பொங்கல் அதனை தொடர்ந்து குடியரசு தினம் என வரிசையாக நீண்ட விடுமுறைகள் வருகின்றன. அந்த விடுமுறைகளின் போது நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ அருமையான சுற்றுலா செல்லலாம் என விரும்புகிறீர்களா? சென்னையில் இருந்து 500 கி.மீ தொலைவுக்குள் நாம் நிச்சயம் போக வேண்டிய அருமையான சுற்றுலாத்தலங்கள் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.
ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 50% தள்ளுபடி பெற்றிடுங்கள்

சென்னை டு பாண்டிச்சேரி ஜாலியான ECR பயணம் :
பழமை மற்றும் புதுமையின் ரசனையான கலவையாக திகழும் பாண்டிச்சேரி நகரில் இருக்கும் நேர்த்தியான வீதிகள், பிரஞ்சுகால கட்டிடங்கள், சுத்தமான சுற்றுலாதலங்கள் கொண்டாடி மகிழவும், அமைதியாக தனிமையை ரசித்துணர விரும்புகிறவர்களுக்கும் அற்புதமான ஓரிடம். வாருங்கள் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்து வார விடுமுறை நாட்களை பாண்டிச்சேரியில் கொண்டாடலாம்.
Photo:Abhinay Omkar

பயண திட்டம் என்ன?:
கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணித்தால் 154 கி.மீ தொலைவில் உள்ள பாண்டிச்சேரியை மூன்று மணிநேரத்தில் அடைந்து விடலாம். எனினும் பயணத்தின் வழியில் நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு என்பதால் அவற்றை எல்லாம் பார்த்து விட்டு இரவு பாண்டிச்சேரியை அடையலாம். பாண்டிச்சேரியில் உள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
Photo:Looking -> Lens

பயண திட்டம் என்ன?:
கிழக்கு கடற்கரை சாலை தமிழ் நாட்டில் இருக்கும் மிக அற்புதமான சாலைப் பயணங்களில் ஒன்றாகும். வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்திருக்கும் இந்த சாலையில் பயணிக்கையில் மனதை சொக்க வைக்கும் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த சாலையின் நெடுகே நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு.
Photo:Praveen

மாமல்லபுரம்:
கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று மாமல்லபுரம் கடற்க்கரை கோயில். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கல்லால் ஆனதாகும். கற்கோயில் தவிர இந்த வளாகத்தில் பாறைகளில் குடையப்பட்ட யானை, சிங்கம் போன்ற சிற்பங்கள், அர்ஜுனன் தபசு என்ற பாறை சிற்ப தொகுப்பு போன்றவையும் அமைந்திருகின்றன. பாண்டிச்சேரி செல்லும் வழியில் நிச்சயம் இந்த கோயிலுக்கும் செல்ல தவறி விடாதீர்கள்.
Photo:Amit Rawat

முட்டுக்காடு படகு சவாரி:
ECR ரோட்டில் அமைந்திருக்கும் மற்றொரு அற்புதமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம் முட்டுக்காடு படகு சவாரி. 'Backwater' எனப்படும் உப்பங்கழி வகை கடலை கொண்ட இங்கு பல்வேறு வகையான படகு சவாரிகள், கடலில் செல்லும் ஸ்கூட்டர் போன்றவை உள்ளன. சூரியன் மறையும் மாலை நேரத்தில் சூரிய கதிர்கள் கடலை தங்கக்குளம் போல தோன்ற வைக்கும் நேரம் படகு சவாரி செய்ய ஏற்றது.
Photo:Simply CV

பாண்டிச்சேரி:
'குட்டி பிரான்ஸ்' என்றழைக்கப்படும் பாண்டிச்சேரி நகரம் வார விடுமுறையை கொண்டாட இந்தியாவில் இருக்கும் சிறந்த இடங்களில் ஒன்றாகும். 1954ஆம் ஆண்டு பிரஞ்சு காலநியகத்திடம் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை தன் தொன்மையான அடையாளத்தை இழந்து விடாமல் இருக்கும் இந்த அழகிய நகரத்தில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு.
Photo:Jean-Pierre Dalbéra

ஆரோவில்லே:
பாண்டிச்சேரியில் நாம் நிச்சயம் தவற விடகூடாத ஓரிடம் என்றால் அது ஆரோவில்லே தான். சர்வ மதத்தினரும், நாட்டினரும் தங்கள் வேற்றுமையை கடந்து ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வசிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே இந்த ஆரோவில்லே நகரமாகும். இந்நகரத்தின் மையத்தில் இருக்கும் மாத்திரிமந்திர் ஒரு கட்டிடக்கலை அதிசயமாகும். இதனுள் இருக்கும் தியான கூடத்தில் சென்று தியானம் செய்வது அதிசயமான அனுபவத்தை நமக்கு தரும்.
Photo:Devaiah PA

ஆரோவில்லே:
பாண்டிச்சேரியில் சுத்தமான கடற்கரைகள், போர் நினைவிடங்கள், கோயில்கள் என நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு. இவை தவிர பாண்டிச்சேரியில் இருக்கும் பிரஞ்சு உணவகங்களில் சுவையான பிரஞ்சு உணவுகளை சுவைக்க மறந்து விடாதீர்கள்.
Photo:theintlkitchen

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:
பாண்டிச்சேரி நாம் அடிக்கடி சென்ற இடம் தானே அதை தவிர வேறு நல்ல இடங்கள் இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காகவே இருக்கவே இருக்கிறது பாண்டிச்சேரியில் இருந்து 66 கி.மீ தொலைவில் இருக்கும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள். இந்தியாவிலேயே இவ்வகை மாங்க்ரோவ் காடுகள் மேற்கு வங்காளத்திலும் தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Photo:Nagarjun Kandukuru

எப்படி அடைவது?
சென்னையில் இருந்து பாண்டிச்சேரியை அடைந்து அங்கிருந்து கடலூர் வழியாக பிச்சாவரத்தை அடையலாம். பிச்சாவரத்தை எப்படி அடைவது என்பது பற்றிய மேலதிக விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
Photo:Ashwin Kumar

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:
அலையாத்தி காடுகள் (Mongrov Forest) என்பவை கடற்கரையோரத்தில் இருக்கும் மழைக்காடுகள் ஆகும். இவ்வகை காடுகளில் வளரும் மரங்களுக்கு வேர்கள் நிலப்பரப்புக்கு மேல் இருக்கும். ஆக்ஸிஜன் காற்றை உற்பத்தி செய்வதிலும், கடல் அரிப்பை தவிர்ப்பதிலும் இவ்வகை அலையாத்தி காடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிச்சாவரம் அலையாத்தி காடுகளின் வடக்கு எல்லையில் வெள்ளார் ஆறும் தெற்கு எல்லையில் கொள்ளிடம் ஆறும் பாய்கின்றன. இந்த ஆறுகள் அலையாத்தி காடுகள் இருப்பதன் காரணமாக அலைகள் எழாத உப்பங்கழி (Back Water) ஓடையாக மாறி படகு போக்குவரத்திற்கும், கயாக்கிங் போன்ற படகு சவாரி செய்திட ஏதுவானதாக இருக்கிறது.
Photo:Ashwin Kumar

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:
வெறுமனே படகு சவாரி செய்வதற்கு மட்டும் இல்லாமல் அருமையான மிக அரிதான இயற்கை கட்சிகளை காணும் வாய்ப்பையும் நமக்கு வழங்குகிறது. 'Ecotourism' சுற்றுலா சென்றிட மிகவும் ஏற்ற இடமான இங்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மிக அரிதான பறவைகள் பலவற்றை நாம் காணலாம். வாட்டர் ஸ்னிப்ஸ், கோர்மொரன்த்ஸ், ஹெரோன்ஸ், நாரைகள், கொக்குகள், மீன் கொத்தி பறவைகள் போண்டவற்றை இங்கே காணலாம்.
Photo:Nagarjun Kandukuru

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:
பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம். படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம். இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.
கடலூரில் நீங்கள் தங்குவதாக இருந்தால் அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
Photo:Balaji.B ( 1.9 Million Views )

அலைகள் கவிபாடும் தரங்கம்பாடி:
பிச்சாவரத்தில் இருந்து 68 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தரங்கம்பாடி நகரம். பழமையான வரலாற்று நகரம் ஒன்றிற்கு செல்ல வேண்டும் என விருப்பம் இருந்தால் நிச்சயம் நீங்கள் தரங்கம்பாடிக்கு செல்ல வேண்டும். அந்நகரத்தின் பழம்பெருமைகளை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
Photo:Joseph Jayanth

அலைகள் கவிபாடும் தரங்கம்பாடி:
'டிரான்கிபார்' என டேனிஷ்க்காரர்களால் அழைக்கப்பட்ட தரங்கம்பாடி தன்னுள் பெரும் வரலாற்று சிறப்புக்களையும்,பழமையான அடையாளங்களையும் இன்றும் தாங்கி நிற்கிறது. 1620 முதல் 1845 வரை டேனிஷ் காலனியாக விளங்கிய இந்த நகரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் கிறிஸ்தவர்களின் புனித நூலான 'பைபிள்' அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
Photo:Chenthil

அலைகள் கவிபாடும் தரங்கம்பாடி:
கி.பி. 1306ல் குலசேகரபாண்டியன் என்ற மன்னன் இவ்வூரை தோற்றுவித்து மணிவண்ணீசுவரமுடையார் என்ற நாமம் உடைய சிவ பெருமானின் கோயில் ஒன்றையும் தொற்றுவித்திருக்கிறான். இதனாலேயே இந்த ஊர் குலசேகர பட்டணம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருக்கிறது.
Photo:Sankara Subramanian

அலைகள் கவிபாடும் தரங்கம்பாடி:
இங்கு டேனிஷ்க்காரர்களால் கடற்க்கரை ஓரத்தில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை இந்நகரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும். 'டென்ச்போராக் கோட்டை' என்பது இதற்கு சூட்டப்பட்ட பெயராகும். 1845ஆம் ஆண்டு தரங்கம்பாடியுடன் சேர்த்து இக்கோட்டையையும் டேனிஷ்க்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் விற்ற பிறகு இதன் முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு பிறகு அரசு அலுவலகமாக செயல்பட்டு வந்த இக்கோட்டையை 1978ஆம் ஆண்டு முதல்தமிழக அரசின் தொல்லியல் துறை இதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்கிறது.
Photo:Joseph Jayanth

அலைகள் கவிபாடும் தரங்கம்பாடி:
மேலும் இந்த கோட்டையினுள் டேனிஷ்க்காரர்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்களை உடைய சிறு அருங்காட்சியகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கே அவர்கள் பயன்படுத்திய வாள்கள், ஈட்டிகள், அலங்கார பொருட்கள் போன்றவற்றை நாம் காணலாம்.
சென்னை நகரில் இருந்து வெறும் 291 கி.மீ தூரத்தில் அமைந்திருப்பதால் வார விடுமுறையை கழிக்க இங்கு நிச்சயம் சென்று வரலாம். இந்தியாவில் டேனிஷ் காலனியகத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு தரங்கம்பாடி மட்டுமே ஒரே வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Photo:Mukulfaiz



Click it and Unblock the Notifications






