கட்டாக்கில் இருந்து 4கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரையை 12கிமீ நீர்ப்பயணம் செய்தும் அடையலாம். அழகு நிறைந்த தீவான இவ்விடம் மகாநதிக்கரையில் உள்ளது. அமைதியான, இயற்கைஅழகுடன் கூடிய இவ்விடத்தில் சாகச விளையாட்டுக்களும் ஏராளமாக உண்டு.
சிவனின் மற்றொரு பெயரான தபாலேஷ்வர் என்பதில் இருந்து இவ்விடம் இப்பெயர் பெற்றது. ஒய்வுக்கு தகுந்த இடமாக சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை கருதுகிறார்கள்.
சாகசப் பிரியர்களுக்கும் இந்த இடம் தகுந்ததாக இருக்கிறது. நீர்விளையாட்டு மையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications