Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கூர்க் » ஈர்க்கும் இடங்கள் » சோம்வார்பேட்

சோம்வார்பேட், கூர்க்

86

கொடகுப்பகுதியில் உள்ள ஒரு சிறு பஞ்சாயத்து நகரம் இந்த சோம்வார்பேட் ஆகும். அதுமட்டுமன்றி சோம்வார்பேட் -தாலுக்காவிலேயே முக்கிய நகரமாகவும் விளங்குகிறது. இந்த சோம்வார்பேட் நகரைச்சுற்றிலும் புஷ்பகிரி மலைகள், கொட்டேபெட்டா மற்றும் மக்களகுடிபெட்டா போன்ற முக்கிய இடங்கள் உள்ளன.

சோம்வார்பேட்டிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள புஷ்பகிரி கொடகுப்பகுதியில் இரண்டாவது உயரமான சிகரமாகும். இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பாபதி எனும் பகுதியிலிருந்து ஏறி இதன் உச்சியை அடையலாம். மேலே உச்சியை அடைவதற்கு 10 கி.மீ தூரத்துக்கு ஏற வேண்டும் என்பது குறிப்பிட த்தக்கது.

மற்றொரு சிகரமான கொட்டேபெட்டா கொடகு பகுதியின் மூன்றாவது உயரமான சிகரமாகும். இது மடிக்கேரிக்கும் சோம்வார்பேட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. கொட்டேபெட்டாவின் உச்சியை அடைய சுமார் 10 கி.மீ தூரம் மலையேற வேண்டும்.

இந்த மலையின் உச்சியில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இந்த மலைகளில் ஏறுவதற்கு அனுமதி ஏதும் தேவையில்லை என்றாலும் உள்ளூர் வழிகாட்டியை துணைக்கு அழைத்துக்கொள்வது நல்லது. மலையேற்ற சாகசத்துக்கு தயாரான உடல்நிலையையும் மனோநிலையையும் பெற்ற பயணிகள் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மக்களகுடிபெட்டா என்பது ஹரங்கி நீர்த்தேக்கத்தின் உப்பங்கழி பிரதேசமாகும். இது இங்குள்ள நெல் வயல்களுக்கும் காட்டு வளத்துக்கும் இயற்கை வனப்புக்கும் பெயர் பெற்றுள்ளது.

இது தவிர சோம்வார்பேட் அருகில் உள்ள மற்றொரு முக்கியமான இடம் மலேமல்லேஷ்வராபெட்டா ஆகும். சோம்வார்பேட்டிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள இந்த இடம் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி திருவிழாக்காக புகழ் பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue