சஹேலியான் கி பாரி, உதய்பூர்

சஹேலியான் கி பாரி எனும் பெயருக்கு ‘சேடிப்பெண்களின் தோட்டம்’ என்பது பொருளாகும். இந்த தோட்டம் ராஜகுல பெண்களுக்காக மஹாராணா சங்க்ராம் சிங் அவர்களால் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

மன்னரே இந்த வனப்பு பொருந்திய தோட்டத்தை வடிவமைத்து 48 சேடிப்பெண்களுடன் மணவாழ்க்கையை துவங்கியிருந்த தன் ராணிக்கு பரிசளித்ததாக சொல்லப்படுகிறது.

ஃபதேஹ் சாஹர் ஏரியில் கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தோட்டம் அழகான நீரூற்றுகளுக்கும், செழுமையான பச்சைப்புல்வெளிகளுக்கும் மற்றும் வெள்ளைப்பளிங்குக்கல் வேலைப்பாடுகளுக்கும் புகழ் பெற்றுள்ளது.இந்த தோட்டத்தின் பிரதான அம்சம் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட நீரூற்று சாதனங்களாகும். இங்குள்ள எல்லா நீரூற்றுகளும் பறவைகள் தங்கள் மூக்கிலிருந்து நீர் சொரிவது போல் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றைச்சுற்றி கருப்பு கல்லால் ஆன பீடங்கள் காணப்படுகின்றன. இந்த தோட்டத்தினுள் ராஜகுடும்ப பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

இது தவிர ஒரு ரோஜா தோட்டம் மற்றும் ஒரு தாமரைத்தடாகம் போன்றவை இந்த தோட்டத்தில் உள்ள விசேஷ அம்சங்களாகும். இந்த தோட்டப்பூங்கா காலை 9 மணியிலிருந்து 6 மணி வரை திறந்துள்ளது.

Please Wait while comments are loading...