Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » ஜந்தர் மந்தர்

ஜந்தர் மந்தர், டெல்லி

346

டெல்லி நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு சுவாரசியமான அம்சம் இந்த ஜந்தர் மந்தர் ஆகும். புது டெல்லி பகுதியில் அமைந்திருக்கும் இந்த வானசாஸ்திர யந்த்ர வளாகம்  வரலாற்றுகாலத்திலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெருமையுடன் வீற்றிருக்கிறது.

வானசாஸ்திரத்தில் அற்புத ஞானத்தையும் ஆர்வத்தையும் பெற்றிருந்த ஜெய்பூர் ராஜாவான இரண்டாம் ஜெய்சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட 5 வானசாஸ்திர யந்த்ர வளாகங்களில் இதுவும் ஒன்றாகும்.

1724ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் முகமது ஷாவின் விருப்பப்படி வானசாஸ்திர அட்டவணைகளையும், பஞ்சாங்க காலக்குறிப்புகளையும் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ராஜா ஜெய் சிங் இந்த வானசாஸ்திர யந்திர அமைப்புகளை வெகு நுணுக்கமாக வடிமைத்து நிர்மாணித்துள்ளார்.

இதன் மூலம் சூரிய சந்திர கிரகங்களின் நிலைகளை அவதானித்து துல்லியமாக ஒரு பஞ்சாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த ஜந்தர் மந்தர் வளாகத்தில் கிரகங்களின் நிலைகளை அவதானிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட 13 யந்திர அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ‘

ராஜா ஜெய் சிங்கினால் நிறுவப்பட்ட இதர 4 வானியல் ஆய்வு ‘யந்திர’ வளாகங்கள் ஜந்தர் மந்தர் என்ற பெயரிலேயே ஜெய்பூர், வாரணாசி, உஜ்ஜைனி மற்றும் மதுரா ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

இருப்பினும் தற்காலத்தில் பயன்படுத்தப்படும் நவீன சாதனங்களோ, பின்னாளில் பன்மடங்கு வளர்ந்துவிட்ட வானியல் அறிவியல் விதிகளையோ பின்பற்றியிராத இந்த யந்திர அமைப்புகளின் மூலம் துல்லியமாக எதையும் கணக்கிட முடியாது என்பதும், இவை யாவுமே வானசாஸ்திரத்தில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த ஒரு மனத்தால் அடிப்படை அறிவியல் தத்துவங்கள் நிறுவப்படுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த வானசாஸ்திர யந்திர அமைப்புகள் மற்றும் வளாகங்கள் பிரசித்தமான சுற்றுலா அம்சங்களாக மட்டுமே தற்போது புகழ் பெற்று விளங்குகின்றன. அதே சமயம் இவற்றின் பின்னணியில் உள்ள வானியல் அடிப்படை கருத்துகளும் அறிவியல் பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜந்தர் மந்தர் வளாகத்தில் காணப்படும் யந்திர அமைப்புகள்:

சாம்ராட் யந்த்ரா:  இந்த 70 அடி உயர யந்திர அமைப்பு ஒரு மணி நேர இடைவெளிகளில் நேரத்தைக் காட்டும் சூரியக்கடிகார (சன் டயல்) அமைப்பாகும்.

ஜயப்பிரகாஷ் யந்த்ரா: குழிவான அரைக்கோளம் போன்ற அமைப்பு பூமியில் புதைக்கப்பட்டு அவற்றில் பல குறியீடுகளும் விளிம்புகளை இணைக்கும் குறுக்குக்கயிறுகளும் காணப்படுகின்றன.  

ராம் யந்த்ரா: இது கிரகங்களின் நிலையை சரியாக கணிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

மிஷ்ரா யந்த்ரா:  இது உலகின் பல்வேறு பகுதிகளில் உச்சி வேளை  நிலவும் நேரத்தை காட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.

பார்லிமெண்ட் சாலையிலேயே அமைந்துள்ள இந்த ஜந்தர் மந்தர் வளாகத்தை பொதுமக்கள் எல்லா நாட்களிலும் சுற்றிப்பார்க்கலாம். நாடெங்கிலுமிருந்தும் பல சமூகப்போராட்ட குழுக்கள் இந்த ஜந்தர் மந்தர் பகுதியில்தான் கூடி தங்கள் நிலைப்பாட்டை நாட்டிற்கும் அரசுக்கும் கவனப்படுத்துகின்றன என்பது ஒரு கூடுதல் தகவலாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat