ஹைதராபாத் நகரத்தில் பிர்லா பிளானட்டேரியத்துக்கு அருகிலேயே இந்த பிர்லா மந்திர் அமைந்துள்ளது. நௌபாத் பஹாட் எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஹிந்துக்களின் முக்கிய ஆன்மீகத்திருத்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது.
முக்கியமாக வெங்கடேஸ்வரா கடவுளை வணங்கும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விரும்பி வருகை தருகின்றனர். 10 வருட காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்தகோயில் ராமகிருஷ்ணா மிஷணை சேர்ந்த ஸ்வாமி ரங்கநாதானந்தாவால் திறக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிரத்யேக வரவழைக்கப்பட்ட வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருப்பது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். அமைதியுடன் கூடிய தியானச்சூழல் நிலவவேண்டும் என்பதற்காக ஆலயமணிகள் இல்லாமலே உருவாக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் மற்றொரு விசேஷமாகும்.
மூலவரான வெங்கடேஸ்வரர் மட்டுமல்லாமல் இதர கடவுள் சிலைகளும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிவன், விநாயகர், பிரம்மா, சாய்பாபா, ஷக்தி, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய கடவுள்களுக்கு தனித்தனி சன்னதிகள் பிர்லா மந்திர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயிலின் சுவர்ப்பகுதிகளில் குரு கோவிந்த் சிங் உள்ளிட்ட பல்வேறு ஞானிகளின் போதனைகள் பொறிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications