Search
  • Follow NativePlanet
Share

யூக்சோம் - துறவிகளின் உறைவிடம்!

14

மேற்கு சிக்கிம் பகுதியின் கேய்ஜிங் மாநகராட்சியில் அமைந்துள்ள யூக்சோம் நகரம் பல சமயஞ்சார்ந்த ஸ்தலங்களை கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். அதுமட்டுமல்லாமல் மலை ஏறுதல் மற்றும் நடை பயணம் மேற்கொள்பவர்களிடமும் இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது.

யூக்சோம் நகரம்தான் இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமின் முதல் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. கி.பி.1642 ஆம் ஆண்டு சிக்கிமை ஆண்ட முதல் சோக்யல் (சமயஞ்சார்ந்த அரசர்), ப்ஹுண்ட்சோக் நம்க்யலால் இது அறிவிக்கப்பட்டது. சோக்யல்கள் சிக்கிமை கிட்டத்தட்ட 333 வருடங்கள் ஆண்டனர்.

இந்த இடத்திற்கு மற்றறொரு சிறப்பு உண்டு. இங்குள்ள உள்ளூர் மக்களே சுற்றுலாக்குறிய  சுற்றுப்புறச்சூழலை சீராக்குவதற்கான மேம்பாடுகளை செய்து வருவதால், இந்த இடம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுவதற்கான சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

யூக்சோமின் வரலாறு

சிக்கிமின் பழமையான தலைநகரமாக இருந்தது யூக்சோம். "மூன்று புலமை வாய்ந்த துறவிகள் சந்திக்கும் இடம்" என்பதே யூக்சோம் என்ற வார்த்தைக்கு பொருளாகும்.

திபெத்திலிருந்து யூக்சோமிற்கு வந்த மூன்று துறவிகள், சிக்கிமின் முதல் சமயஞ்சார்ந்த அரசராக ப்ஹுண்ட்சோக் நம்க்யல் என்பவரை ஆட்சியில் அமர்த்தினர். அவருக்கு சோக்யல் என்ற பெயரையும் வழங்கினர். இதன் இயற்கை அழகினால் இந்த மலையை இதற்கு முன் நே-பேமதங் என்று அழைத்து வந்தனர்.

புவியியல்

1780 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யூக்சோம், 2006.9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமமாகும். பல்வேறு மலைகளால் சூழ்ந்துள்ள இந்த இடம் தான் கஞ்செஞ்சுங்கா மலையின் நுழைவாயிலாக உள்ளது.

இந்த இடத்தின் பருவ நிலை மாற்றங்கள்

யூக்சோம் நகரம் சராசரி உயரத்தில் அமைந்துள்ளதால், இங்கு வானிலையும் மிதமானதாக விளங்கும். மார்ச் முதல் ஜூன் மாதம் வரையும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையும் இங்கு இனிமையான வானிலை நிலவும். இருப்பினும் டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர் காலம் அதிக குளிரோடு இருக்கும்.

இந்த இடம் இங்குள்ள அடர்ந்த காடுகளுக்காகவும் புகழ் பெற்றது. இங்கு மேப்பில், செஸ்ட்நட், மங்கோலியா, சில்வர் பிர், பிர்ச், ஓக் மற்றும் அல்டர் போன்ற மரங்களை காணலாம்.

இங்கு காணப்பட வேண்டிய தலங்கள்

யூக்சோமில் பல சுவாரசியமான இடங்கள் உள்ளன. ரத்தோங் சு நதி, கேசியோபல்ரி ஏரி, திபெதியன் புத்த மடம், துப்டி மடம், கர்டொக் மடம் மற்றும் தஷிடிங் மடம் போன்றவைகள் தான் அவற்றில் சில.

யூக்சோம் சிறப்பு

யூக்சோம் வானிலை

சிறந்த காலநிலை யூக்சோம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது யூக்சோம்

  • சாலை வழியாக
    யூக்சோமிற்கு கேய்ஜிங் மற்றும் காங்டாக்கிலிருந்து தரை வழியே செல்ல பேருந்து, கார் மற்றும் ஜீப் வசதிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    யூக்சோமிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் 150 கி.மீ. தொலைவில் உள்ள புது ஜல்பாய்குரியில் உள்ளது. இங்கிருந்து யூக்சோமிற்கு டாக்சி மூலமாக வந்தடையலாம். யூக்சோமிற்கு ஜோர்தங் வழியே வந்தடைய ஏழு மணி நேரமாகும். மேலும் இரவு நேரத்தில் இந்த பாதையில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை. எனவே யூக்சோமிற்கு செல்லவேண்டுமானால் காலை கிளம்புவதே சிறந்தது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    யூக்சோமிற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் பக்டோக்ராவில் உள்ளது. இது சிலிகுரியில் இருந்து 12 கி.மீ. தூரத்திலும் யூக்சோமிலிருந்து 170 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu