பவானி தீவு, விஜயவாடா

கிருஷ்ணா ஆற்றின் நடுவே 130 ஏக்கர் பரப்பளவில் இந்த புகழ் பெற்ற பவானி தீவு அமைந்துள்ளது. பிரகாசம் அணைக்கட்டிற்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த தீவை ஒரு சொர்க்கத்தீவு என்றே சொல்லலாம்.

கிருஷ்ணா ஆற்றிலுள்ள மிகப்பெரிய தீவாக இது அமைந்துள்ளது. சமீப காலமாக ஒரு முக்கியமான பிக்னிக சிற்றுலாத்தலமாக இது பிரபல்யமடைந்து வருகிறது. நீச்சல்குளங்கள் மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆந்திர மாநில சுற்றுலாத்துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இந்த தீவுக்கு செல்வதற்கு துர்க்கா காட் எனும் ஆற்றுத்துறையிலிருந்து படகுப்போக்குவரத்து இயக்கப்படுகிறது.

சாகச நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த தீவில் காணப்படுகின்றன. ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலமான இந்த பவானி தீவிற்கு விஜயம் செய்வதற்காகவே விஜயவாடா நகருக்கு ஒரு பிரத்யேக பயணம் மேற்கொள்ளலாம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

Please Wait while comments are loading...