Search
  • Follow NativePlanet
Share

ஃபரித்கோட்  - ஒரு அரசமுறைப் பயணம்!

13

ஃபரித்கோட் தென் மேற்கு பஞ்சாபில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். முதலாவதாக 1972-ம் ஆண்டில் பதிந்தா மற்றும் பிரோஸ்பூர் மாவட்டங்களில் வெளியே உருவாக்கப்பட்டது. இந்த நகரம் சூஃபி ஞானியான பாபா ஷேக் ஃபரிதுத்தீன் கஞ்ஸ்ஹகர் பெயரால் அழைக்கப்படுகின்றது. இங்கு சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். மேலும் இங்கு அழகிய குருத்வாராக்கள் மற்றும் கோட்டைகள் உள்ளதால் இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

ஃபரித்கோட் மற்றும் அதனைச்சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

ஃபரித்கோட் சுற்றுலா நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இங்குள்ள பல்வேறு விதத்திலான அற்புதமான கோட்டைகள் மற்றும் அழகிய குருத்வாராக்கள் ஒன்றிணைந்து சுற்றுலா பயணிகளை கவருகின்றது.

இங்குள்ள  ராஜ் மஹால், ஃபேரி காட்டேஜ், கிலா முபாரக் மற்றும் குருத்வாரா, டிலா பாபா ஃபரித்  போன்றவை புகழ்பெற்ற சுற்றுலா தளங்களாக உள்ளன. வரலாற்று ஆர்வலர்கள் இத்தகைய இடங்களுக்கு வருகை தருவதன் மூலம் அதன் வளமான பாரம்பரியத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடைபெறும் ஃபரித் மேளா நாட்டின் பல்வேறு பகுகிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது. இந்த மேளா ஃபரித்கோட் மாவட்ட கலாச்சார சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

ஃபரித்கோட்டை எவ்வாறு அடைவது?

ஃபரித்கோட்டிற்கு அருகில் அமிர்தசரஸ் விமான நிலையம் சுமார் 128 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் ரயில்கள் மற்றும் பஸ்களை பயன்படுத்தி ஃபரித்கோட்டை மிக எளிதாக அடையலாம்.

ஃபரித்கோட் சுற்றுலாவிற்கான சிறந்த நேரம்

அக்டோபர் மற்றும் டிசம்பருக்கு இடைப்பட்ட பருவமே ஃபரித்கோட் சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த பருவம் ஆகும்.

ஃபரித்கோட் சிறப்பு

ஃபரித்கோட் வானிலை

சிறந்த காலநிலை ஃபரித்கோட்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஃபரித்கோட்

  • சாலை வழியாக
    ஃபரித்கோட்டில் நன்கு வடிவமைக்கப்பட்ட சாலை போக்குவரத்து அமைப்பு உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் சாலை மார்க்கமாக ஃபரித்கோட்டை மிக எளிதாக அடையலாம். பஞ்சாப்பில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பொது மற்றும் தனியார் பஸ்கள் மூலம் இந்த நகரத்தை எளிதாக அடையலாம். சுற்றுலா பயணிகள் ஒரு டாக்ஸி அல்லது வாடகை வண்டிகளைப் பயன்படுத்தி ஃபரித்கோட்டை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சுற்றுலா பயணிகள் அமிர்தசரஸ், டெல்லி, சண்டிகர் மற்றும் லூதியானா போன்ற முக்கிய நகரங்களில் இருந்து ரயில் மூலம் ஃபரித்கோட்டை எளிதாக அடையலாம். ஃபரித்கோட்டில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஃபரித்கோட்டிற்கு மிக அருகில் ஸந்தாவன் ரயில் நிலையம் சுமார் 9.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஃபரித்கோட் தேசிய தலைநகரான டெல்லி மற்றும் மாநில தலைநகர் சண்டிகர் போன்ற பல முக்கிய நகரங்களுடன் விமானங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலம் அல்லது வெளி நாட்டில் இருந்து வரும் பார்வையாளர்கள் அமிர்தசரஸில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி ஃபரித்கோட்டை அடையலாம். இந்த விமான நிலையம் ஃபரித்கோட்டில் இருந்து சுமார் 134 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue