Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள் » கீதம் ஏரி மற்றும் சுர் சரோவர் பறவைகள் சரணாலயம்

கீதம் ஏரி மற்றும் சுர் சரோவர் பறவைகள் சரணாலயம், ஆக்ரா

76

ஆக்ரா -  டெல்லி NH2 நெடுஞ்சாலையில் இந்த கீதம் ஏரி அமைந்திருக்கிறது. சிக்கந்த்ராவிலிருந்து 12 கி.மீ தூரத்திலும் ஆக்ராவிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் இது உள்ளது.

ரம்மியமான இந்த நீர்ச்சேகரமானது அமைதியான இயற்கைச்சூழலின் நடுவே அமைந்திருப்பதால் ஒரு சிறந்த பிக்னிக் ஸ்தலமாக பிரபல்யமடைந்துள்ளது. நகரத்து அலுப்பிலிருந்து தப்பித்து ஓய்வெடுக்க இது மிகவும் ஏற்ற இடமாகும்.

7.13 ச.கி.மீ பரப்பு கொண்ட நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து வரும் நீர் வரத்தால் நிரம்பியிருக்கும் இந்த ஐங்கோண வடிவிலான ஏரி பல்வேறு பறவைகள் விஜயம் செய்யும் ஸ்தலமாகவும் இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். ஏராளமான மீன் வகைகளும் இந்த ஏரியில் காணப்படுகின்றன.

கீதம் ஏரிக்கு அருகிலேயே இயற்கை அழகு நிரம்பிய சுர் சரோவர் பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. இங்கு 100 வகையான வசிப்பிட மற்றும் புகலிடப்பறவைகள், 12 வகையான பாலூட்டிகள் மற்றும் 18 வகையான ஊர்வன விலங்குகள் வசிக்கின்றன.

இங்குள்ள பறவை வகைகளில் சைபீரிய கொக்கு, பிராம்மணி வாத்து, கரண்டிவாய் கொக்கு, சௌரஸ் கொக்கு, மம்பட்டி கொக்கு, கட்வால் கொக்கு மற்றும் தட்டை அலகு வாத்து ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கீதன் ரயில் நிலையத்திலிருந்தும் நேரடியாக பயணிகள் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்யலாம். உத்தரப்பிரதேச வனத்துறை இந்த பகுதி முழுவதையும் தேசிய பறவைகள் சரணாலயமாக 1991ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி அறிவித்திருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed