சிட்டி பேலஸ் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம்1969ம் ஆண்டில் இம்மாளிகையின் பராமரிப்புக்கான நிதியை பெற வேண்டி பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. ராஜகுடும்பத்தினரின் அரிய ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேவார் மஹாராணாக்களின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை இந்த படங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதனுள்ளே ஒரு ஆயுதக்காட்சியகமும் உள்ளது.
இங்கு பல்வகை ஆயுதங்கள் மற்றும் தற்காப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மேவார் மஹாராணா அறக்கட்டளை மையத்தினால் நிர்வகிக்கப்படும் அருங்காட்சியகத்தில் ஷீஜி அர்விந்த் சிங் மேவார் அவர்களின் விசேஷமான ஓவியப்படங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்துள்ளது.



Click it and Unblock the Notifications