Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » காஷ்மீரி கேட்

காஷ்மீரி கேட், டெல்லி

341

மதிற்சுவர் சூழ்ந்த நகரமான பழைய டெல்லிப்பகுதிக்குள் நுழைவதற்கான வாசல்களில் ஒன்றுதான் இந்த காஷ்மீரி கேட். ‘ஷாஜஹானாபாத்’ என்ற பெயரிலும் அழைக்கப்படும் பழைய டெல்லியின் வடபகுதியில் இந்த நுழைவாயில் அமைந்துள்ளது.

1835ம் ஆண்டு ராபர்ட் ஸ்மித் எனும் ராணுவ கட்டிட பொறியாளரால் இந்த வாயில் அமைப்பு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பகுதிக்கு செல்லும் சாலைக்கான வழியாக இருப்பதால் இந்த வாயிலுக்கு இப்பெயர் வந்துள்ளது.

இந்த நுழைவாயில் ஸ்தலம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. 1857ம் ஆண்டு இந்த ஸ்தலத்தில் நிகழ்ந்த போரில் ஆங்கிலேயப்படையினரை இந்திய புரட்சிப்படை தோற்கடித்து டெல்லியை கைப்பற்றியது முக்கிய வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்த நுழைவாயில் ஸ்தலத்தை சுற்றியுள்ள பகுதிகள் யாவுமே காஷ்மீரி கேட் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. மேலும் காஷ்மீரி கேட் பகுதியில்தான் பழைய டெல்லி ரயில் நிலையமும் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.  இவற்றில் ஒன்று - காஷ்மீரி கேட்,  மற்றொன்று சாந்தினி சௌக் ஆகும்.

காஷ்மீரி கேட் ஸ்தலத்துக்கு அருகிலேயே டெல்லி கேட் மற்றும் செயின்ட் ஜேம்ஸ் சர்ச் போன்ற இதர சுற்றுலா அம்சங்களும் அமைந்துள்ளன. மேலும், காஷ்மீரி கேட் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று அமைந்திருப்பதும் முக்கியமான அம்சமாகும். இந்த வரலாற்றுச்சின்னத்தை சுற்றியுள்ள மார்க்கெட் பகுதியானது நாள் முழுக்கவும் பரபரப்பான சந்தடி நிலவும் இடமாக காட்சியளிக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed