பிரகாசம் அணைத்தடுப்பு, விஜயவாடா

கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பிரகாசம் அணைத்தடுப்பானது ஒரு ஏரி போன்ற நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது. அணைத்தடுப்பு மீதிருந்து இந்த பிரம்மாண்ட நீர்த்தேக்கத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம்.

பிரமிக்க வைக்கும் 1223.5 மீட்ட நீளமுடைய இந்த அணைக்கட்டுமானம் கிருஷ்ணா மாவட்டத்தையும் குண்டூர் மாவட்டத்தையும் ஒரு பாலம் போன்று இணைக்கிறது. 1852ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1855ம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்திலிருந்து புறப்படும் மூன்று கால்வாய்கள் விஜயவாடா நகரத்தின் வழியே வெணிஸ் நகர கால்வாய்கள் போன்று ஓடுகின்றன.

Please Wait while comments are loading...