருக்காரணங்கள் தேவைப்பட, ஒன்று நகரத்து கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இரண்டாவதாக நெடுஞ்சாலை நெரிசலை தவிர்க்கவும் இந்த அதிகாலை பயணமானது நமக்கு உதவுகிறது.

நெடுஞ்சாலையை நீங்கள் அடைய, காலை உணவினைக்கொண்டு வயிரை நிரப்ப எண்ணற்ற வழிகளானது காணப்பட, அவை பிடாடியின் தட்டை இட்லியில் தொடங்கி, ராம நகராவின் காமட் லோகா ருச்சியின் சுவையூட்டும் தோசை வரை எனவும் காணப்படுகிறது.

காலை உணவை முடித்துக்கொண்டு, வரலாற்று நகரமான ஸ்ரீ ரங்கப்பட்டினத்துக்கு நீங்கள் செல்லவும் மனமானது ஆசைப்படக்கூடும். திப்பு சுல்தானின் தலை நகரமாக ஸ்ரீ ரங்கப்பட்டினம் காணப்பட, ஸ்ரீ ரங்கநாதசுவாமிக்கும், நிஷம்பா தேவிக்கு பெயர்பெற்ற ஆலயங்களையும் அதனை கடந்து திப்பு சுல்தானின் கருவிகள், கும்பஸ், தரியா தௌலத் பாக் மற்றும் திரிவேனி சங்கமத்தையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

PC: Prof. Mohamed Shareef

ஸ்ரீ ரங்கநாத சுவாமி ஆலயம்:

ஸ்ரீ ரங்கநாத சுவாமி ஆலயம்:

விஷ்ணுப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து புனித தளங்களுள் ஒன்றாக ஸ்ரீ ரங்கநாத சுவாமி ஆலயம் காணப்பட, அதோடு இணைந்து பஞ்சரங்க க்ஷேத்ரமும் ஆதி ரங்கா எனப்படும் சிலையும் காணப்படுகிறது. இந்த தெய்வ சிலையால் இவ்விடமானது இப்பெயர் பெற்றது எனவும் தெரியவருகிறது.

PC: Manu narayanan

தரியா தௌலத் பாக் மற்றும் கும்பாஸ்:

தரியா தௌலத் பாக் மற்றும் கும்பாஸ்:


திப்பு சுல்தானின் கோடைக்காலத்து அரண்மனையாக தரியா தௌலத் பாக் காணப்பட, 1784ஆம் ஆண்டு இது கட்டப்பட, இந்தோ - சர்கனிக் பாணி படி இவ்விடம் தேக்குக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கும்பஸ் என்பது திப்பு சுல்தான் ஆத்மாவின் உறைவிட சமாதியாக இருக்க, அவருடைய தந்தையான ஹைதர் அலி மற்றும் அவருடைய தாயான பாத்திமா பேகத்தின் நினைவிடமாகவும் இருக்கிறது. இந்த மூன்று பேரை கடந்து, இங்கே வேற சில உறவினர்களின் கல்லறைகளும் காணப்படுகிறது.

PC: Brian Snelson

நிமிஷம்பா ஆலயம்:

நிமிஷம்பா ஆலயம்:

லோகபாவனி நதிக்கரையில் காணப்படுகிறது நிமிஷம்பா ஆலயம். பக்தர்களால் வேண்டப்படும் இந்த ஆலயமானது பக்தர்களின் குறையை ஒரு நிமிடத்தில் உற்று நோக்குவதாக நம்பப்படுகிறது. அதன்பின்னர் மற்ற இடங்களை நாம் பார்த்து இலக்கான மைசூருவை அடைய, இந்த ஆலயத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த பாரம்பரிய நகரத்தை நாம் அடைய அரை மணி நேரமாகிறது.

PC: Official Site

இலக்கு – மைசூரு:

இலக்கு – மைசூரு:

சாமுண்டீஸ்வரி தேவியின் புக(லி)ழிடமான மைசூரு; சாமுண்டி மலையில் காணப்பட, அதன் உச்சியை அடைந்து அழகிய தேவியையும், நந்தியையும் தரிசனம் செய்ய ஏதுவாக அமைகிறது.

இங்கிருந்து நாம் பார்க்க ஒட்டுமொத்த நகரத்தின் காட்சியையும் நாம் காண; மஹிசாசுராவின் சிலையை காணத்தவறாதீர்கள். இந்த மலையில் இரு ஆலயங்கள் காணப்பட, அவை மஹாபலீஸ்வரருக்கும், மற்றுமொன்று சாமுண்டீஸ்வரி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

PC: Ramesh NG

மைசூரு அரண்மனை:

மைசூரு அரண்மனை:


இங்கே காணப்படும் மற்றுமோர் கம்பீரமான ஈர்ப்பாக மைசூரு அரண்மனையானது காணப்பட, வுடையார் வம்சத்தின் உறுப்பினர்களின் வாழ்விடத்தையும் இவ்விடமானது கொண்டிருக்கிறது.

இந்த அரண்மனையானது 1897 முதல் 1912ஆம் காலத்தில் ஆங்கிலேய கட்டிடக்கலை ஆர்வலரான ஹென்ரி இர்வினால் இந்தோ - சர்கானிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. நல்ல முறையில் அழகுப்படுத்தப்பட்ட சதுரங்க கோபுரமும், குவிமாடமும் அதோடு இணைந்து அழகுப்படுத்தப்பட்ட மேல்புறமென, தர்பார் அரங்கத்தின் செதுக்கப்பட்ட சிற்பங்களும் எனவும் புகழ்பெற்று காணப்படுகிறது.

இங்கே நாம் காண வேண்டிய மற்ற இடங்களாக ஸ்ரீ சமரேந்திரா விலங்கியல் பூங்கா, சைன்ட் பிலோமினா தேவாலயம், கரஞ்சி ஏரி, பிருந்தாவன் தோட்டம், கிருஷ்ண சாகர் அணை மற்றும் ஜகன் மோகன் அரண்மனைகளும் காணப்படுகிறது.

PC: sanchantr