நாக்டா எனும் இந்த சிறுநகரம் உதய்பூரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது. இது நான்காம் மேவார் மன்னரான நாகாதித்யாவால் 6ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும். அக்காலத்தில் நாகாஹிரிடா என்றழைக்கப்பட்ட இந்நகரம் மேவாரின் தலைநகரமாக திகழ்ந்துள்ளது.
இந்த சிறுநகரம் உதய்பூருக்கு வடமேற்கே நாத்வாரா செல்லும் வழியில் பகேலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு பல அற்புதமான கோயில்கள் உள்ளன. இவற்றில் 10 நூற்றாண்டைச் சேர்ந்த சாஸ்-பஹு கோயில் குறிப்பிடத்தக்க பெருமையைக் கொண்டுள்ளது.
ஜைன முனிவரான ஷாந்தி நாத் பெயரில் எழுப்பப்பட்டுள்ள ஜெயின் கோயில் இப்பகுதியின் மற்றொரு விசேஷமான அம்சமாகும். ராணா கும்பா மன்னரின் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படும் இக்கோயிலில் வித்தியாசமான 9 அடி உயர விக்கிரகம் காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications