துபரேவிற்கு மிக அருகில் இந்த வாலனூர் மீன்பிடி ஸ்தலம் அமைந்துள்ளது. காவேரியின் உப்பங்கழிப் பகுதியில் அமைந்துள்ள இது தூண்டிலில் மீன் பிடிக்கும் அனுபவத்தை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இடமாகும். ஒட்டு மொத்த கர்நாடக மாநிலத்திலும் தூண்டில் மீன் பிடிப்பதற்கு இப்படி ஒரு பொருத்தமான இடத்தை பார்க்க முடியாது எனும் அளவுக்கு இது இயற்கை அழகோடு காணப்படுகிறது.
சலனமற்று இருக்கும் நீரில் திடீரென்று மீன் துள்ளி எழும்பி குதிப்பதைப் பார்த்து மகிழும் அனுபவம் இங்கு பயணிகளுக்கு கிடைக்கிறது. இங்கு மஷீர், மரால் மற்றும் மாப்ஸ் வகை மீன்கள் கிடைக்கின்றன. மஷீர் மற்றும் மரால் வகை மீன்களை பிடிப்பது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இந்த மீன் வகைகள் அளவில் மிகப்பெரியதாக இருக்கும் என்பதும் காவேரி உப்பங்கழியில் மட்டுமே இவ்வகை மீன்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வலனூரில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனங்களால் ‘மஷீர் மீன்பிடி முகாம்’(சிறு சிற்றுலா மற்றும் காட்சி விளக்கப்பயணம்) என்ற பெயரில் சுற்றுலா பயணிகளுக்கென்றே பிரத்யேகமான தனி முகாம்களும் நடத்தப்படுகின்றன.
‘வல்நூர் பிஷிங் காம்ப்’ லிருந்து துவங்கும் இந்த முகாம்கள் அங்கிருந்து ஆற்றின் போக்கில் அமைந்துள்ள தொட்டமகாலி, பீமேஸ்வரி போன்ற இடங்களுக்கு சென்று இறுதியாக காலிபோர் பகுதியில் சென்று முடிவடைகிறது. வல்நூர் பிஷிங் காம்ப்’ல் தூண்டிலில் மீன் பிடிக்க வனத்துறை அலுவலகத்தில் அனுமதிச்சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான தகவலாகும்.



Click it and Unblock the Notifications