Search
  • Follow NativePlanet
Share

வோக்கா – லோதாக்களின் பூமி!

14

நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது.

1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து, இதனை நாகா மலைகள் மாவட்டத்தின் தலைமையகமாக, அஸ்ஸாமின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

வோக்கா ஏராளமான மலைகள் மற்றும் மலைமுகடுகளால் சூழப்பட்டுள்ளதனால் இது, அழகிய இயற்கைக்காட்சிகள் நிறைந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

இது வடக்குப்புறத்தில் மோக்கோக்சங் மாவட்டத்தாலும், கிழக்குப்புறத்தில் சூன்ஹேபோட்டோவினாலும், மேற்குப்புறத்தில் அஸ்ஸாமினாலும் சூழப்பட்டுள்ளது.  

வோக்காவில் சுற்றுலா

லோதா பழங்குடியினர் மிகவும் அன்பானவர்கள். வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளை நட்போடு வரவேற்று மனதார அரவணைக்கின்றனர். இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான டோக்கு, பிக்குச்சாக் மற்றும் இமோங் ஆகியவற்றின் போது மட்டும் தான் சிறந்த உள்ளூர் நடனம் மற்றும் இசை ஆகியவற்றைக் கண்டு ரசிக்க இயலும்.

பல தலைமுறைகளாக வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கைவினை தொழில்நுட்பத்தின் மூலம் இங்கு தயாராகும் சால்வைகளுக்கு இந்நகரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வோக்கா நகரம், தியி சிகரம், டோட்ஸு மற்றும் டொயாங் நதி போன்ற பல சுற்றுலா ஈர்ப்புகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடிமக்கள், நாகலாந்து மாநிலத்திற்குள் செல்ல வேண்டுமெனில், ஒரு உட்புற அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியது அவசியம். இந்த எளிய ஆவணத்தை, புது தில்லி, கொல்கத்தா, குவாஹத்தி அல்லது ஷில்லாங்கில் உள்ள நாகலாந்து இல்லத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

சுற்றுலாப் பயணிகள் இவ்வனுமதிச் சீட்டை, திமாப்பூர், கோஹிமா மற்றும் மோக்கோக்சங் ஆகிய நகரங்களின் உதவி கமிஷனருக்கு ஆவண செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.

வோக்கா சிறப்பு

வோக்கா வானிலை

சிறந்த காலநிலை வோக்கா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது வோக்கா

  • சாலை வழியாக
    இந்நகரம், இதன் முக்கிய நுழைவுவாயிலாகத் திகழும் திமாப்பூர் நகரத்துடன் இதனை இணைக்கும் என்ஹெச்-39 சாலை வழி போக்குவரத்தையே முக்கியமாக நம்பி உள்ளது. இந்நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலத் தலைநகரான கோஹிமாவிலிருந்தும் இவ்வூரை அடையலாம். வோக்காவுக்குச் செல்லும் நாகலாந்து மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகள் மற்றும் ஷட்டில் சேவைகள் இவ்விரு இடங்களிலிருந்தும் எளிதாகக் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    வோக்காவில் இரயில் நிலையம் இல்லை. நீங்கள் வோக்காவுக்கு இரயில் மூலம் செல்ல திட்டமிட்டால், திமாப்பூர் இரயில் நிலையத்தில் நீங்கள் இறங்கிக் கொள்ளலாம். நகரத்திலிருந்து சுமார் 157 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இரயில் நிலையம், புது தில்லி, குவாஹத்தி, கொல்கத்தா மற்றும் நாட்டின் இதர முக்கிய நகரங்களுடனும், தினப்படி இயங்கும் இரயில்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    வோக்கா நகரத்துக்கென தனிப்பட்ட விமான நிலையம் கிடையாது. திமாப்பூர் விமான நிலையமே இங்கு செல்வதற்கான நுழைவு வாயிலாகத் திகழ்கிறது. சுமார் 162 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்விமான நிலையம் டாக்ஸிகள் மற்றும் ஷட்டில் என்றழைக்கப்படும் சிற்றிடைப் போக்குவரத்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் கொல்கத்தா மற்றும் குவாஹத்தியிலிருந்து இந்நிலையத்துக்கு இயக்கப்படும் விமான சேவைகளை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri