Search
  • Follow NativePlanet
Share

உத்தரே - அமைதியை நோக்கி ஒரு பயணம்!

10

சிக்கிம் மாநிலத்தில் உள்ள மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் உத்தரே என்ற சுற்றுலாத் தலம் இயற்கை அழகிற்கும் அதன் வளமைக்கும் பெயர் பெற்ற ஒரு பகுதி ஆகும்.

உத்தரேயில் இருந்து இமயமலைச் சிகரங்களை ஆசைதீர கண்டு களிக்கலாம். அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் பனி போர்த்தப்பட்ட இமயமலையின் வெள்ளிச் சிகரங்களை உத்தரே பகுதியிலிருந்து தெள்ளத் தெளிவாகப் பார்க்கலாம்.

அவ்வாறு செல்லும் போது சிங்ஷோர் என்ற ஒரு உயரமான பாலத்தைக் கடக்க வேண்டும். இந்த பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உத்தரே கடல் மட்டத்திலிருந்து 6600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

உத்தரேயில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. குறிப்பாக கக்யு கும்பா என்று அழைக்கப்படும் ஒரு மடம், டென்டாம் சிகரம், மெயின்பஸ் நீர்வீழ்ச்சி மற்றும் செவ்யாபாங் கணவாய் ஆகிய இடங்கள் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் ஆகும். ஆண்டு முழுவதும் உத்தரே பகுதியில் மிதமான மற்றும் இதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.

உத்தரே பகுதியை அடைவது மிகவும் எளிதானது. உத்தரேக்கு அருகில் பெல்லிங் உள்ளது. எனவே இந்த நகரத்திலிருந்தும் மற்ற அருகாமை நகரங்களிலிருந்தும் பேருந்து மூலம் உத்தரேயை வெகுச் சுலபமாக  அடையலாம்.

உத்தரே சிறப்பு

உத்தரே வானிலை

சிறந்த காலநிலை உத்தரே

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது உத்தரே

  • சாலை வழியாக
    பேருந்து மூலம் உத்தரேயை அடைவது மிகவும் எளிதானது. ஏனெனில் உத்தரேக்கு அருகில் 27 கிமீ தொலைவில் பெல்லிங் என்ற நகரம் அமைந்திருக்கிறது. பெல்லிங்கிலிருந்து பேருந்து மூலம் ஒன்றரை மணி நேரத்தில் உத்தரேயை அடையலாம். அதுபோல் கெய்சிங் மற்றும் டென்டும் ஆகிய பகுதிகளிலிருந்து உத்தரேக்கு செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தொடர்வண்டி மூலம் செல்ல வேண்டும் என்றால் உத்தரேக்கு அருகில் அமைந்திருக்கும் புதிய ஜல்பய்குரி தொடர்வண்டி நிலையத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் உத்தரேக்கு அருகில் சிக்கிமின் பக்டோக்ரா விமான நிலையம் அமைந்திருக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 Sep,Sun
Return On
07 Sep,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 Sep,Sun
Check Out
07 Sep,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 Sep,Sun
Return On
07 Sep,Mon