Search
  • Follow NativePlanet
Share

உணா – கடவுள்களின் உண்மையான வசிப்பிடம்

17

ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள சுவான் நதிக்கரையில் வீற்றிருக்கும் முதன்மையான மற்றும் புகழ் பெற்ற சுற்றுலாதலம் தான் உணா. பல்வேறு சிறந்த சுற்றுலாப்பகுதிகளை கொண்ட உணா மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. ‘உணா’ என்ற இந்த பெயர் சீக்கியர்களின் ஐந்தாவது குருவான ஸ்ரீ குரு அர்ஜன் தேவ் அவர்களால் வழங்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் சொல்கின்றனர்.

உணா என்ற சொல் 'வளர்ச்சி' என்று பொருள்படும் 'உண்ணத்தி' என்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்ததாகும். பஞ்சாப் மாநிலத்திலிருந்த ஹோசியர்பூர் மாவட்டத்திலிருந்து 1972-ம் ஆண்டு உணா தனி மாவட்டமாக பிரிந்து வந்தது.

உணா நகரம், மத வழிபாட்டுத் தலங்களான தேரா பாபா பார்பாக் சிங் குருத்துவாரா, பங்கானா லதியன் பிப்லு மற்றும் சிந்துபூரணி கோவில் ஆகியவற்றிற்காக புகழ் பெற்ற நகரமாகும்.

தேரா பாபா பார்பாக் சிங் குருத்துவாராவானது சீக்கியர்களிடையே மிகவும் புகழ்பெற்ற இடமாகும். உணாவில் இருந்து 40 கிமீ தொலைவிலுள்ள மலையின் உச்சியில் அமைந்திருக்கும் இந்த இடம், யூகலிப்டஸ் மரங்களால் சூழப்பட்டிருக்கும்.

சுற்றுலாப் பயணிகள் சோலா சிங்கி தார் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பங்கானா லதியான் பிப்லுவிற்கும் இங்கிருந்து சென்று வரலாம். இந்த இடத்திலிருந்த படியே, சற்று தொலைவில் அமைந்திருக்கும் கோவிந்த சாகர் ஏரியின் மனம் மயக்கும் அழகை காண முடியும்.

இந்து கடவுளான சிந்துபூரணியை வணங்குவதற்காக உள்ள மற்றுமொரு கோவில் சிந்துபூரணி கோவிலாகும். சோலா சிங்கி தார், பார்வெயின், குட்லெஹார் கோட்டைகள், ஷீட்லா தேவி கோவில், பாபா ருத்ரானந்தா ஆசிரமம் மற்றும் ஆம்ப் ஆகியவை இங்கு அமைந்துள்ள பிற முக்கியமான சுற்றுலா தலங்களாகும்.

உணா நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் வான்வழி, இரயில் வழி மற்றும் சாலை வழி போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. உணாவிற்கு வரத் திட்டமிடும் சுற்றுலாப்பயணிகள் மார்ச் மாதம் முதல் மே மாதத்தின் கடைசி வரை நீடித்திருக்கும் கோடைகாலத்தில் வருவது நல்லது. இந்த காலகட்டத்தில் உணாவின் பருவநிலை மிகவும் அருமையாகவும் மற்றும் வசதியானதாகவும் இருக்கும்.

உணா சிறப்பு

உணா வானிலை

சிறந்த காலநிலை உணா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது உணா

  • சாலை வழியாக
    உணாவிற்கு வர திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் பஸ் வழியாகவும் வரலாம். சொகுசான மற்றும் வசதியான பஸ்கள் டெல்லி, பானிபட், அம்பானா, சண்டிகர் மற்றும் ரோபர் ஆகிய நகரங்களிலிருந்து உணா நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஹோசியார்பூர், ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய அருகிலுள்ள இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பஸ்களில் ஊனாவிற்கு செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    உணாவில் உள்ள சிறிய இரயில் நிலையம் டெல்லி, சண்டிகர் மற்றும் ஹோசியார்பூர் ஆகிய முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    78கிமீ தொலைவில் உள் ஜலந்தர் விமானதளம் உணாவிற்கு மிக அருகில் உள்ள விமான தளமாகும். அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையமும் உணாவிற்கு மிக அருகிலுள்ள விமான நிலையமாகும். இந்த சர்வதேச விமான நிலையம் மஸ்கட், லண்டன், டெஹ்ரான், தாஷ்கண்ட் மற்றும் ஷார்ஜா ஆகிய வெளிநாட்டு நகரங்களுடன் நல்ல தொடர்பிலுள்ளது. சுற்றுலாப்பயணிகள் விமானநிலையத்திலிருந்தே ஊனா செல்வதற்கான டாக்ஸிகளை அமர்த்திக் கொள்ள முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun