Search
  • Follow NativePlanet
Share

அல்ச்சி - ஆழ்ந்த அமைதியை நோக்கி ஒரு பயணம்!

19

அல்ச்சி என்ற புகழ் பெற்ற கிராமம் லடாக்கிலுள்ள லே மாநகராட்சியில்  அமைந்துள்ளது. இண்டஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கிராமம் இமயமலை வட்டாரத்தின் மத்தியில் லேவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.

இக்கிராமம் இதன் பெயராலேயே ஒரு மடத்தை கொண்டுள்ளது.  லடாக்கில் உள்ள இந்த அல்ச்சி மடம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலம். லடாக்கில் உள்ள அனைத்து மடங்களும் மலையின் மேல் அமையப்பெற்றுள்ளன.

மாறாக இந்த அல்ச்சி மடம் மட்டும் தான் தட்டையான நிலப்பரப்பில் உள்ளது. இந்த மடம் 11-ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட ஒன்று. மேலும் தனித்தன்மை வாய்ந்த கட்டிடக்கலையுடன் இது விளங்குவதால் இது மேலும் புகழ் பெற்று விளங்குகிறது.

இந்த மடத்தின் கட்டிடத்திற்குள் மூன்று முக்கிய கோவில்கள் உள்ளன. அவைகள் டு-காங், சும்-செக் மற்றும் மஞ்சுஸ்ரீ கோவில். இந்த கோவில் சுவற்றில் புத்தர் மற்றும் பல கடவுள்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

இயற்கை அழகுக்கு மத்தியில் இருக்கும் இந்த கிராமம் பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் புத்த துறவிகளின் வாழ்க்கை முறைகளை மிக அருகில் இருந்து காணலாம். இந்த கிராமத்தில் இரவு தங்குவதற்கும் சில இடங்கள் உண்டு.

அல்ச்சி கிராமத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் லேவில் இருக்கும் விமான நிலையமே. இந்த விமான நிலையத்திலிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களான புனே, டெல்லி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு விமான சேவை இயங்குகிறது. அல்ச்சி கிராமத்திற்கு மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம் பதான்கோட் மற்றும் சன்டிகர்ரில் உள்ளது.

இந்த கிராமத்தில் உச்ச பட்சம் வானிலை நிலவும். உறைந்து போகும் அளவிற்கு கடும் குளிரை கொண்டுள்ளதாக இருக்கும் குளிர் காலம். ஆனால் வெயில் காலத்தின் போது மிதுவான வெப்ப நிலை நிலவுவதால் இதமாக இருக்கும்.

இந்த இடத்தில் வருடத்தின் பல நேரங்களும் மழை பெய்யும். கோடைக்காலத்தில் நீண்ட பகலை கொண்டிருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை அல்ச்சி கிராமம் வருவதற்கு உகுந்த நேரமாகும்.

அல்ச்சி சிறப்பு

அல்ச்சி வானிலை

சிறந்த காலநிலை அல்ச்சி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அல்ச்சி

  • சாலை வழியாக
    மணாலி மற்றும் ஸ்ரீநகரிலிருந்து லே செல்ல சீரான முறையில் பேருந்துகள் இயங்குகின்றன. பயணிகள் தங்களின் வசதிக்கேற்ப டீலக்ஸ் அல்லது சாதாரண பேருந்துகளை தேர்ந்தேடுக்கலாம். பேருந்துகள் மூலம் பயணம் செய்ய நூறு ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரும் தேவைப்படும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அல்ச்சி கிராமத்திற்கு மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம் பதான்கோட் மற்றும் சண்டிகரில் உள்ளது. லேவிலிருந்து பதான்கோட் 776 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஊர்களுக்கும் சீரான ரயில் சேவைகள் உண்டு. பதான்கோட் ரயில் நிலையத்திலிருந்து பல முக்கிய இந்திய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. பயணிகள் பதான்கோட்டில் இருந்து வாடகை கார்கள் மூலமாக அலச்சியை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அல்ச்சிக்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் லேவில் உள்ளது. லே விமான நிலையத்திலிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களான புனே, டெல்லி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு விமான சேவை உள்ளது. அதே போல் டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து அன்றாடம் பல விமானங்கள் வெளிநாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று வருவதால், வெளிநாட்டு பயணிகள் இங்கு வருவதும் சுலபம். லே விமான நிலையத்திலிருந்து வாடைகள் கார்கள் மூலம் அலச்சியை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu