துர்கம் செருவு என்று அழைக்கப்படும் இந்த நன்னீர் ஏரி ஹைதராபாத் நகரத்துக்கு அருகில் ரங்கரெட்டி மாவட்டத்தில் உள்ளது. இது ரகசிய ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜுபிலி மலைகள் மற்றும் மாதப்பூர் மலைகளால் மறைக்கப்பட்டு அமைந்துள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
முற்காலத்தில் குதுப் ஷாஹி வம்சத்தினரின் ஆட்சியின்போது கோல்கொண்டா கோட்டைப்பகுதியில் வசித்த மக்களுக்கான நீராதாரமாக விளங்கியதால் குறிப்பிடத்தக்க வரலாற்றுப்பின்னணியையும் இது கொண்டுள்ளது.
விவசாய பாசனத்துக்கான நீராதாரமாகவும் இது பயன்பட்டு வந்திருக்கிறது. 2001ம் ஆண்டில் அரசாங்கம் இந்த ஏரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்ற முடிவு செய்தது.
அதன் பலனாக இந்த ஏரிப்பகுதி முக்கியத்துவம் பெற்றதுடன் மீன்பிடிக்கும் பொழுதுபோக்குக்கு உகந்த இடமாகவும் பிரசித்தி பெறத்துவங்கியது. சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியின் அடையாளங்களாக விளக்கு அலங்காரங்கள், பாறைப்பூங்கா, மிதக்கும் நீரூற்று, செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை இந்த ஏரிப்பகுதியின் காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் மலையேற்றம், பாறையேற்றம் மற்றும் கயிற்று இறக்கம் போன்ற சாகச பொழுதுபோக்குகளும் இந்த ஏரிப்பகுதியில் நிரம்பியுள்ளன.



Click it and Unblock the Notifications