ஹைதராபாத் நகரில் உள்ள இந்த ஆஸ்மன் கர் அரண்மனை ஒரு மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளதால் ‘ஆகாய வீடு’ எனும் பொருள் தரும்படியான ஆஸ்மன் கர் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை தற்போது தொல்லியல் அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமாக இயங்குகிறது.
இந்த அரண்மனை வளாகத்திலேயே செயிண்ட் ஜோசப் பள்ளியும் அமைந்துள்ளது. ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் பிரதானியாக இருந்த சர் ஆஸ்மன் என்பவர் இந்த அரண்மனையை 1885ம் ஆண்டில் நிர்மாணித்துள்ளார்.
பைகா வம்சத்தை சேர்ந்த இவரது குடும்பத்தினருக்கான ஓய்வு மாளிகையாக இது கட்டப்பட்டிருக்கிறது. உயரமான பகுதியில் வானத்தை தரிசிக்கும்படியாக ஒரு கனவு மாளிகையை உருவாக்கும் நோக்கத்துடன் இவர் இந்த அரண்மனையை கட்டியதாக சொல்லப்படுகிறது.
அக்காலத்தில் பிரசித்தமாக இருந்த கட்டிடக்கலை அம்சங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஐரோப்பிய பாணி காத்திக் கட்டிடக்கலை அம்சங்களே அப்போது வரவேற்பில் இருந்ததால் இந்த ஆஸ்மன் கர் அரண்மனையும் அத்தகைய அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. இன்று இந்த அரண்மனை நம் கண்களுக்கு ஒரு புராதன ஐரோப்பிய கோட்டை போன்று தரிசனம் தருவது ஒரு வியக்கத்தக்க அம்சமாகும்.



Click it and Unblock the Notifications