ஹைதராபாத் நகரின் புறநகரில் அமைந்துள்ள இந்த ஹயாத் பக்ஷி பேகம் மசூதியானது ஹயாத் பக்ஷி மசூதி அல்லது ஹயாத்நகர் கிராண்ட் மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஹைதராபாத் நகரத்தில் வசிக்கும் முஸ்லிம் இனத்தார்க்கு முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். கோல்கொண்டா ராஜ்ஜியத்தில் ஐந்தாவது சுல்தானாகிய அப்துல்லா குதுப் ஷா என்பவரால் கட்டத்துவங்கப்பட்ட இது 1672ம் ஆண்டில் முடிக்கப்பட்டிருக்கிறது.
குதுப் ஷாவி வம்சத்தாரின் இதர கட்டுமானங்களைபோலவே இந்த மசூதியும் தனித்தன்மையான குதுப் ஷாஹி கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. தொழுகைக்கான புனிதத்தலமாக மட்டுமல்லாமல் நெடுந்தூரம் யாத்திரை மேற்கொண்டு வரும் யாத்ரீகர் ஓய்வெடுக்கக்கூடிய கட்டமைப்புகளும் இதில் காணப்படுகின்றன.
சராய் எனப்படும் பிரத்யேகமான யாத்ரீகர் ஓய்வுக்கூடம் இந்த வளாகத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐந்து அலங்கார விதான வளைவுகள், ஒரு சுவரலங்கார பட்டி மற்றும் பலகணித்தடுப்பு, இரண்டு குமிழ் கோபுரங்கள் மற்றும் ஒரு தொழுகைக்கூடம் ஆகியவை இந்த மசூதியில் இடம் பெற்றுள்ளன.
தொழுகைக்கூடமானது ஒரு உயரமான பீடத்தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. மசூதிக்கு அருகிலேயே கீழ்த்தளத்தில் உடல்சுத்திக்கான குளமும் அமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications